Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மார்ச் 13 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் முன்னணி தயாரிப்புகளில் ஒன்றாக களனி Insulation Tape அமைந்துள்ளது. பாதுகாப்பான இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல்கள் கேபிள்கள் விற்பனையில் முன்னணியில் திகழும் களனி கேபிள்ஸ் பிஎல்சி, களனி Insulation Tapes விற்பனையில் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தவர்களுக்கு விருதுகளையும், தாய்லாந்துக்கான வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்புகளையும் வழங்கி கௌரவித்திருந்தது.
தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற இந்த விருதுகள் வழங்கும் வைபவத்தில் களனி கேபிள்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால பங்கேற்றிருந்தார்.
களனி Insulation Tapes பிரிவின் உதவி விற்பனை முகாமையாளரான கிஹான் பெர்னான்டோ சிறந்த விற்பனை முகாமையாளர் 2014 எனும் விருதை தனதாக்கியிருந்தார். உத்திக விஜேசிங்க சிறந்த விற்பனை ஊக்குவிப்பு அதிகாரிக்கான விருதை பெற்றுக் கொண்டார்.
களனி Insulation Tapes என்பது இலங்கையில் காணப்படும் சகல Insulation Tapes வகைகளிலும் அதிகளவு விற்பனையை தன்னகத்தே கொண்ட தயாரிப்பாகும். 2014 இல், இந்த தயாரிப்பு, நான்கு மில்லியன் அலகுகள் விற்பனையாகியிருந்தன. இதில் நேரடியாக பங்களிப்பை வழங்கியிருந்த மூன்று பிராந்திய விற்பனை முகாமையாளர்கள் மற்றும் ஆறு விற்பனை ஊக்குவிப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் கௌரவிப்புகள் வழங்கப்பட்டிருந்தன.
களனி கேபிள்ஸ் விற்பனை அணியை விருதுகளை பெற்றவர்களில் விற்பனை முகாமையாளர்களான கிஹான் பெர்னான்டோ (மேல் பிராந்தியம் 1), தர்ஷன கம்லத் (மேல் பிராந்தியம் 2), ரலிந்த லமாஹேவா (மேல் பிராந்தியம் 3 – களனி லைட்டிங் அலகு) ஆகியோர் உள்ளடங்கியிருந்ததுடன், விற்பனை ஊக்குவிப்பு அதிகாரிகளில், உத்திக விஜேசிங்க (கொழும்பு), சந்தன புஷ்பகுமார (மொரட்டுவ), சமீர சஞ்சீவ (களனி), கபில பமுனுசிங்க (நுகேகொட), கே.பி. துமிந்த (கம்பஹா) மற்றும் துசித புஷ்பகுமார (புத்தளம்) ஆகியோர் அடங்கியிருந்தனர்.
களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் வர்த்தக நாம அபிவிருத்தி முகாமையாளர் சன்ன ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில், 'தற்போது சந்தையில் காணப்படும் Insulation Tapes வகைகளில் களனி Insulation Tapes முன்னிலையில் திகழ்கிறது. இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களின் மூலமாக களனி கேபிள்ஸ் தயாரிப்புகளின் மீது காண்பிக்கப்படும் நாட்டம் இதன் மூலம் உறுதியாகியுள்ளது. கடந்த ஆண்டில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான Insulation Tapes விற்பனை செய்யப்பட்டுள்ளன. எமது வினைத்திறன் வாய்ந்த விற்பனை செயலணியின் செயற்பாடும் இதில் பிரதான பங்களிப்பை வழங்கியிருந்தது. அவர்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
நூற்றுக்கு நூறு வீதம் இலங்கையின் கம்பனியாக கடந்த நான்கு தசாப்த காலமாக களனி கேபிள்ஸ் திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கம்பனி 'Super Brands' தரத்தை இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல் துறையில் 2008 ஆம் ஆண்டில் எய்தியிருந்ததுடன், துறையில் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது.
களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
SLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் வழங்கலின் போது, பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக களனி கேபிள்ஸ் பிஎல்சி 2013 ஆம் ஆண்டில் தங்க விருதையும் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
19 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago