2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

குழந்தைகளின் சுகாதாரத்தை வலுவூட்டும் மஞ்சி 'மா பிய மெஹெவர' திட்டம்

A.P.Mathan   / 2013 மார்ச் 07 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிலோன் பிஸ்கட் லிமிடெட் நிறுவனத்தின் மஞ்சி வர்த்தக நாமத்தின் மூலம் கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்தின் பின் அறிந்து வைத்திருக்க வேண்டிய பராமரிப்புகள் குறித்து இளம் பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 'மா பிய மெஹெவர' திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு தொடக்கம் சுகாதார அமைச்சு மற்றும் ஹோமாகம சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 2000 இளம் பெற்றோர் அனுகூலங்களை பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு மாதத்தின் 3வது சனிக்கிழமைகளிலும் காலை 8.30 மணிக்கு ஹோமாகம மருத்துவ அதிகாரிகள், மேலதிக மருத்துவ அதிகாரிகள், பொது சுகாதார அதிகாரிகள், obstetricians, gynecologists மற்றும் தாதியர்கள் உள்ளடங்கிய குழுவினரின் பங்களிப்புடன் 'மா பிய மெஹெவர' திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பங்கேற்கும் இளம் பெற்றோர் மத்தியில் கர்ப்பகாலத்தில் பின்பற்ற வேண்டிய ஊட்டச்சத்து தேவை, முறையாக பாலூட்டும் விதம் மற்றும் தந்தைமார்களுக்கு பிரசவத்திற்கு முன்னதான தகவல்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. மேலும் பங்கேற்பவர்கள் சுகாதார அதிகாரிகளை தனியாக சந்தித்து ஆலோசனைகளை பெறவும் முடியும். சிபிஎல் நிறுவனத்தின் மூலம்; பங்கேற்பவர்களுக்கு சத்தான காலையுணவு மற்றும் பகல் உணவு போன்றன வழங்கப்படுகின்றன.

குழுப் பணிப்பாளர் மற்றும் சந்தைப்படுத்தல், விற்பனை தலைவர் நந்தன விக்ரமகே இச்சமூக அபிவிருத்தி திட்டத்தின் மூலம் சமுதாயம் பெறும் நன்மைகள் குறித்து விளக்கினார். 'இவ் விழிப்புணர்வு திட்டத்தின் சமூகவியல் தாக்கம் மிகப் பெரியது. குழந்தையின் பராமரிப்பு, பரஸ்பர புரிதல் மற்றும் ஸ்திரத்தன்மையில் பெற்றோரின் பங்கு அளப்பரியது என்பதால் இத்திட்டத்தில் தாய், தந்தை இருவரினதும் பங்கேற்பு முக்கியமானதாகும்;. இலங்கையின் பொறுப்புமிக்க நிறுவனம் என்ற ரீதியில், இலங்கை மக்களின் வாழ்வில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்' என்றார். மேலும் அவர் மா பிய மெஹெவர திட்டமானது அடுத்த தலைமுறை குழந்தைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

இத் திட்டம் குறித்து ஹோமாகம பிரதேச வைத்திய அதிகாரி லக்ஷ்மன் ஜயமானே கருத்து தெரிவிக்கையில், 'இத்திட்டத்தின் மூலம் குடும்பங்களை ஊக்குவிக்கவும், குறிப்பாக கணவன்மார் இடையே தாய்மார்கள் எதிர்பார்க்கும் அன்பு, பாதுகாப்பினை வழங்கவும், தாயின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்ய கணவனுக்கு ஊக்குவிப்பு ஏற்படுத்துவதும் முக்கிய நோக்கமாக உள்ளது. அடுத்த முக்கிய நோக்கமாக குடும்பங்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தவும், சமுதாயம் தொடர்பில் சாதகமான அணுகுமுறையை உருவாக்குவதும் அமைந்துள்ளது. இதனூடாக சக்திமிக்க, ஆரோக்கியமான சமுதாயத்தை கொண்ட தேசத்தை கட்டியெழுப்ப முடியும். இத்திட்டத்தின் மூலம் குடும்ப சுகாதார விடயங்கள் குறித்த ஆலோசனைகள், சமூக சுகாதார இலக்குகள் மற்றும் அவ்விலக்குகளை அடைவதற்கான வழிகள் போன்ற பல அனுகூலங்களை பெற்றுக்கொள்ள முடியும்' என்றார்.

மத்தேகொடவில் நடைபெற்ற மஞ்சி மா பிய மெஹெவர திட்டத்தில் பங்கேற்ற கருணாதிலக தம்பதியர் கருத்து தெரிவிக்கையில், பிரசவத்தின் முன், பின்னரான தகவல்கள் மாத்திரமன்றி குடும்பத்தின் அன்றாட நடவடிக்கை நிர்வாகம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டன என்றனர்.

மஞ்சி மா பிய மெஹெவர திட்டமானது ஹோமாகம, பனாகொட, வடாரேக, மத்தேகொட மற்றும் ஹபரகட ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சிபிஎல் நிறுவனம் அமைந்துள்ள ஹோமாகம பிரதேசத்தில் சமூக பொறுப்புணர்வு திட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் மஞ்சி மா பிய மெஹெவர திட்டமானது எதிர்காலத்தில் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .