2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

Access Solarவின் 25 ஆண்டு

R.Tharaniya   / 2025 ஜூன் 23 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

Access Solar இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் 25 ஆண்டு கால தலைமைத்துவத்தைக் கொண்டாடுகிறது

  • சூரிய மின்வலுத் தீர்வுகளில் முன்னோடியான Access Solar, கடந்த 25 ஆண்டுகளாக சமூகங்களுக்கு வலுவூட்டி, இலங்கையில் பசுமை எரிசக்தியை நோக்கிய மாற்றத்தை முன்னெடுப்பதில் அளப்பெரிய பங்காற்றியுள்ளது.
  • Access Solar மூலமாக வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான உயர் திறன் கொண்ட Jinko BESS துணையுடன் 24/7 தூய்மையான எரிசக்தி

கொழும்பு, இலங்கை - 21 மே, 2025 - இலங்கையில் ஒளிமின்னழுத்த (photovoltaic - PV) தீர்வுகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற Access Solar (Pvt) Ltd நிறுவனம், இந்த ஆண்டில் தனது 25வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகின்றது.

குறைந்த செலவில் நிலைபேணத்தக்க எரிசக்தியை வழங்க வேண்டும் என்ற இலக்குடன் 2001ம் ஆண்டில் நிறுவப்பட்ட Access Solar, அன்று தொட்டு புதுப்பிக்கத்த எரிசக்தியில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாக மாறியுள்ளதுடன், குடியிருப்புக்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கிராமப்புறங்களின் மின்சார தேவைகளுக்கான முன்னணி தீர்வுகளை வழங்கி வருகின்றது.  

கடந்த 25 ஆண்டுகளாக, தொழிற்துறையில் எத்தனையோ தீர்வுகளை முதல்முதலாக அறிமுகப்படுத்தி, இலங்கையின் சூரிய மின்வலு எரிசக்தித் துறையில் முன்னோடி என்ற தனது நன்மதிப்பை Access Solar ஆணித்தரமாக நிலைநாட்டியுள்ளது.

2016ம் ஆண்டில் Finlays க்காக 1MW கொண்ட இலங்கையின் முதலாவது தனித்த உள்ளக சூரிய மின்வலு PV கட்டமைப்பை அறிமுகப்படுத்தியமை, 2024/2025ல் Michelin களஞ்சியசாலையில் நாட்டின் கூரை மேல் பொருத்தும் முதலாவது 10 MW சூரிய மின்வலு செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்தமை மற்றும் நாடளாவியரீதியில் 5,000 சமய ஸ்தலங்களுக்கு தலா 5kW கட்டமைப்புக்களுடன் மொத்தமாக 30MW மின்வலு திட்டத்தை ஏற்பாடு செய்தமை என அதன் சாதனைப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. தூய்மையான எரிசக்தித் தீர்வுகளை வழங்குவதில் Access Solar தொடர்ச்சியாக முன்னிலை வகித்து வந்துள்ளது.           

Access Solar ன் பங்களிப்புக்கள் மின்வலு உற்பத்திக் கட்டமைப்புக்களை அமைப்பதற்கும் அப்பால், வெளிப்படையான சூழல் மற்றும் சமூகரீதியான பயன்களையும் முன்னெடுத்துச் செல்கின்றது. படிம எரிபொருட்களில் தங்கியிருப்பதைக் குறைத்து, தேசிய மின்விநியோக கட்டமைப்பிற்கு 100 MW க்கும் மேற்பட்ட தூய்மையான எரிசக்தியை இந்நிறுவனம் பங்களிப்புச் செய்துள்ளது.

10,000 க்கும் மேற்பட்ட வீட்டு சூரிய மின்வலு கட்டமைப்புக்களை அமைப்பதற்கு உதவியுள்ள இந்நிறுவனம், கிராமப்புறங்கள் மற்றும் தேசிய மின்விநியோக வசதி கிடைக்கப்பெறாத சமூகங்களுக்கு எரிசக்தியைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளை மேம்படுத்தியுள்ளது. 

2030ம் ஆண்டளவில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அடையப்பெறும் இலங்கையின் முயற்சியில், Access Solar ன் பணிகள் தேசிய கொள்கையுடன் இடைவிடாது ஒன்றியுள்ளது. கிராமப்புறங்களுக்கு மின் வசதி கிடைக்கப்பெறச் செய்யும் முயற்சிகளின் கீழ், 2004-2007 காலப்பகுதியில் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட 1000 சூரிய மின்வலு செயற்திட்டங்கள்,

2005 ல் Solar Photovoltaic Aided Computer Education (SPACE) நிகழ்ச்சித்திட்டத்தை கல்வி நிலையங்களுக்கு வழங்கியமை அடங்கலாக, தூய்மையான எரிசக்தியை வழங்கியது மாத்திரமன்றி, சமூகங்களுக்கு வலுவூட்டி, எரிசக்தி சமத்துவத்தை அதிகரிக்கச் செய்து, பின்தங்கிய பிரதேசங்களில் டிஜிட்டல் அறிவை மேம்படுத்தும் முயற்சிகளுக்கும் Access Solar வழிவகுத்துள்ளது. இந்த கூட்டு முயற்சியையிட்டு அந்நிறுவனம் மிகவும் பெருமை கொள்கின்றது.   

தமது நோக்கங்கள் குறித்து Access Solar பொது முகாமையாளர் உபுல் திசாநாயக்க அவர்கள் கருத்து வெளியிடுகையில், “அனைவருக்கும் எரிசக்தியை கிடைக்கச்செய்ய வேண்டும் என்பதே ஆரம்பம் தொட்டு எமது இலக்காக அமைந்துள்ளதுடன், இன்று பல்லாயிரக்கணக்கான வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கு தூய்மையான, நம்பத்தக்க மின்வலுவை வழங்கியுள்ளதையிட்டு மிகவும் பெருமை கொள்கின்றோம். 

Michelin ன் 10 MW ஏற்பாடு, மற்றும் ‘5,000 சமய ஸ்தலங்கள்’ முயற்சி போன்ற செயற்திட்டங்கள் மூலமாக 2030ம் ஆண்டளவில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கிய இலங்கையின் இலக்கிற்கு நாம் நேரடியாக ஆதரவளிக்கின்றோம். சூரிய மின்வலு என்பது எதிர்காலத்திற்கான ஒன்றல்ல, மாறாக அது தற்போது எரிசக்தி கிடைத்தலுக்கும், அதன் நிலைபேற்றியலுக்கும் அத்தியாவசியமானது. Jinko Solar போன்ற சர்வதேச முன்னணி நிறுவனங்களுடனான கூட்டாண்மைகள் மேற்குறிப்பிட்ட இலக்குகளை அடையப்பெற எமக்கு உதவியுள்ளன.

அந்நிறுவனத்தின் அதிநவீன Battery Energy Storage Systems (BESS) ஐ Access Solar மூலமாக இலங்கையில் அறிமுகப்படுத்துவதனூடாக, தேசிய மின்விநியோக கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் புதுப்பிக்கத்த எரிசக்தியின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை நாம் மேம்படுத்த முடியும்,” என்று குறிப்பிட்டார்.   

தரம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் மீது Access Solar நீண்ட காலமாகப் பேணி வருகின்ற அர்ப்பணிப்பை வலுவான சர்வதேச கூட்டாண்மைகள் மேலும் வலுப்படுத்துகின்றன. Jinko Solar ஆனது Tier-1 சூரிய மின்வலு தொகுதி மற்றும் எரிசக்தி தேக்கக தொழில்நுட்ப முன்னோடி நிறுவனமாகும். அதன் அதிநவீன BESS தீர்வானது குடியிருப்பு, வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பாரிய பாவனைப் பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

SunGiga மற்றும் SunTera போன்ற Jinko ன் நவீன கட்டமைப்புக்கள், lithium-iron-phosphate (LFP) பேட்டரி தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கின்றது. இந்த பேட்டரி அறிவார்ந்த எரிசக்தி முகாமைத்துவம், வெப்ப ஒழுங்குமுறை மற்றும் பல மட்டங்களிலான பாதுகாப்பு ஆகிய தொழில்நுட்ப சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளதுடன், 24 மணி நேரமும், நிகழ்நேர கண்காணிப்பிற்காக Jinko ESS ன் தரவு கிளவுட் தளத்தை ஒருங்கிணைக்கின்றது. இந்த BESS தீர்வுகள் மின்விநியோக கட்டமைப்பின் ஸ்திரத்தன்மைக்கு உதவி, எரிசக்தி மாற்றத்திற்கு இடமளித்து, இலங்கையின் காபன் உமிழ்வுக் குறைப்பு முயற்சிகளை விரைவுபடுத்த உதவும் அதேசமயம் நெகிழ்திறன் கொண்ட காப்பு மின்வலுவை வழங்குகின்றது.        

JINKOநிறுவனத்தின்விற்பனைப் பணிப்பாளர் ஷெஹான் தலாகல அவர்கள் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், “இலங்கையில் புதுப்பிக்கத்த எரிசக்தியை நோக்கிய மாற்றத்தை முன்னெடுப்பதில் Access Solar உடன் கைகோர்ப்பதையிட்டு Jinko Solar பெருமை கொள்கின்றது. நாட்டின் தனித்துவமான தேவைகளுக்கேற்றவாறு உயர் திறன் கொண்ட சூரிய மின்வலுத் தீர்வுகளை செயல்படுத்துவதில் மகத்தான தலைமைத்துவ ஆற்றலை Access Solar காண்பித்துள்ளது.

எமது அதிநவீன Battery Energy Storage Systems (BESS) மூலமான கூட்டாண்மை, புத்தாக்கம், நிலைபேற்றியல், மற்றும் எரிசக்தி நெகிழ்திறன் ஆகியவற்றில் பகிரப்பட்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது. நாம் ஒன்றிணைந்து வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் மின்வலுவை வழங்குவதுடன், இலங்கைக்கு பசுமைமிக்க, இன்னும் அதிகளவில் நிலைபேற்றியல் கொண்ட எதிர்காலத்திற்கு வலுவூட்டுகிறோம்,” என்று குறிப்பிட்டார்.     

உபுல் திசாநாயக்க அவர்கள் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களின் சான்றுரைகள் Access Solar ஆல் வழங்கப்படுகின்ற தீர்வுகளின் மதிப்பை தொடர்ச்சியாக காண்பித்து வருகின்றன. வணிக வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரையில் முதலீட்டின் மூலமான பிரதிபலன் மிகவும் மகத்தான ஒன்றாகக் காணப்படுவதுடன், எரிசக்தி செலவுகளைக் குறைத்தும், தொழிற்பாட்டுத் திறனை மேம்படுத்தியும் அவற்றுக்கு பாரியளவில் உதவியுள்ளன.

எதிர்காலத்தில் PV கட்டமைப்புக்கள் மற்றும் smart storage ஆகியவற்றை இணைக்கும் நுண்ணறிவுத்திறன் கொண்ட எரிசக்தி தீர்வுகளை ஒருங்கிணைப்பதில் நாம் கவனம் செலுத்துவோம். எமது வாடிக்கையாளர்களதும், எமது நாட்டினதும் பரிணாம வளர்ச்சி கண்டு வருகின்ற தேவைகளைப் பூர்த்தி செய்வதில், எதிர்காலத்திற்கு ஏற்றவாறான தீர்வுகளை வழங்குவதில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மீது நாம் முதலீடு செய்து வருவதுடன், எமது சர்வதேச கூட்டாண்மைகளையும் விரிவுபடுத்தி வருகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.  

Access Solar ன் ISO9001 தரச்சான்று அங்கீகாரம் மற்றும் நம்பிக்கைமிக்க விற்பனைக்குப் பின்னரான ஆதரவு ஆகியன மகத்துவம் குறித்த அதன் நன்மதிப்பை மேலும் ஆணித்தரமாக்கியுள்ளன. தனித்த வீட்டுக் கட்டமைப்பானாலும் சரி அல்லது கூரை மேல் பொருத்தப்படும் 10 MWஉற்பத்தி ஆலையானாலும் சரி, அதிகபட்ச திறன் மற்றும் நீடித்த உழைப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் செயற்திட்டங்கள் ஒவ்வொன்றும் தனிப்பயனாக்கம் செய்யப்படுவதுடன், இலங்கையின் பல்வேறு காலநிலைமைகளைத் தாங்கும் வண்ணம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்படுகின்றன.  

Access Solar நிறுவனம் குறித்த விபரங்கள் 

Access நிறுவனங்கள் குழுமத்தின் பெருமைமிக்க உறுப்பு நிறுவனமான Access Solar (Pvt) Ltd ஆனது ISO9001:2015 தரச்சான்று அங்கீகாரம் பெற்ற சூரிய மின்வலு தீர்வுகள் வழங்குனர் என்பதுடன், இலங்கையில் உலகத்தரம் வாய்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்புக்களை வழங்குவதற்காக Jinko Solar, Sungrow,Huawei, ABB, Sineng, LappKabel, SMA, Lanka Aluminium, SwissstekAluminium, Schneider Electric மற்றும் KBE Berlinஉள்ளிட்ட சர்வதேச தொழிற்துறை முன்னணி நிறுவனங்களுடன் கூட்டாண்மைகளைக் கொண்டுள்ளது.

அனைத்து சூரிய மின்வலு PV மற்றும் எரிசக்தி தேக்கக தீர்வுகளில் சர்வதேச தராதரங்களை Access Solar பேணி வருகின்றது. இலங்கையின் வெப்பவலய காலநிலையில் விசேடமாக உச்சப்பயனைப் பெற்றும் வகையில் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்ட உயர் திறன் கொண்ட சூரிய மின்வலு உற்பத்திக் கட்டமைப்புக்கள், ஸ்மார்ட் இன்வேர்ட்டர்கள், மற்றும் அதிநவீன Battery Energy Storage Systems (BESS) ஆகியவற்றை இந்நிறுவனம் ஒருங்கிணைத்துள்ளது.

இந்த மூலோபாய கூட்டாண்மைகளுடனும், Access குழுமத்தின் உள்நாட்டு நிபுணத்துவம் மற்றும் சர்வதேச தொடர்புகளின் பக்கபலத்துடனும் இலங்கையில் நிலைபேணத்தக்க எரிசக்திக்கான மாற்றத்தை முன்னெடுப்பதற்கு அதற்கு முடிந்துள்ளதுடன், ஒப்பற்ற தரம், நம்பிக்கை மற்றும் மதிப்பு ஆகியவற்றையும் வழங்குகின்றது.      


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .