A.P.Mathan / 2015 மே 27 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் ஒவ்வொன்றும் ரூபா 100 பெறுமதியான – மதிப்பிடப்பட்ட (Rated), பிரதியீடான (Subordinated), உத்தரவாதத்துடனான (Guaranteed), மீட்கக்கூடிய (Redeemable) ஐந்து வருடங்களுக்கான 10 மில்லியன் தொகுதிக் கடன் பத்திர வழங்கலானது மிகை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
தொகுதிக்கடன் பத்திரங்கள் மீதான வட்டி ஆண்டுக்கு 10.50% (AER 10.92%) என்ற நிலையான வீதத்தில்; அமைந்திருப்பதுடன், இது காலாண்டு அடிப்படையில் கணிப்பிடப்பட்டு ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும். இந்த தொகுதிக்கடன் வழங்கல் 2015 மே 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகியது.
கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் பிரதம தொழிற்பாட்டு அதிகாரி திரு. ரஜீவ் காசி சிட்டி கூறுகையில், 'இந்த தொகுதிக்கடன் பத்திர வழங்கலின் சிறப்பான தொழிற்பாடு குறித்து நாம் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். எம்மை ஆச்சரியமூட்டும் வகையில் கொமர்ஷல் கிரெடிட் மீது நம்பிக்கை வைத்திருக்கும் இலங்கை பொது மக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம். இந்த நாட்டில் உள்ள மேலும் அதிகமான மக்களை சென்றடைவதற்காகவும் அதேபோல் அதனூடாக அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் நாம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற முன்முயற்சிகளில் ஒரு அங்கமாக பங்கேற்பதற்கான நல்லதொரு வாய்ப்பை ஏககாலத்தில் எமது முதலீட்டாளர்களுக்கு இந்த தொகுதிக்கடன் பத்திர வழங்கல் வழங்கியிருக்கின்றது' என்று தெரிவித்தார்.
ஐந்து வருடத்தை கொண்ட மதிப்பிடப்பட்ட, பிரதியீடான, உத்தரவாதத்துடனான, மீட்கக்கூடிய இத் தொகுதிக்கடன் பத்திரங்கள் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்படும்.
தொகுதிக்கடன் பத்திர வழங்கலின் வங்கியியலாளராக ஹற்றன் நஷனல் வங்கி பி.எல்.சி. திகழ்வதுடன், இவ்; வழங்கலின் முகாமையாளர் மற்றும் பதிவாளராக முறையே ஃபெர்ஸ்ட் கெப்பிடல் லிமிடட் மற்றும் எஸ்.எஸ்.பி.கோப்பரேட் சேர்விசஸ் (பிரைவேட்) லிமிடட் ஆகிய நிறுவனங்கள் செயற்படுகின்றன.
அதேவேளை இத் தொகுதிக்கடன் பத்திர வழங்கலின் அறங்காவலராக இலங்கை வங்கி செயற்படும். லங்கா ரேட்டிங் ஏஜன்ஸி லிமிட்டட் ஆனது இந்த தொகுதிக்கடன் பத்திரங்களுக்கு AA என்ற ஒரு நீண்டகால தரப்படுத்தலை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago