2025 மே 17, சனிக்கிழமை

1,000 பாடசாலைகளுக்கு இலவச தொலைதூர கற்றல் தீர்வுகள்

Editorial   / 2020 ஜூன் 10 , பி.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, Huawei, Simsyn ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, கல்வி அமைச்சால்  தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்குத் தொலைத்தொடர்புத் தீர்வுகளை வழங்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது.  

2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட நெனச 1377 தொலைதூர கல்வி முயற்சியின் விரிவாக்கமாக, இது அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் -19 நெருக்கடியான காலத்தில், ஏனைய கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் கற்றல் செயற்பாடுகளுக்கு மாறாக, இந்த நெனச கற்கை நெறியானது, அனைத்து வலையமைப்பிலும் இலவசமாக அணுகக்கூடியதாகக் காணப்படுவதுடன் இணையத் தீர்வுகள் இன்றி, மாணவர்கள் தங்களுடைய பாடங்களைத் தொடர முடியாத சூழ்நிலையிலிருந்து விடுபட்டு, அனைவரும் தங்களுடைய பாடங்களைத் தொடர்வதற்கான வாய்ப்பை அளிக்கின்றது.

இந்த விசேட தீர்வானது, நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் இருந்தும் classroom conference sessions மூலம் மாணவர்கள் தங்களுடைய ஆசிரியர்களுடன் எந்தவொரு சாதனம், வலையமைப்பின் ஊடாகவும் எவ்விதமான கட்டணங்களும் இன்றி இணைந்து கொள்வதற்கான தொலைதூரக் கற்றல் வசதியை வழங்குகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .