2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

2016 பெயார்வே Galle Literary Festivalஇல் பங்குபற்றுவோர் விவரங்கள் வெளியீடு

A.P.Mathan   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருமளவு எதிர்பார்ப்புகள் நிறைந்த 2016 ஃபெயார்வே Galle Literary Festival நிகழ்வு தொடர்ச்சியாக ஏழாவது ஆண்டாக தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு எதிர்வரும் ஜனவர் மாதம் ஆரம்பமாகவுள்ளது. ஜனவரி 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கண்டி நகரிலும், 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை காலியிலும், 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்திலும் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இந்த நிகழ்வில் உலகளாவிய ரீதியில் இலக்கியத்துறையில் பெயர் பெற்ற பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுக்கான டிக்கட்கள் விற்பனைகள் டிசம்பர் மாதம் முதல் wow.lk இலும் கொழும்பு, காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாண பிரதேசங்களில் நிறுவப்படவுள்ள விற்பனை கூடங்களிலும் விற்பனை செய்யப்படவுள்ளன. 

2016 ஃபெயார்வே Galle Literary Festival நிகழ்வில் செபாஸ்டியன் ஃபோல்க்ஸ், மீரா சியால், ஹியு தொம்சன், சொனாலி தெரணியகல மற்றும் மோனா அர்ஷி போன்ற புகழ்பெற்ற சர்வதேச எழுத்தாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்நிகழ்வில் கவிதைத்துறையில் புகழ்பெற்றவர்களான 2015 புலிட்சர் விருதை வென்ற கவிஞரான கிரெகரி பர்டியோ மற்றும் நியுயோர்க் டைம்ஸ் சிறந்த விற்பனையாளரும், ஃபோர்வர்ட் பரிசு பெற்றவருமான க்ளவுடியா ரான்கின் மற்றும் சிறுவர்களுக்கான கவிதை எழுத்தாளரான அன்டி ஸ்டான்டன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர். வரலாற்று காவியங்களை எழுதி புகழ்பெற்றவர்களான டொம் ஹொல்லன்ட் மற்றும் மார்க் டுலி ஆகியோரும் இவர்களுடன் இணைந்து கொள்ளவுள்ளனர். பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் Goethe Institute ஆகியன இந்நிகழ்வுடன் பங்காளர்களாக இணைந்து கொள்ளவுள்ளதுடன், புகழ்பெற்ற விஞ்ஞான எழுத்தாளரான கெனன் மலிக்கையும் இந்நிகழ்வுக்காக அழைத்து வரவுள்ளது. இவருடன் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற குற்றவியல் நாவல் எழுத்தாளரான அன்ட்ரியா மரியா ஸ்கென்கெலும் பங்கேற்கவுள்ளார்.

மேலும், இந்நிகழ்வில், ஆசியா பிராந்தியத்தின் பெருமளவான எழுத்தாளர்களும் பங்கேற்கவுள்ளனர். இதில், அனுராதா ரோய், ஜுட் தயில், பேராசிரியர். சையிட் இஸ்லாம், சமத் சுப்பிரமணியம் மற்றும் மலேசிய மற்றும் அவுஸ்திரேலிய பாடகர், கவிஞர் மற்றும் முதல் தடவை எழுத்தாளருமான ஒமர் முஸாவும் பங்கேற்கவுள்ளனர்.
 
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, 2012 இல் பொதுநலவாய பரிசு பெற்றவரும் DSC பரிசை வென்றவருமான ஷெஹான் கருணாதிலக மற்றும் இலங்கையின் கவிஞரான ஆரியனவன்ஸ ரணவீர மற்றும் இன்றைய கால கட்டத்தில் சிங்கள பிரசுரங்களை பெருமளவில் வெளியிடும் எழுத்தாளரான ஜயதிலக கம்மல்லவீர ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். பங்கு பற்றுவோரின் முழு விவரங்களை இன்று முதல் www.galleliteraryfestival.com எனும் இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

இந்த நிகழ்வு ஏனைய கலைத்துறைகளுடனும் கைகோர்த்துள்ளதுடன், 2016 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள நிகழ்வில் வௌ;வேறு கலைஞர்கள், திறமைசாலிகள், நடிகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் ஆகியோரையும் பங்குபற்றச் செய்யவுள்ளது. பிரித்தானியாவின் ரோயல் நாட்டியக் கலை அக்கடமியின் பிரபலமான thespian Fiona Shawவும் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளார். இவருடன், திரைப்பட தயாரிப்பாளரான விசாகேச சந்திரசேரமும், வயலின் வித்துவான் லக்ஷ்மன் ஜோசப் டி சேரம் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்

நாடகம், கலை மற்றும் இசை ஆகியவற்றுக்கு மேலாக, கட்டடக் கலையம்சங்களும் அவை தொடர்பான சுற்றுலாக்களுக்கும் இந்நிகழ்வில் முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்வின் போது மூன்று கண்காட்சிகள் இடம்பெறவுள்ளன. பார்வையாளர்களுக்கு இனிய அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் கோட்டை பகுதியைச் சூழ்ந்த வௌ;வேறு இடங்களில் இந்த கண்காட்சிகள் இடம்பெறவுள்ளன.

2016 ஃபெயார்வே Galle Literary Festival நிகழ்வு உணவுக்கும் முக்கியத்துவத்தை வழங்கவுள்ளது. இத்தாலியின் புகழ்பெற்ற சமையல் நிபுணரான அல்மோ பிபோலொட்டி, நியுயோர்க் நகரின் புகழ்பெற்ற நிபுணத்துவம் பெற்ற சார்ள்ஸ் திசாநாயக்க மற்றும் மீரா சோதா ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். பிரித்தானியாவின் முதல் 10 விற்பனை தரப்படுத்தல்களில் ஒன்றாக தெரிவாகிய  'Made in India: Cooked in Britain: Recipes from an Indian Family Kitchen' இடம்பெறவுள்ளது. 2016ஆம் ஆண்டுக்குரிய முழுமையான நிகழ்ச்சி நிரல் நவம்பர் மாதம் இறுதி முதல் www.galleliteraryfestival.com எனும் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும். 

இந்நிகழ்வின் ஸ்தாபகரான ஜெஃப்ரி டொப்ஸ் கருத்து தெரிவிக்கையில், 'இன்று நாம் வெளியிட்டுள்ள பங்குபற்றுவோரின் விவரங்களின் ஊடாக, Galle Lit Fest நிகழ்வு மீண்டும் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக இடம்பெறவுள்ளதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. ஆசியாவின் கலாசார நாட்காட்டியில் நாம் இடம்பெறாத காலப்பகுதி பெருமளவானோரின் கவனத்தை ஈர்க்கவில்லை என்பதுடன், பலர் மீண்டும் எப்போது இந்நிகழ்வு மீண்டும் இடம்பெறும் என ஆர்வத்துடன் கோரியிருந்தனர். தற்போது எமது நிகழ்வு மீண்டும் இடம்பெறுகிறது என்று மட்டும் தெரிவிக்காமல், எமது நிகழ்வுடன் பெருமளவான முக்கிய பிரமுகர்களும் இணைந்துள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்ள முடியும்' என்றார்.

இந்நிகழ்வை கோலாகலமாக ஏற்பாடு செய்வதற்கு நிகழ்வுடன் கைகோர்த்துள்ள பங்காளர்களின் பங்களிப்பும் முக்கியத்துவம் பெறுகின்றது. குறிப்பாக நிகழ்வின் பிரதான அனுசரணையை வழங்க ஃபெயார்வே ஹோல்டிங்ஸ் முன்வந்துள்ளது. பிளாட்டினம் பங்காளராக தேசிய விமான சேவை வழங்குநர் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் இணைந்துள்ளது. விருந்தோம்பல் பங்காளராக ஜெட்விங் லைட்ஹவுஸ் இணைந்துள்ளதுடன், நிகழ்வின் தங்க அனுசரணையாளர்களாக லான்ட் ரோவர், கொலம்போ ஜுவல்லரி ஸ்ரோர்ஸ், டயலொக், MAS ஹோல்டிங்ஸ், த எலிசியம் கலெக்ஷன், தப்ரோபேன் கலெக்ஷன் மற்றும் அமெரிக்க தூதுவராலயம் ஆகியன இணைந்துள்ளன. நிகழ்வில் வெள்ளி அனுசரணையாளர்களான அமன்கல்ல, பிரிட்டிஷ் கவுன்சில், அனிம்8, கோல் ஃபேஸ் ஹோட்டல், அவுல் அன்ட் த புசிகெட் மற்றும் DSC பிரைஸ் இணைந்துள்ளன. 

ஃபெயார்வே ஹோல்டிங்ஸ் தலைவர் ஹேமக டி அல்விஸ் கருத்து தெரிவிக்கையில், 'இந்த விசேட நிகழ்வுடன் கைகோர்த்துள்ளதன் மூலமாக, இலங்கையில் கலை மற்றும் கலாசாரத்தை மேம்படுத்த பங்களிப்பு வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம். நாடொன்று எனும் வகையில் சமாதானம் மற்றும் சுபீட்சம் என்பனவற்றில் மட்டும் தங்கியிருப்பது என்பது பொருத்தமானதாக அமையாது. அதன் மக்கள் கலாசார மட்டத்தில் தமது பாரம்பரியம் தொடர்பில் பெருமை கொள்ளக்கூடியவர்களாக இருக்க வேண்டியதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. நாம் பங்களிப்பு வழங்கும் பெருமளவான செயற்பாடுகள் இலங்கையர்கள் மத்தியில் கலை உணர்வை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. ஃபெயார்வே தேசிய சாகித்திய விருது என்பது இந்த செயற்பாடுகளில் மற்றுமொரு அங்கமாக அமைந்துள்ளது' என்றார்.  

இம்முறை இடம்பெறவுள்ள 2016 Galle Literary Festival நிகழ்வின் மற்றுமொரு விசேட அம்சமாக, முதன் முறையாக கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் மினி, வார இறுதி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதில் சர்வதேச எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் பங்கேற்கவுள்ளனர். இவர்கள் நாடு முழுவதும் நிகழ்வை பிரபல்யப்படுத்துவதற்கு தமது பங்களிப்பை வழங்குவார்கள். இந்நிகழ்வில் புதிய அம்சமாக audio visual செயற்பாடொன்றும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. என பெயரிடப்பட்டுள்ள 'Thinking Out Loud Series' இந்நிகழ்வில் பார்வையாளர்களுக்கும் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், செயற்பாடுகள் மற்றும் சிந்தனையாளர்கள் ஆகியோர் மத்தியில் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். அத்துடன், கலை அம்சங்களுக்கு அப்பாற்பட்ட விடயங்களான நாடகம், திரைப்படம், கட்டடக்கலை மற்றும் ஓவியக் கலை அம்சங்கள் போன்றன உள்ளடக்கப்படவுள்ளன.  

இதேவேளை, இந்தக் கொண்டாட்டத்தின் சென்றடைவு என்பது, Serendipity Trust உடனான பங்காண்மையின் மூலமாக மேலும் உறுதி செய்யப்படவுள்ளது. இதன் மூலமாக, காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாண நகரங்களில் MAS ஹோல்டிங்ஸ் பங்காண்மையுடன் சமூகங்களை சென்றடையும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதில் காலி சிறுவர்கள் கொண்டாட்டம், கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தில் GLF பாடசாலைகள் தின நிகழ்வுகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் போன்றன முன்னெடுக்கப்படவுள்ளன. இந்நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சலுகை கட்டண முறையில் டிக்கட்கள் வழங்கப்படவுள்ளன. வடக்கு-தெற்கு பல்கலைக்கழக ஒன்றிணைவு நிகழ்ச்சியும் 3ஆவது ஆண்டாக நடைபெறவுள்ளது. இதற்கான அனுசரணையை அமெரிக்க தூதுவராலயம் வழங்கவுள்ளது. 

மேலதிகமாக, 2016 நிகழ்வில், இரு முக்கியத்துவம் வாய்ந்த இலக்கிய விருதுகள் வழங்கல் இடம்பெறவுள்ளது. இதில் புதிதாக வழங்கப்படும் Fairway National Literary Award (FNLA) kw;Wk; DSC Prize for South Asian Literature ஆகியன அடங்கியுள்ளன. இந்த புதிய அறிமுகம் இலங்கையின் இலக்கியத்துறைக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் வகையில் அமைந்திருக்கும். இந்த நிகழ்வில் Fairway National Literary Award (FNLA) வழங்கப்படும் பட்சத்தில், உள்நாட்டு இலக்கிய கொண்டாட்ட நிகழ்வொன்றில் வழங்கப்பட்ட மாபெரும் பெறுமதி வாய்ந்த விருதாக அமைந்திருக்கும். இந்த நிகழ்வைத் தொடர்ந்து இலங்கையின் இலக்கியத்துறையை கௌரவிக்கும் வகையில் Fairway Celebration of Sri Lanka தொடர் இடம்பெறும். DSC Prize for South Asian Literature விருதின் மூலமாக 50000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பரிசு தெரிவு செய்யப்படும் வெற்றியாளருக்கு வழங்கப்படும். இந்த விருதுக்காக தெரிவு செய்யப்படவுள்ளவர்கள் வரிசையில் மினொலி சல்காடோ மற்றும் அனுசராதா ரோய் போன்ற தெற்காசிய திறமைசாலிகளின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X