Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூலை 19 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேதன மற்றும் இயற்கையான உற்பத்திகளை தேடி அலையும் வாடிக்கையாளர்களின் கேள்விகளை பூர்த்தி செய்யும் வகையில் Ma's பூட்ஸ் நிறுவனம் அதன் புதிய Happy Home சேதன சூப் தெரிவுகளை அறிமுகம் செய்துள்ளது.
மிக நம்பகமான உணவு பதப்படுத்தும் குடும்ப வர்த்தகநாமமான Ma’s ஃபூட்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த இயற்கையான மற்றும் சேதன மூலப்பொருட்களைப் பயன்படுத்தி இந்த புதிய சூப் தெரிவுகளை உற்பத்தி செய்துள்ளது.
'சூப் என்பது இனிய இசையை ஒத்தது. ஒவ்வொரு மூலப்பொருளினதும் சரியான சேர்க்கை மற்றும் சுவை போன்றன அருந்துவருபவரின் உடலிற்கும், மனதிற்கும் இதமான உணர்வைத் தரக்கூடியதுடன், நோய்களை குணப்படுத்தி, குடும்பங்கள் மற்றும் நண்பர்களை ஒன்றிணைத்து விசேட தருணங்களை உருவாக்குகிறது. வீட்டில் தயாரித்த சூப்பின் சுவை மற்றும் ஆறுதல் போன்ற அதே உணர்வை Ma’s இன் சேதன மூலப்பொருட்களின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே எமது எதிர்பார்ப்பாகும்' என Ma’s பூட்ஸ் நிறுவனத்தின் CEO மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் மரியோ டி சில்வா தெரிவித்தார்.
Happy Home சேதன சூப் தெரிவுகளில் குடும்ப விருப்பத்தெரிவுகள் உள்ளடங்கியுள்ளன. ஆரோக்கிய நலன்கள் நிறைந்த மகிழ்ச்சிகரமான ஓர் கலவையாக 'பூண்டு மற்றும் வல்லாரை' தெரிவும், காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்களின் சரியான சேர்க்கையாக குடும்பத்திற்கு மிகப்பிடித்த உணவாக Vegetable Mulligatawny தெரிவுகளும், மாழ்பழம் மற்றும் கடுகு தெரிவானது மசாலா மற்றும் இனிப்பு சுவையுடன் முற்றிலும் வேறுபட்ட சுவையை வழங்குவதாகவும், Tom Kha தெரிவானது கிரீமி தேங்காயுடன் galangal மற்றும் மசாலா பொருட்கள் நிறைந்த கலவையாகவும் அமைந்துள்ளது. இறுதியாக உங்கள் சுவை நரம்புகளை தூண்டக்கூடிய வகையில் மசாலாக்களின் சரியான சேர்க்கையுடன் மிருதுவான பூசணிக்காயின் சுவையை வழங்குவதாக Creamed Pumpkin தெரிவு அமைந்துள்ளது' என Ma’s ஃபூட்ஸ் நிறுவனத்தின் 'Muluthange' காலாண்டு உணவு இதழின் தொடர்பாடல் முகாமையாளர் சாரா டி சில்வா தெரிவித்தார்.
எமது உற்பத்திகளிலிருந்து மக்கள் எதிர்பார்க்கும் அற்புதமான சுவையை வழங்கும் வகையில் உயர் தரமான மூலப்பொருட்களை பயன்படுத்தி புதிய Happy Home சூப் தெரிவுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன' என சாரா மேலும் தெரிவித்தார்.
குடும்ப சைஸ் பொதிகளில் கிடைக்கும் இந்த தெரிவுகளை நீர் அல்லது பால் சேர்த்து மிகக்குறுகிய நேரத்தில் சமைக்க முடிவதுடன், 3 முதல் 4 வரையான பேருக்கு பரிமாறலாம். இந்த சூப் தெரிவுகள் விசேடமாக குழந்தைகளுக்கான மிகச்சிறந்த ஆரோக்கிய தெரிவாக உள்ளதுடன், எந்தவொரு நேரத்திலும் சூப் கப் ஒன்றை ருசிக்க விரும்பும் அனைவருக்கும் ஏற்றமான வகையில் ஊட்டச்சத்துக்களுடன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
Ma’s உற்பத்தி தொகுப்பில் Dad’s Garden gourmet சோஸ் வகைகள், Happy Home உடனடி உணவுகள் மற்றும் கறி வகைகள், Ma’s Happy Life Kitchen சான்றிதழ் பெற்ற சேதன உணவுகள், Pasta Roma விசேட பஸ்தா வகைகள் மற்றும் சோஸ் வகைகள் மற்றும் Katersafe உணவு சேவை துறை விநியோகம் போன்றவை உள்ளடங்குகின்றன.
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago