Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹோட்டல், ஹொஸ்பிட்டலிட்டி அன்ட் ஃபூட் ஏசியா, MP இன்டர்நெஷனல் நிறுவனத்தினால் மூன்றாவது தடவையாக நடாத்தப்படும் உணவு, ஹோட்டல் வழங்குனர்கள் மற்றும் சேவைகள் கண்காட்சியானது 2015 ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இலங்கை, கொழும்பிலுள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் (SLECC) நடைபெறவுள்ளது.
மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்ற ஹோட்டல், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா தொழில்துறைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரத்தியேகமான தொழில்சார் வர்த்தக மன்றமாக ஹோட்டல், ஹொஸ்பிட்டலிட்டி அன்ட் ஃபூட் ஏசியா (HHF) திகழ்கின்றது. அத்துடன், தென்னாசிய பிராந்தியத்தில் உள்ள முன்னணி நிறுவனங்கள் மற்றும் துறைசார் தொழில்வாண்மையாளர்களின் ஆதரவையும் இது பெற்றுக் கொள்கின்றது.
எம்.பி. இவன்ட்ஸ் லங்கா நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் HHF Asia கண்காட்சியானது, ஹோட்டல், விருந்தோம்பல் மற்றும் உணவுத் துறையின் பல்வேறு உப பிரிவுகளைச் சேர்ந்த காட்சிப்படுத்துனர்களை ஒன்றாக ஓரிடத்திற்கு கொண்டுவரும். இவ்வருட காட்சிப்படுத்துனர்களுள் - கட்டிடக்கலை, வடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி, பேக்கரி உபகரணங்கள், சலவை மற்றும் தூய்மையாக்கல், ஃபேர்னிசிங், நிலத்தோற்ற வடிவமைப்பு, ITC, விளையாட்டுக்கள் மற்றும் துணிகர முயற்சி, பயிற்சியளித்தல், மின்சாரம் மற்றும் இலத்திரனியல் மற்றும் மேலும் பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் உள்ளடங்கும்.
இந்நிகழ்வுக்கு இலங்கை மாநாட்டு பணியகம் (SLCB), தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் (NCE), இலங்கை தொழில்சார் மாநாட்டு ஒன்றியம், கண்காட்சி மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் (SLAPCEO), இலங்கை தேசிய ஹோட்டல் உரிமையாளர்கள் ஒன்றியம் (THASL), அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், இலங்கை பசுமை கட்டிடங்கள் மன்றம் (SLGBC), சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கான ஒன்றியம் (ASMET) போன்றவை ஒப்புதல் ஒத்துழைப்பை வழங்குகின்றன.
இம்முறை நடைபெறும் நிகழ்வும் கூட, இன்று வளர்ச்சியடைந்து செல்லும் துறையின்; தேவைப்பாடுகளுக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சிப் பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள் ஊடாக அறிவை கட்டியெழுப்புதல் மற்றும் பெறுமதி சேர்த்தல் ஆகியவற்றில் கூடிய கவனம் செலுத்துவதாக காணப்படும். இதேவேளை பசுமை கட்டிடங்கள், விருந்தோம்பல் துறையில் தலைமைத்துவம், டிஜிட்டல் சந்தைப்படுத்தல் போன்ற விடயங்களிலான கருத்தரங்குகளும், 'The Colombo Tea & Herb Tour' சுற்றுப்பயணமும் திட்டமிடப்பட்டிருக்கும் ஏனைய சில மேலதிக நிகழ்வுகள் ஆகும்.
அஸ்பயர் இன்டர்நெஷனல் திறன் அபிவிருத்தி கல்வியகத்தினால் நடாத்தப்படும், 'விருந்தோம்பல் எல்லைகளுக்கு அப்பாலான ஒரு தலைவன்' என்ற தலைப்பிலான கருத்தரங்கு ஒக்டோபர் 16ஆம் திகதி முற்பகல் 11.30 இற்கு இடம்பெறும். அதேநேரத்தில் 'விருந்தோம்பல் துறைக்காக டிஜிட்டல் எளிமையான சந்தைப்படுத்தல்' என்பது திட்டமிடப்பட்டுள்ள மற்றுமொரு கருத்தரங்காகும். INFOLOGIX இனால் ஏற்பாடு செய்யப்படும் இந்த கருத்தரங்கு ஒக்டோபர் 17ஆம் திகதி முற்பகல் 10.30 தொடக்கம் 11.30 வரை இடம்பெறவுள்ளது.
இலங்கை பசுமை கட்டிடங்கள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 'GBCSL உடன் இணைந்து பசுமையை கட்டியெழுப்புங்கள்' எனும் கருத்தரங்கு ஒக்டோபர் 18ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 10 மணி தொடக்கம் பிற்பகல் 3.30 வரை இடம்பெறும் அதேவேளை, டீ அன்ட் ஹேர்ப் கம்பனியானது கண்காட்சி நடைபெறும் மூன்று தினங்களிலும் 'the Colombo tea & Herb tour' என்ற தொனிப் பொருளில் பயிற்சிப் பட்டறைகளை நடாத்தவுள்ளது.
'கடந்த பல வருடங்களாக ஹோட்டல், விருந்தோம்பல் மற்றும் உணவு ஆசியா (HHF) கண்காட்சியானது இலங்கையில் தம்மளவில் மிகவும் ஆதாரமூலமான தளமேடையாக நிலைபெற்றிருக்கின்றது. அதுமட்டுமன்றி, இலங்கையில் நடைபெறும் சர்வதேச 'வணிகத்திலிருந்து – வணிகத்திற்கு' அடிப்படையிலமைந்த முன்னணி விருந்தோம்பல் மற்றும் உணவு வணிக கண்;காட்சியாகவும் வளர்ச்சியடைந்திருக்கின்றது. இதற்கு முன்னர் இடம்பெற்ற கண்காட்சிகளின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இவ்வருட கண்காட்சி இடம்பெறவுள்ளது. கண்காட்சியை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கான ஊக்குவிப்பு பிரசாரமானது இலங்கையிலும் தென்னாசிய பிராந்தியத்திலும் உள்ள ஹோட்டல்கள், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா செயற்றிட்டங்களில் ஈடுபட்டிருக்கும் தொழில்வாண்மையாளர்களை இலக்காகக் கொண்டதாக இருக்கும்' என்று எம்.பி. இவன்ட்ஸ் லங்கா (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளரான எமில் குணசேகர தெரிவித்தார். 'பொருளாதார மற்றும் வர்த்தக செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையின் சுற்றுலாத்துறை மீது உலகம் பிரத்தியேக கவனத்தை செலுத்தியுள்ள அதேவேளை, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதற்கும் முக்கிய பங்காற்றி இருக்கின்றது. பிராந்திய வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வான்வழி கேந்திர மையமாக கொழும்பு மாற்றமடைந்து கொண்டிருப்பதுடன், இவ்வாறான ஒரு துறைசார் நிகழ்வுக்கு மிகவும் உள்ளார்ந்தமான தெரிவாக இலங்கை காணப்படுகின்றது' என்றும் அவர் குறிப்பிட்டார்.
இத்துறையிலுள்ள அனைத்து உப பிரிவுகளையும் உள்ளடக்கும் விதத்தில் பரந்தளவான காட்சிக்கூடங்கள், முக்கிய துறைசார் தொழில்வாண்மையாளர்கள் மற்றும் பெருமளவான செயற்பாடுகளைக் கொண்ட HHF Asia 2015 கண்காட்சியானது தமக்கிடையே வலைப்பின்னலை உருவாக்கிக் கொள்ளவும், புதிய பங்காளித்துவங்கள் மற்றும் வேறுபட்ட துறைகளுக்கு இடையிலான கூட்டிணைவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் ஒரு ஆரம்பத் தளமாக அமையும். கண்காட்சியை பார்iவிட வருவோரில் - ஹோட்டல் மற்றும் உல்லாச விடுதி உரிமையாளர்கள், பொது முகாமையாளர்கள், விருந்தளிப்பு முகாமையாளர்கள், நிறைவேற்றுதர சமையற் கலைஞர்கள், துறைசார் இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள், உணவுச் சேவை மற்றும் விருந்தோம்பல் ஆலோசகர்கள், ஹோட்டல் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட மேலும் பல தரப்பினர் உள்ளடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
காட்சிப்படுத்துனர்கள், கண்காட்சியின் சிறப்பம்சங்கள், சமையற்கலை சார்ந்த வசீகரங்கள், பார்வையிட வருகைதருவோர் பதிவு, அங்குரார்ப்பண நிகழ்வு, அதிமுக்கிய பிரமுகர்களின் வருகை, அனுசரணை மற்றும ஊடக செயற்பாடுகள் தொடர்பான விபரங்களை பெற்றுக் கொள்ள HHF Asiaவின் www.hhf-srilanka.com என்ற இணைத்தளத்தை பார்வையிடுங்கள்.
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago