2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

ஜனசக்தி மூலம் சினமன் பே ஹோட்டலில் நடைபெற்ற சிறந்த கழக அங்கத்தவர்களுக்கான வார இறுதி நிகழ்வு

A.P.Mathan   / 2013 மார்ச் 06 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனசக்தி நிறுவனத்தின் கௌரவக் கழகத்தைச் சேர்ந்த சிறப்பாக செயலாற்றிய சிறந்த 100 ஆயுள் மற்றும் பொது விற்பனை தொழில் நிபுணர்கள் தங்களது வருடாந்த வார இறுதியை கொண்டாடுவதற்கு ஏற்ற வகையில் ஜனசக்தி மூலம் பேருவளையில் அமைந்துள்ள சினமன் பே ஹோட்டலில் நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விரண்டு நாள் வேலைத்திட்டத்தில் நிறுவனத்தின் பல மூத்த அதிகாரிகளின் பங்கேற்றலுடன், கழக உறுப்பினர்களுக்கு கண்கவர் இரவு பொழுதுபோக்குகள் மற்றும் குழுச் செயற்றிட்டங்கள் போன்ற பல திட்டங்கள் நடைபெற்றன. 

'ஜனசக்தி நிறுவனத்தின் வணிக வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் உந்துசக்தியாக எமது விற்பனை நிர்வாகப் படையில் 4000 பலம் மிக்க நிபுணர்கள் காணப்படுகின்றனர். அவர்களே எம் பலம்;. எமது வாடிக்கையாளர்களின் வியாபாரம் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களை காப்பதற்கு தொழில்முறை இடர் முகாமைத்துவ அறிவுரைகளை வழங்கும் எமது விற்பனை தொழில் நிபுணர்கள் குறித்து நாம் விசேட அக்கறை செலுத்தி வருகிறோம். அவர்கள் எமது முக்கிய வர்த்தகநாம எளிமை மற்றும் ஆளுமை, அரவணைப்பு, நட்பு மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்புபவர்களாக உள்ளனர்' என ஜனசக்தி நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் தெரிவித்தார்.

ஜனசக்தி நிறுவனத்தின் மூலம் முற்கூட்டியே தீர்மானம் செய்யப்பட்ட படி, ஆண்டுதோறும் கடுமையான செயல்திறன் அடிப்படையில் பொது மற்றும் ஆயுள் காப்புறுதி பிரிவைச் சேர்ந்த சிறந்த 100 விற்பனை நிபுணர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். வியாபாரத்தின் வளர்ச்சி, வியாபாரத்தின் தரம், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளும் உயர் விகிதம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி போன்றவற்றின் அடிப்படையில் நிபுணர்கள் தெரிவு செய்யப்படுவர். கழக அங்கத்துவத்தில் மூன்று வரிசைகள் காணப்படுவதுடன், நிறுவனத்தின் மிகச் சிறந்தவர்களுக்கு மாத்திரம் அங்கத்தவ உரிமை வழங்கும் தலைவர்கள் கழகம் (Chairman's Club) முதல் வரிசையாகும். இரண்டாவது மற்றும் மூன்றாவது கழகங்களாக முறையே நிர்வாக பணிப்பாளர் கழகம் மற்றும் பணிப்பாளர் கழகம் போன்றன அமைந்துள்ளன. ஆண்டுதோறும் தலைவர்கள் கழக அங்கத்தவர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு அனுப்பப்படுவர். மேலும் அனைத்து கழக அங்கத்தவர்களுக்கும் கவர்ச்சிகரமான அங்கத்துவ பண சலுகைகள், இலவச குடும்ப மருத்துவ காப்பீடு, குடியிருப்பு பயிற்சிஃவெளி போன்ற இலவச சலுகைகள் பல வழங்கப்படுகின்றன.

ஜனசக்தி நிறுவனமானது இலங்கையில் பட்டியலிடப்பட்ட காப்புறுதி நிறுவனங்களிடையே 1.49 பில்லியன் உயர் மூலதனத்தை கொண்டுள்ளதும், ஆண்டுதோறும் மனித மூலதன அபிவிருத்தி பணிகளுக்காக 60 மில்லியன் ரூபாய்களை செலவிடுகின்ற நிலையானதும், இலாபகரமானதுமான காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாகும்.

வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு சிறப்பான தீர்வுகளை வழங்குவதற்கு ஏற்ற வகையில் அனைத்து மட்ட பணியாளர்களுக்கும் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியிலான பயிற்சிகள் கட்டாயம் அவசியம் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். நாம் எமது ஊழியர்களின் செயல்திறனை விரிவாக்க அனைத்து வகையிலும் ஊக்கமளிக்கும் அதேவேளை, அவர்களின் இதர பொழுதுபோக்கு விடயங்களிற்கும் ஊக்கமளிக்கின்றோம்' என ஜனசக்தி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் பொது முகாமையாளர் செஹாரா டி சில்வா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .