2025 மே 19, திங்கட்கிழமை

COVID-19 நிவாரண செயற்பாடுகளுக்கு INSEE சங்ஸ்தா பங்களிப்பு

Editorial   / 2020 மே 12 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

INSEE சீமெந்து ஸ்ரீ லங்கா, COVID-19 பரவலை கட்டுப்படுத்தி, உறுதியான தேசத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு பங்களிப்பை வழங்குகின்றது. இதன் பிரகாரம், INSEE சங்ஸ்தா சீமெந்து, புத்தளம், இரனவில பகுதியில் Covid-19 கண்காணிப்பு நிலையத்தின் நிர்மாண பணிகளுக்கு அவசியமான சீமெந்தினை விநியோகித்திருந்தது.

Covid-19 தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்கும் பிரதான வைத்தியசாலைகளின் வளங்களை அதிகரிக்கும் வகையில் இந்த நிலையம் நிர்மாணிக்கப்படுகின்றது. மேலும், Covid-19 தொற்றாளர்களுக்கு சிகிச்சைகளை மேற்கொள்ளும் தேசிய தொற்றுநோய் நிறுவனத்தில் (IDH) அத்தியாவசிய தேவையாக காணப்பட்ட CT ஸ்கான் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் சம்மேளனத்துக்கு அவசியமான சங்ஸ்தா சீமெந்தையும் INSEE சீமெந்து ஸ்ரீ லங்கா நன்கொடையளிப்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, சிகிச்சை வழங்கும் போது காணப்படுகின்ற பிரதான சவால்களில் ஒன்றான, முகக்கசவங்கள் போன்ற பிரத்தியேக பாதுகாப்பு சாதனங்களின் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு, INSEE நிறுவனம் 12,000 முகக் கவசங்களையும் அத்தியாவசிய காகிதாதிகளையும் Covid-19 பரவலை கட்டுப்படுத்துவதில் முன்னின்று செயலாற்றுவோருக்கு வழங்கியிருந்தது. இலங்கையின் மக்கள் மற்றும் தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய தினசரி பணியாற்றும் இலங்கை காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு இவை வழங்கப்பட்டிருந்தன.

காலி மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களில் பின்தங்கிய நிலையில் காணப்படும் வருமானமற்ற குடும்பங்களுக்கு INSEE மேலதிக உதவிகளை வழங்கிய வண்ணமுள்ளது. இதுவரை INSEE புத்தளம் சீமெந்து ஆலை நிர்வாகம் மற்றும் கூட்டாண்மை சமூக பொறுப்பு செயற்பாடுகள் அணியினர் நூற்றுக் கணக்கான குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை விநியோகித்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X