2025 மே 19, திங்கட்கிழமை

23 முதல் கலா பொல 2020

Editorial   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் ஒன்றிணைந்து ஜோர்ஜ் கீற் மன்றம் முன்னெடுக்கும் ‘கலா பொல’ திறந்தவெளி ஓவியக் கண்காட்சி கொழும்பு 7, ஆனந்தகுமாரசுவாமி மாவத்தையில் எதிர்வரும் 23 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை நடைபெறவுள்ளது. 

கலாபவனத்தில் தமது படைப்புகளைக் காட்சிப்படுத்தக் கூடியவர்களே முக்கியத்துவம் பெற்ற காலத்தில், ஜோர்ஜ் கீற் மன்றத்தின் எண்ணக்கருவில் உருவான கலா பொல, 1993ஆம் ஆண்டில் முதன் முறையாக 30 ஓவியங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் 25 ஆண்டுகால இடையறாத ஆதரவுடன் கலா பொல, ஓவியர்கள் மற்றும் சிற்பிகள் சந்தித்துக் கொள்வதுடன், வலையமைப்பை ஏற்படுத்தி, தங்கள் படைப்புகளை சமர்ப்பிக்க மிகவும் விரும்பப்படும் உள்ளூர் தளமாக படிப்படியாக வளர்ந்துள்ளது. கலா பொல 2019 இல் 350 க்கும் அதிகமான கலைஞர்கள் மற்றும் 31,000 க்கும் அதிகமான விருந்தினர்கள் கலந்துகொண்டனர். மேலும், கலா பொல நடத்திய சிறுவர்களுக்கான கலைக்கூடத்தில் 235 குழந்தைகள் ஓவியம் மற்றும் களிமண் வேலைகளில் ஈடுபட்டனர்.பல ஆண்டுகளாக “கலா பொல”, இலங்கையில் உள்ள பல கலைஞர்களுக்கு அவர்களின் கைவினைகளை வளர்க்கவும், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்தவும் உதவியுள்ளது. 

கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் மிகப் பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி இன் சமூகப் பொறுப்புணர்வு பிரிவே ஜோன் கீல்ஸ் அமையமாகும். ஜோன் கீல்ஸ் அமையம் ஆறு முக்கிய பிரிவுகளின் கீழ் பல நீண்ட கால மற்றும் நிலைபேறான சமூக பொறுப்புணர்வு முயற்சிகளை முன்னெடுக்கும் அதேவேளை, கலா பொல அதன் கலை மற்றும் கலாசார பிரிவின் முக்கிய சமூக பொறுப்புணர்வு முயற்சியாகும்.இது இலங்கை கலைகளையும் கலைஞர்களையும் நீடித்த மற்றும் சீரான சமூக வளர்ச்சியின் பொருட்டு மேம்படுத்தி ஊக்குவிக்க முயற்சிக்கின்றது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X