2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

25 முன்னணி கம்பனிகளில் கொமர்ஷல் வங்கிக்கு இரண்டாம் இடம்

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் 2014-15 ஆண்டு காலப் பகுதியில் பிஸ்னஸ் டுடே சஞ்சிகையால் வரிசைப்படுத்தப்பட்ட 25 முன்னணி கம்பனிகள் வரிசையில் கொமர்ஷல் வங்கிக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டுள்ளது. நிதிச் செயற்பாடுகளின் அடிப்படையில் இந்தத் தெரிவு இடம் பெற்றுள்ளது.

இலங்கையின் மிகப் பெரிய தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கி பிஸ்னஸ் டுடே சஞ்சிகையின் தர வரிசையில் எட்டாவது வருடமாக முதல் ஐந்து இடங்களுக்குள் வந்துள்ளது. மேலும் இந்த கீர்த்திமிக்க தர வரிசையில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக இரண்டாவது இடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பங்குகள் மீதான வருமானம், வருமானப் புரழ்வு, வரிக்குப் பிந்திய இலாபம், பங்கிலாபத்தின் மீதான வருமானம், தனி ஒரு பங்கிற்கான வருமானம், சந்தை மூலதனமயமாக்கல் மற்றும் பெறுமதிச் சேர்க்கை என்பனவே நிதிச் செயற்பாடுகள் மூலம் கவனம் செலுத்தப்பட்ட விடயங்களாகும். ஒரே சீராக இந்தப் பெறுமானங்கள் கணிக்கப்பட்டு கம்பனிகளின் நிலை தீர்மானிக்கப்பட்டது.

பிஸ்னஸ் டுடேயின் 2014-15 ஆண்டுக்கான 25 முன்னணி கம்பனிகளின் தெரிவில் இலங்கையின் பன்முகத் தன்மை கொண்ட கூட்டாண்மை கம்பனிகள், பல்தேசியக் கம்பனிகள் மற்றும் நிதி நிறுவனங்களை பின் தள்ளிவிட்டு கொமர்ஷல் வங்கி சௌகரியமாக தனது இடத்தை தக்க வைத்துள்ளது.

இந்த அண்மைய தெரிவுக்காக மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆண்டில் கொமர்ஷல் வங்கி 11.180 பில்லியன் ரூபாவை தேறிய இலாபமாகப் பெற்றுள்ளது. வரிக்கு முந்திய இலாபம் 15.736 பில்லியன் ரூபாவாகும். 2014 டிசம்பர் 31ல் மொத்த சொத்துக்களின் பெறுமதி 795.6 பில்லியன்களாகும். வங்கியின் தேறிய சொத்தில் பங்கொன்றுக்கான பெறுமதி 81.44 ரூபாவாகும். குறிப்பிட்ட காலப்பகுதியில் பங்கொன்றின் மூலமான வருமானம் 12.94 ரூபாவாகும்.

'இந்த தரவரிசையை நாம் பெறுமதி மிக்கதாக மதிக்கின்றோம். ஏனெனில் இது அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படவில்லை. மாறாக செயற்பாட்டைக் கொண்டே தீர்மானிக்கப்பட்டது. இது எமது தொழிற்சார் தன்மைக்கான ஒரு மரியாதையாகும். மேலும் இது கொமர்ஷல் வங்கியின் ஒட்டுமொத்த அணிக்கும் கிடைத்துள்ள கௌரவம்' என்று கூறினார் வங்கியின் பிரதான செயற்பாட்டு அதிகாரியும் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான எஸ்.ரெங்கநாதன். 'இத்தகைய தர வரிசைப் படுத்தலானது கம்பனிகளுக்கான ஒரு பெறுமதிமிக்க திறனளவாக அமையும். பல்வகை தன்மை கொண்ட வர்த்தக துறையில் கம்பனிகள் தமது செயற்பாடுகளையும் அதேபோல் ஏனைய நிறுவனங்களின் செயற்பாடுகளையும் இதன் மூலம் மதிப்பிட முடியும்' என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X