2024 மே 02, வியாழக்கிழமை

Agri Saviya – Marketing Asseweduma இரண்டாம் கட்டத்தை முன்னெடுப்பதற்கு SLT-MOBITEL வலுவூட்டல்

Freelancer   / 2024 ஏப்ரல் 01 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் விவசாயத்துறையின் வளத்தை மேம்படுத்துவதற்கான பங்களிப்பாகவும், சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) செயற்பாடுகளுக்கான அர்ப்பணிப்பை வலிமைப்படுத்தும் வகையிலும், SLT-MOBITEL, Agri Saviya - Marketing Asseweduma திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு வலுவூட்டியிருந்தது.

விவசாயிகளை எதிர்காலத்தின் விவசாய தொழில் முயற்சியாளர்களாக மாற்றியமைக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் Agri Saviya, விவசாயிகளுக்கு அவசியமான அறிவூட்டல்களையும், தொழில்நுட்பத் திறன்களையும் பெற்றுக் கொடுத்து, அதனூடாக இலங்கையில் நவீன விவசாய அபிவிருத்தியை கட்டியெழுப்புவதற்கான பங்களிப்பை மேற்கொள்கின்றது. திட்டத்தின் முதற்கட்டத்தின் போது, 40 விவசாயிகளுக்கு விவசாய வணிகம் மற்றும் தொழில்முயற்சியாண்மை (CABE) சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. இலங்கையில் வழங்கப்படும் இந்த வகையான முதலாவது சான்றளிப்புத் திட்டமாக இது அமைந்துள்ளதுடன், இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகம் (SLIM) இதனை வழங்கியிருந்தது.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் கட்டத்தில், பல்வேறு பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 15 விவசாய தொழில்முயற்சியாண்மையாளர்கள் SLT-MOBITEL இடமிருந்து முழுமையான புலமைப்பரிசில்களைப் பெற்றுக் கொண்டனர். மேலும், மூலோபாயப் பங்காளராக இந்தத் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் SLT-MOBITEL, SMART விவசாயக் கொள்கைகள் மற்றும் SLT-MOBITEL இன் R&D பிரிவான ‘THE EMBRYO’ இனால் முன்னெடுக்கப்பட்டிருந்த புத்தாக்கமான தீர்வான Fazenda போன்றன தொடர்பான அறிவுப் பகிர்வு அமர்வுகளுக்கு இணைப்புத்திறன் வசதிகளை ஏற்படுத்தியிருந்தது. Fazenda என்பது, பெருந்தோட்டங்களுக்கான மண் மற்றும் உரம் தொடர்பான முக்கியமான கண்காணிப்புகளையும், உகந்த மண் அல்லது சூழல் காரணிகளில் மீறல்கள் ஏற்படுகையில் அது பற்றி அறிவுறுத்தல்களை வழங்கும் IoT மற்றும் AI-அடிப்படையிலான தீர்வாகும். உரம் இடுகை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு அவசியமான பெறுமதி வாய்ந்த தரவுகளைப் பெற்றுக் கொடுப்பதாகவும் அமைந்துள்ளது.

Agri Saviya திட்டத்தினூடாக, SLT-MOBITEL இனால் ESG இன் சமூக அம்சங்களுக்கு பங்களிப்புகள் வழங்கப்படுவதுடன், கிராமிய மட்டத்தில் பொருளாதார வலுவூட்டல், வாழ்வாதார விருத்தி, நிலைபேறான விவசாய செயன்முறைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி மேற்கொள்ளப்படுகின்றது. மேலும், விசேட இணைப்புத்திறனை ஏற்படுத்திக் கொடுத்து, அத்தியாவசியமான தொடர்பாடல் சாதனங்கள் மற்றும் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை SLT-MOBITEL வழங்கி, சமூக உள்ளடக்கம் மற்றும் இணைப்புத்திறனை உறுதி செய்கின்றது.

Agri Saviya-Marketing Asseweduma திட்டத்துக்கு ஆதரவளிப்பதனூடாக சேவையாற்றும் சமூகங்களில் கூட்டாண்மை பொறுப்புணர்வுச் செயற்பாடுகள் மற்றும் நேர்த்தியான சூழல் மற்றும் சூழல் தாக்கங்களை ஏற்படுத்துவதில் காண்பிக்கும் அர்ப்பணிப்பு பிரதிபலிக்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் கண்டி சிட்டி சென்ரர் தவிசாளர் துசித விஜயசேன, மொபிடெல் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் சரக பெரேரா, SLT சிரேஷ்ட பொறியியலாளர் அனுராத உடுநுவர ஆகியோர் இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகம், SLT-MOBITEL மற்றும் Sri Lanka Agriprenuers Forum ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .