2025 மே 19, திங்கட்கிழமை

Ambeon குரூப் வருமானம் 18% இனால் அதிகரிப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதிச்சேவைகள், உற்பத்தி, ரியல் எஸ்டேட், தொழில்நுட்பம், மூலோபாய முதலீடுகள் போன்ற பிரிவுகளில் மத்தியளவு பன்முகப்படுத்த ப்பட்ட வியாபாரமான Ambeon ஹோல்டிங்ஸ் பிஎல்சி, 2019/20 நிதியாண்டின் 3ஆம் காலாண்டில் 15.9 பில்லியன் ரூபாயை வருமானமாக பதிவு செய்துள்ளது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் 13.4 பில்லியன் ரூபாயைப் பதிவு செய்திருந்தது. இது 18% அதிகரிப்பாகும். அத்துடன், நடப்பு ஆண்டில் குழுமம் வரிக்கு முந்திய இலாபமாக 608 மில்லியன் ரூபாயை பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ. 140 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது 333% அதிகரிப்பாகும். 2019 டிெசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில், கணக்காய்வுக்கு ட்படுத்தப்படாத இடைக்கால நிதி அறிக்கையின் பிரகாரம் இந்தச் சிறந்த நிதிப் பெறுபேறுகள் பதிவாகியுள்ளமை அறிவிக்கப்பட்டுள்ளது. 

2018/2019 நிதியாண்டில் சிறந்த நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்த பன்முகப்படுத்தப்பட்ட குழுமம், நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் 3.2 பில்லியன் ரூபாயை நிகர இலாபமாக பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டில் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி 2.9 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், இக்காலப்பகுதியில் தேறிய இலாபம் 319 மில்லியன் ரூபாயாகவும் கடந்த ஆண்டில் பதிவாகியிருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துப் பெறுமதி முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த 22.6 பில்லியன் ரூபாயிலிருந்து 23.3 பில்லியன் ரூபாயாக 3.2% உயர்வை பதிவு செய்திருந்தது. 2019 மார்ச் மாத காலப்பகுதியில் பங்கொன்றின் மீதான தேறிய சொத்துப் பெறுமதி 21.70 ஆக காணப்பட்ட நிலையில், ஒன்பது மாத கால நிறைவில் இந்தப் பெறுமதி 22.51 ஆக உயர்ந்திருந்தது. 

போர்சலேன், ஆடைகளை கொண்ட உற்பத்தித் துறை இறுதி வருமானத்தில் 60% பங்களிப்பை வழங்கியிருந்ததுடன், டெக்னொலஜி, ரியல் எஸ்டேட் மற்றும் நிதிச் சேவைகள் துறை ஆகியன எஞ்சிய 40% பங்களிப்பை பதிவு செய்திருந்தது. குறிப்பாக தொழில்நுட்ப துறை சிறந்த பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. சகல துணை நிறுவனங்களான மிலேனியம் IT ESP மற்றும் சவுத் ஏசியா டெக்ஸ்டைல்ஸ் லிமிடெட் ஆகியன இந்த நிதிப் பெறுபேறுகளில் உயர் பங்களிப்பை வழங்கியிருந்தன.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X