2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

CSSL National CIO பட்டியல் 2023 இல் பவர் நிறுவனத்தின் அனோஜா பஸ்நாயக்க

Freelancer   / 2024 ஜனவரி 12 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தொழில்நுட்பத் துறைக்கு ஒப்பற்ற அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பு வழங்கியிருந்தமையை கௌரவிக்கும் வகையில், பவர் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பணிப்பாளர் அனோஜா பஸ்நாயக்க, இலங்கை கணனி சங்கத்தின் National CIO பட்டியல் 2023 இல் உள்வாங்கப்பட்டிருந்தார்.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப செயற்பாட்டாளர்களின் பிரதான நிபுணத்துவ அமைப்பான இலங்கை கணனி சங்கத்தினால் (CSSL) முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய CIO பட்டியல் அறிமுக நிகழ்வு அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தொழிற்துறையின் முன்னணி மற்றும் புகழ்பெற்ற நிபுணர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. CIO இன் பணி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருப்பதுடன், உலகளாவிய ரீதியில் சகல துறைகளிலும், டிஜிட்டல் மாற்றியமைப்பு பயணம் முன்னெடுக்கப்படும் நிலையில், உதவி பணிநிலை என்பதிலிருந்து மூலோபாய பணிநிலையாக மாற்றமடைந்து வருகின்றது. தேசிய ரீதியில் CIO களை தெரிவு செய்யும் போது, முன்னெடுக்கப்பட்டிருந்த மதிப்பாய்வு அளவீட்டு தெரிவில் இது பிரதிபலிக்கப்பட்டிருந்தது.

பவர் நிறுவனத்தில் அனோஜா 2008 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப முகாமையாளராக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார். அதற்கு முன்னர் Brandix, PricewaterhouseCoopers மற்றும் Hayleys ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியிருந்தார். பல மூலோபாய டிஜிட்டல் மாற்றியமைப்புத் திட்டங்களுக்கு இவர் தலைமைத்துவமளித்துள்ளார். பவர் நிறுவனத்தில் செயற்திட்ட பணிப்பாளராக இவர் முக்கிய பங்காற்றியிருந்தார். SAP Analytics Cloud Live அறிக்கையிடலுடன், cloud deployment இல் SAP S/4 HANA 2020 ஐ நடைமுறைப்படுத்தல் மற்றும் அதற்கு மாற்றம் செய்தல் போன்றவற்றில் இவர் முக்கிய பங்காற்றியிருந்தார். அக்காலப்பகுதியில் இலங்கையில் இந்தத் திட்டத்தை பின்பற்றிய முதல் நிறுவனமாக பவர் திகழ்ந்தது.

இதனூடாக RISE ABC திட்டத்துக்கு நிறுவனத்தின் டிஜிட்டல் பிரசன்னத்தை விரிவாக்கம் செய்ய வழிகோலியிருந்ததுடன், அதன் செயற்பாட்டு செயன்முறையை செம்மையாக்கம் செய்திருந்ததனூடாகவும், உரிய காலப்பகுதியில் புத்தாக்கமான தீர்வுகளை நிறுவியிருந்ததனூடாகவும் ஒட்டு மொத்த பெறுமதி ஒதுக்கீட்டை மேம்படுத்தியிருந்தது. AI, ML ஆற்றல்களை உள்வைக்கப்பட்ட S/4 HANA உடனான டிஜிட்டல் அடித்தளத்தை நிறுவுவதற்கும் ஏதுவாக அமைந்திருந்தது.

25 வருடங்களுக்கு மேலாக நிர்வாக மற்றும் தொழில்நுட்ப நிலைகளில் அனுபவத்தைக் கொண்டுள்ள இவர், மாற்றம் மற்றும் நவீனமயமாக்கம் ஆகியவற்றில் நிபுணத்துவத்தை ஏற்படுத்தல், நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றுதலை ஊக்குவித்தல் போன்றவற்றுக்கு பிரதான பங்களிப்பை வழங்குகின்றார். செயற்திட்ட முகாமைத்துவ கல்வியகத்தின், USA கொழும்பு பிரிவின், நிபுணத்துவ விருத்தி உப தலைவராக அனோஜா திகழ்வதுடன், சான்றளிக்கப்பட்ட செயற்திட்ட முகாமைத்துவ நிபுணராகவும் (PMP) விளங்குகின்றார். இலங்கை பணிப்பாளர்கள் நிறுவகத்தின் (SLID) அங்கத்தவராகவும் இவர் திகழ்கின்றார். SLID இன் புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் அங்கத்தவராகவும் இவர் திகழ்கின்றார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பொது முகாமைத்துவ நிகழ்ச்சி மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணனி விஞ்ஞானம் இளமானி (விசேட) பட்டத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .