Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 18 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் வங்கி இலங்கையில் தனது வங்கிச் சேவைகளை முன்னெடுப்பதில் 25 வருட கால பூர்த்தியைக் கொண்டாடுகின்றது. இதைக் குறிக்கும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்க யூனியன் வங்கி முன்வந்துள்ளது.
1995ஆம் ஆண்டில் 8ஆவது உள்நாட்டு வங்கியாக யூனியன் வங்கி நிறுவப்பட்டது. இதைக் தொடர்ந்து பல்வேறு கட்ட வளர்ச்சி, சிறப்புகளை பதிவு செய்துள்ளது. நடைமுறை நிலைமையை சவால்களுக்கு உட்படுத்தல், புதிய முன்னுதாரணங்களை ஏற்படுத்தும் நோக்குடன் இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் யூனியன் வங்கி பிரவேசித்திருந்தது. பெருமளவு வணிக வங்கிகளுடன், சர்வதேச ரீதியில் பிரசன்னத்தைக் கொண்டிருந்த சூழலில் யூனியன் வங்கி பிரவேசித்த, செயலாற்றிய சூழ்நிலை சவால்கள் நிறைந்ததாக காணப்பட்டது. இதன் காரணமாக யூனியன் வங்கி தனக்கென பிரத்தியேகமான அடையாளத்தை உருவாக்கியிருந்தது.
இதன் காரணமாக யூனியன் வங்கி சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை துறையில் வாய்ப்புகளை இனங்கண்டிருந்தது. இந்தத்துறை பெருமளவில் வங்கிகளின் ஈடுபாட்டை கொண்டிருக்காததுடன், தேசிய அபிவிருத்தியில் பிரதான பங்கை வகிக்கும் துறையாகவும் அமைந்திருந்தது. சிறிய, நடுத்தரளவு வியாபாரங்களின் தெரிவுக்குரிய வங்கியாக அர்ப்பணிப்புடனான சேவையை வழங்கி வந்துள்ளதுடன், தேசிய அபிவிருத்தியுடன் ஒன்றிணைந்த நிகழ்ச்சி நிரலுக்கமைய, சிறிய, நடுத்தரளவு வியாபாரங்களின் நிலைபேறான வளர்ச்சிக்கும் பங்களிப்பு வழங்கியுள்ளது. துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தொழில்முயற்சியாண்மை வளர்ச்சியில் பெருமளவு பங்களிப்பை யூனியன் வங்கி வழங்கியுள்ளது. இதனூடாக, இளம் தலைமுறையினருக்கு முன்மாதிரியாக திகழும் தொழில்முயற்சி ஜாம்பவான்களை உருவாக்கியுள்ளதுடன், சமூகங்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, அவற்றின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் பங்களிப்பு வழங்கியுள்ளதுடன், குறைந்தளவு உதவிகளைப் பெறும் துறைகளை ஊக்குவித்து, வலுச்சேர்க்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளினூடாக, நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு பெருமளவு பங்காற்றிய வண்ணமுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago