2025 மே 17, சனிக்கிழமை

123 வருட பூர்த்தியில் பவர்ஸ்

Editorial   / 2020 ஜூன் 09 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பவர்ஸ்' எனப் பொதுவாக அழைக்கப்படும் ஏ. பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட் (ABC), தனது 123 வருடப் பூர்த்தியை, இந்த ஆண்டு கொண்டாடுகின்றது. 'ABC for Life' எனும் கூட்டாண்மைத் தொனிப்பொருளின் பிரகாரம், இந்த ஆண்டு 123 ஆம் வருடமாக அமைந்து ள்ளமையால், மிகவும் முக்கியத்துவம் பெறுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்ச்சியாகப் புத்தாக்கங்களை அறிமுகம் செய்கின்றமைக்காக, நிறுவனம் மிகவும் புகழ்பெற்றுள்ளது. 1901ஆம் ஆண்டில் தொழிற்றுறைசார் ரயில் இரும்புப் பாதையை முதன் முறையாக கட்டியெழுப்பியதுடன், தனது வாடிக்கையாளர்களுக்கும் அதே ஆண்டில், விஞ்ஞான ரீதியான ஆலோசனைகளை முதன்முறையாக வழங்கியது. 1919ஆம் ஆண்டில், முதலாவது விவசாய டிராக்டரை ஈடுபடுத்தி இருந்ததுடன், 1941 இல், அதிர்வுகளைத் தாங்கிக் கொள்ளக்கூடிய கட்டடமும் கட்டப்பட்டது. இன்றுவரை நிறுவனத்தின் தலைமை அலுவலகமாக இக்கட்டடம் இயங்கி வருகின்றது.

தொடர்ச்சியாக நாட்டுக்குள் சிறந்த பதிவுகளையும் விநியோக வலையமைப்பையும் கொண்டுள்ளதுடன், தனது செயற்பாடுகளில் அறவியல், சமூக பொறுப்புணர்வை உள்வாங்கி, உள்ளார்ந்தமானதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியமான சந்தைப்படுத்தல் ஆற்றல்களையும் கொண்டுள்ளது. 'பவர்ஸ்' நாமம் நம்பிக்கை, தங்கியிருக்கும் தன்மை, தரம், புத்தாக்கம் ஆகியவற்றுக்காக அறியப்படுவதுடன், இவை அனைத்தும் நன்கு வேரூன்றி,  நிறுவனத்தின் மூலோபாயச் சிந்தனை, அணுகுமுறை, கொடுக்கல் வாங்கல் நடவடிக்ககைகளில் பிரதிபலிக்கின்றது.

நெறிமுறை, இணக்கமான விதிமுறைகளைப் பின்பற்றிச் செயலாற்றுவதிலும் 'பவர்ஸ்' அதிகளவு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளதுடன், நிறுவனத்தின் பல்வேறு நியமங்கள், செயன்முறைகளில் இவை சிறப்பாகப் பிரதிபலிக்கின்றன. இவற்றில் பல ISO சான்றிதழ்கள், அங்கிகாரங்கள், செயன்முறைகள் போன்றன அடங்குகின்றன. இலங்கைச் சுங்கத்தின் தங்க அட்டையைப் பெற்ற அங்கத்தவர் என்பதுடன், இதனூடாகப் பல ஆண்டு காலமாக, 'பவர்ஸ்' பேணி வரும் நம்பிக்கை, உறுதிப்பாடு போன்றன பேணப்பட்டுள்ளன.

'பவர்ஸ்' ஏராளமான சமூகப் பொறுப்புணர்வு நிகழ்ச்சி நிரல்களில் ஈடுபட்டு வருகின்றது. செவிப்புலன் குறைபாட்டைக் கொண்ட சிறுவர்களுக்கான பாடசாலையின் பிரதான நன்கொடையாளராகத் திகழ்வதுடன், குறித்த இளம் மாணவர்களுக்குத் தமது இளமைப் பராயத்தை இலகுவாகவும் சௌகரியமாகவும் ஊக்கமாகவும் கழித்திட வலுவூட்டுகின்றது. பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு தனது ஆறு மாதகாலத் தொழிற்பயிற்சியினூடாக, அறிவையும் ஆற்றலையும் வழங்குகின்றது. இவ்வாறான பயிற்சியைப் பூர்த்தி செய்தவர்களில் சிலரைத் தமது நிறுவனத்தில் பணியிலும் இணைத்துக் கொண்டுள்ளது.

நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளில், பாடசாலைகளுக்கான தளபாடத் திட்டம், உள்கட்டமைப்பு மேம்பட்ட தூணாக அமைந்துள்ளது. இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல், 25 மாவட்டங்களையும் சேர்ந்த 380க்கும் அதிகமான பாடசாலைகளுக்கும் 280க்கும் அதிகமான சமய வழிபாட்டுத் தலங்கள் அடங்கலான அமைப்புகளுக்கும் தளபாடங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்தத் தளபாடங்கள், சுவிட்சர்லாந்தின் உயர் நியமங்களின் பிரகாரம் உற்பத்தி செய்யப்பட்டவையாகும். இதற்காக, மாதாந்தம் சராசரியாக 210 முழுமையான 40 அடி நீளமான கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .