Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாரதூரமான நோய்கள் பற்றிய பயத்துக்கெதிராகப் போராடி உதவக்கூடிய ஆயுள் காப்புறுதித் திட்டமான AIA சுவ திரிய திட்டத்தை AIA தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
பாரதூரமான நோய்களுடன் போராடுவதற்கு உதவக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள AIA இனுடைய புதிய ஆயுள் காப்புறுதித் திட்டத் தீர்வுடன் நிதியியல் ரீதியான பாதுகாப்பின்மை பற்றிய பயத்ைத நீக்கி AIA இன்ஷுரன்ஸ் உங்களுக்கு உதவுகின்றது. சுவ திரிய ஆயுள் காப்புறுதித் திட்டமானது பாரதூரமான நோய்களுக்கான நிதியியல் அழுத்தத்தைக் குறைப்பதற்கு உங்களுக்கு உதவுவதுடன், நிதியுடன் தொடர்பான சிக்கல்களிலிருந்தும் மீளுவதற்கான உறுதியான நம்பிக்கையையும் உங்களுக்கு வழங்குகின்றது. எனினும் நீங்கள் நோயிலிருந்து குணமாகுதல் அல்லது உங்களுடைய அன்பிற்குரியவர்கள் உங்களை அதிகம் வேண்டும் போது அவர்களுடனேயே நீங்கள் இருப்பது போன்ற முக்கியமான விடயங்களிலும் AIA அதிக கவனம் செலுத்துகின்றது.
புற்றுநோய், இதயநோய், திடீர்தாக்கு, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற மிகவும் பிரதான பாரதூரமான நோய்களுக்கான காப்பீட்டை வழங்குகின்ற ஆயுள் காப்புறுதித் துறையில் இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான நோய்களுக்கான ஆரோக்கிய மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகவே AIAஇன் சுவ திரிய காணப்படுகின்றது. பாரதூரமான நோய்களுக்காக வழமையான பாரம்பரியக் காப்புறுதித் திட்டத்தில் காப்பிடப்படாத ஆரம்ப கட்டப் புற்றுநோய் நிலைமைகள், சில சிறிய இதயநோய் நிலைமைகள் போன்றவற்றையும் இக்காப்பீட்டுத் திட்டம் காப்பிடுகின்றது. இத்திட்டமானது உங்களது நிதியியல் ரீதியான கவலைகளிலிருந்து உங்களை விடுவிப்பதை உறுதிப்படுத்தும் விதமாக சில தனித்துவமான அம்சங்களையும், அனுகூலங்களையும் உங்களுக்கு வழங்குகின்றது. உதாரணமாக, நோயிலிருந்து ‘குணமாதல் அனுகூலம்’ மாதாந்தக் கொடுப்பனவு ஒன்றை உங்களுக்கு வழங்குவதோடு ‘கட்டுப்பணத் தளர்த்தீடு அனுகூலமானது’ காப்பீட்டுத் திட்டத்திற்கான கட்டுப்பணத்தைச் செலுத்துவதை விடுத்தும் நீங்கள் நோயிலிருந்து பூரணமாக குணமடைந்து ஆரோக்கியமடைதல் செயற்பாட்டிலேயே அதிகம் கவனம் செலுத்துகின்றது. அதிர்ஷ்டவசமாக உங்களுக்கு இழப்பீட்டுக் கோரிக்கையை ஏற்படுத்துவதற்கான தேவை நிகழாமல் இருக்குமானால் உங்களுடைய காப்பீட்டு வரையறையை மேலும் அதிகரிக்கக்கூடிய ‘இழப்பீடு கோரா சலுகையினை’ (No Claim Privilege) நீங்கள் பெறுவீர்கள்.
நீங்கள் இழப்பீட்டுக் கோரிக்கையை முன்வைக்காமல் இருந்தால் ஒவ்வொரு வருடமும் வருடத்திற்கு 10% எனும் அடிப்படையில் உங்களுடைய பாரதூரமான நோய் மற்றும் ஆயுள் அனுகூல வரையறைகள் அதிகரிப்புச் செய்யப்படும். உங்களுடைய காப்பீடானது உங்களது உண்மையான காப்பீட்டு வரையறையின் 150% இனை அடையும் வரையில் அல்லது நீங்கள் இழப்பீடு ஒன்றைக் கோரும் வரையில் அதிகரிக்கப்படும். உங்களுக்கு மரணம் ஏற்படும் துரதிஷ்டமான நிகழ்வின் போது ஆயுள் காப்பீட்டுத் திட்டமானது உங்களுடைய அன்பிற்குரியவர்களுக்கு மாற்றீடு செய்யப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025