Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
COVID-19 அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதானது இலங்கை தமது வரலாற்றில் எதிர்நோக்குகிற மிகப்பெரிய சவாலாகும். இலங்கையில் தொற்று நோய்களின் தாக்கத்தினை மட்டுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சியில் ஒன்றுபடும் நாட்டின் சுகாதாரப் பணியாளர்கள், முப்படையினர் மற்றும் ஏனைய அத்தியவசிய சேவை ஊழியர்கள் வலுவாக ஆதரிக்கும் தேசிய முயற்சிக்கு இலங்கை அரசு முன்னிலை வகிக்கிறது. முன்னிலையிலுள்ள அனைத்து மக்களினதும் வீரமும் தன்னலமற்ற தியாகமும் இதற்கு முன்மாதிரியாகும். இத்தகைய தேசிய நெருக்கடியின் போது சாதாரண பொது மக்களும் பொருளாதாரமும் மோசமாக பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்திட தனித்துவமான பணித்திறன் தீர்வுகளை கண்டு பிடிப்பதன் மூலம் இச்சவாலினை எதிர்கொள்ள அனைத்து வணிகங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அத்தியாவசிய சேவை என்ற அடிப்படையில், தொலைத்தொடர்பு சேவைகள் தேசத்தின் முயற்சியை எளிதாக்க வேண்டும். ஏனெனில், முன்னிலையிலுள்ள அதிகாரிகள், தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ளவர்கள், வணிகங்கள் மற்றும் வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்கள் என அனைவருக்கும் தொடர்பில் இருப்பது அத்தியவசிய தேவையாகும். அரசாங்கத்துடன் தோளோடு தோள் கொடுத்து நிற்கவும் அவர்களின் முயற்சிக்கு ஆதரவளிக்கவும் உறுதியளித்த மொபிடெல், தேசிய மொபைல் சேவை வழங்குனராக ஒவ்வொரு இலங்கையரினதும் மேம்பட்ட மொபைல் இணைப்பு மற்றும் சிறந்த பயனர் அனுபவத்திலிருந்து அதன் அனுகூலங்களைப் பெற்றுக் கொடுக்க முழு நேர வேலையில் ஈடுபடுகிறது. எனவே, அவர்களது நாளாந்த செயற்பாடுகளை விரல் நுனியில் நடத்திடக்கூடியதாக இருந்திடும். தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட சேவைகளிலிருந்து பயனடைவதைத் தவிர, மொபிடெல் இலங்கை மக்களுக்கு சுகாதாரம் தொடர்பான அறிவுரைகள் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குவதன் மூலம் தமது தேசிய கடமையை நிறைவேற்றி வருகிறது.
இலங்கையர்களை தங்கள் அன்புக்குரியவர்களுடன் இணைத்து வைத்திருக்கும் தமது உறுதிப்பாட்டுடன் மொபிடெல் தமது சிறப்பு பக்கேஜ்களை விஷேட முற் கொடுப்பனவு திட்டங்கள் முதல் போனஸ் டேடா சேர்த்தல் (Bonus Data add-ons), இலவச சுகாதார ஆலோசனை சேவைகள், டிஜிட்டல் கொடுப்பனவு தீர்வுகள், பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கான 100% தரவு நீட்டிப்பு சேவைகள் வரையிலான மேலும் பலவற்றை வழங்குகிறது. இச்சேவைகளை மொபிடெலின் ஒன்லைன் தளங்களான Self Care app மற்றும் www.mobitel.lk மூலம் இலகுவாக அணுகலாம். இதனால் இந்த சவாலான காலகட்டத்தில் மொபிடெல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியத்தை இது நீக்குகிறது. மேலும் 'வீட்டிலிருந்து வேலை செய்தல்' எனும் அரசாங்கத்தின் முன்முயற்சிக்கு உதவிடும் வகையில், மொபிடெல் தமது தனித்துவமாக்கப்பட்ட பக்கேஜ்களை சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள்; மற்றும் பெருநிறுவன பிரிவுக்கு 30GB முதல் 140GB வரையிலான டேடா இணைப்புக்களை கவர்ச்சிகரமான விலைகளில் வழங்குகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago