Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 12 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
Arpicot பொருள் கொள்வனவு அனுபவம் தற்போது இணையத் தளத்துக்குள் கொண்டு செல்லப்பட்டதன் மூலம் இணைய வழி பொருள் கொள்வனவு ஈ சுப்பர் சென்டர்கள் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.உலகம் முழுவதிலும் இருந்து 24 மணிநேரமும் இதனூடாக பொருள்களைக் கொள்வனவு செய்யலாம்.
Arpico விற்பனை நிலையம் ஒன்றுக்கு ஏதோ காரணத்துக்காக செல்ல முடியாதுள்ள உள்ளூர் வாடிக்கையாளர்களை இலக்கு வைத்து இது தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் இலங்கையிலுள்ள தமது அன்புக்கு உரியவர்களுக்கு Arpico ஊடாக பொருள்களை அனுப்பி வைக்க விரும்பும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும் இச் சேவையின் மூலம் பயனடைவார்கள். ஒவ்வொரு Arpico நிலையத்தில் இருந்தும் அதை சுற்றியுள்ள குறிப்பிட்ட அளவு தூரத்துக்கு ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் பொருள்களை விநியோகிக்கக் கூடிய விநியோக சேவை ஒன்றும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த இணைய வழி பொருள் கொள்வனவுக்கு வாடிக்கையாளர்கள் தமது கடன் அட்டைகளைப் பாவிக்கலாம். பொருள் கொள்வனவு இடம்பெற்று அதற்கான கொடுப்பனவுகளும் செலுத்தப்பட்ட பின் 2 மணி நேரத்துக்குள் பொருள்களை விநியோகிக்கும் சேவையைப் பெற்றுக் கொள்ளும் வசதியும் வாடிக்கையாளருக்கு உண்டு.
'இணைய வழி வர்த்தக பரப்புக்குள் பிரவேசிப்பதில் நாம் பின்தங்கியிருக்கின்றோம்;. ஏனெனில் நாம் தற்போதுள்ள பொருள் கொள்வனவு சேவைகளை வழங்குவதற்கு ஈடான ஒரு சேவை முறையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தை நாம் கொண்டிருந்தோம்' என்று றிச்சர்ட் பீரிஸ் விநியோக குழுமத்தின் சந்தைப்படுத்தல் பொறுப்பாளர் மினோத் டி சில்வா கூறினார். 'இலங்கையில் சில்லறை பொருள் கொள்வனவு அனுபவத்தின் ஒரு தூணாக Arpico திகழுகின்றது. எமது விரிவான உற்பத்திகள் அனைத்தையும் எமது இணைய வழி சேவை ஊடாகவும் வழங்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்' என்று அவர் மேலும் கூறினார்.
பல்வேறு வகைகளைச் சேர்ந்த 8000துக்கும் அதிகமான பொருள்களை இதனூடாகக் கொள்வனவு செய்ய முடியும். தினசரி அத்தியாவசியப் பொருள்கள், வீட்டுப் பாவனை மற்றும் தனிநபர் பாவனைப் பொருள்கள், புத்தம் புதிய உற்பத்திகள், மதுபானம், பொதுவகை பொருள்கள், ஒரு சில இலத்திரனியல் பொருள்கள் என பல்வேறு வகையான பொருள்கள் இதில் அடங்கும்.
இந்த இணையத்துக்குள் பிரவேசிப்பவர்கள் ஒரு சீரான ஒழுங்கு முறையில் பொருள்களையும் அவற்றை தேவையான அளவுகளிலும் தெரிவு செய்ய முடியம். உலகளாவிய பாதுகாப்பு முறையின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள கொடுப்பனவு முறையின் கீழ் கொடுப்பனவுகளைச் செய்து பொருள்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரியையும் குறிப்பிடலாம்.
1 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago