2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

18 நாடுகளுக்கு BPPL தயாரிப்புகள் ஏற்றுமதி

Gavitha   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்காசியாவின் பாரிய ஒருங்கிணைக்கப்பட்ட தூரிகை உற்பத்தி வசதிகளைக் கொண்ட இலங்கையின் தூரிகை மற்றும் இழை (Filament) ஏற்றுமதியாளரான BPPL –Beira Parawood Products Ltd. அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற சந்தைகளில் ஏற்கெனவே உயர்தர தூரிகை மற்றும் இழை வழங்குனராக பலமாக கால் பதித்துள்ளது. ஒரு குறித்த சந்தையில் செயற்படும் BPPL முன்னணி உலக வர்த்தக நாமங்களான Oates, Grainger மற்றும் Rubbermaid ஆகியவற்றின் விருப்பத்துக்குரிய வழங்குநராக திகழ்கின்றது.  

நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி. அனுஷ் அமரசிங்க கருத்து தெரிவிக்கையில், 'உறுதியான நெறிமுறை மற்றும் நிலைதகு உற்பத்தி முறைமை என்பவற்றின் பின்னணியில் BPPL ஆனது ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தினூடாக தூரிகை உருவாக்கத்தின் எல்லைகளை நோக்கி முன்னேறுகிறது. ஓர் நிறுவனமாக நாம் எப்போதும் எவ்வாறு விடயங்களை சிறப்பாகவும், பொறுப்புணர்வோடும் அர்த்தமுள்ளதாகவும் செய்து எமது வாடிக்கையாளருக்கு மட்டுமல்லாது நாட்டின் அறிவுத்தளத்திற்கும் பெறுமதி சேர்ப்பது தொடர்பாக சிந்திக்கின்றோம். BPPLக்காக நாம் பல இலட்சியத்  திட்டங்களை கொண்டுள்ளதோடு அவற்றை அடையும் பாதையில் பயணித்துக் கொண்டுள்ளோம்.

இலங்கையானது, அபிவிருத்தி நோக்கிப் பயணிக்கும் இவ்வேளையில் உள்ளூர் திறமைகளை உலகுக்கு வெளிப்படுத்தும் பெருமைதகு உள்ளூர் நிறுவனமாக எம்மை நிலைநாட்டுவதே எமது தேவை.' என்றார்.

நிறுவனத்தின் தொழிற்சாலையின் சொந்தமான மர ஆலை மற்றும் சூளை வசதிகள் மாதமொன்றுக்கு கிட்டத்தட்ட 11 மில்லியன் அலகுகளை உற்பத்தி செய்கின்றது. அதன் மீள்சுழற்சி ஆலை  Polyethylene Teraphthalate போத்தல் கழிவுகளை பிளாஸ்டிக் சிப் ஆக மாற்றிப் பின் அதனை தனது filament தொழிற்சாலை மூலமாக தூரிகைகளுக்கு இழையாக மாற்றுகிறது.

நிலையான உற்பத்தி அதன் உற்பத்தி செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் உட்பொதிந்துள்ளது. BPPL ஆனது  இயற்கை மூலப்பொருட்களான மரம் மற்றும் நார் போன்ற உள்நாட்டு உற்பத்திகளிலேயே கவனம் செலுத்துகிறது.

நிறுவனம், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூலம் அப்புறப்படுத்தப்படுகின்ற பிந்தைய தொழிற்துறை மற்றும் நுகர்வோர் PET தண்ணீர் போத்தல்களின் ஊடாக நார்களை உற்பத்தி செய்யும் தொழிநுட்பத்தில் முன்னோடியாக உள்ளது. இந்த நார் தூரிகை இழைகள் செய்யப் பயன்படுத்தப்படும் அதேவேளை கழிவுகளை இவ்வாறு புதிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் நிலநிரப்புதல்கள் தடுக்கப்படுகின்றன. வருடத்துக்கு சுமார் 900,000kg பிளாஸ்டிக் கழிவுகள் மீள்சுழற்சி செய்யப்பட்டு தூரிகைகளுக்கான இழைகள் மற்றும் தூரிகைகளுக்கான பிளாஸ்டிக் ஆதாரம் என்பன செய்யப்  பயன்படுகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X