2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

Cash Bonanza பரிசிழுப்பின் 6ஆவது வெற்றியாளர்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அலைப்பேசி சேவை வழங்குநரான மொபிடெல் நிறுவனத்தின் 2016 ஆண்டுக்கான 'Cash Bonanza” பரிசிழுப்புத்திட்டமானது வாடிக்கையாளரிடையே அதிக பிரபல்யமடைந்து வருகின்றது. இதன் மூலம் மாதாந்த மற்றும் நாளாந்த அடிப்படையில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். மொபிடெல், 2016ஆம் ஆண்டு முழுவதும் 3500 இலட்சம் ரூபாய் பெறுமதியான பணப்பரிசை தமது வாடிக்கையாளர்களிடையே பகிர்ந்தளிக்கவுள்ளது.

அத்துடன் மாதாந்தம் தெரிவு செய்யப்படும் மாபெரும் வெற்றியாளருக்கு ரூ. 150 இலட்சம் பெறுமதியான மிட்சுபிசி மொன்டெரோ SUV ரக மோட்டார் வண்டிகளை வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது வரை 5 அதிஷ்டசாலி வாடிக்கையாளர்கள் மொன்டேரோ ரக வாகனங்களை வெற்றிப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பலங்கொடையைச் சேர்ந்த, ஷானிகா ஸ்ரீமாலி, வாரியபொலவை சேர்ந்த, ஜே.எம்.துஷாந்த ஜயலத், படல்கும்புரயைச் சேர்ந்த ஆர்.எம். ரோஷான பிரியதர்ஷன மற்றும் நிட்டம்புவைச் சேர்ந்த திருமதி. ஆர்.எம்.பீ.பி.பி. குமாரி மற்றும் தனமல்விலயைச் சேர்ந்த திருமதி பீ. ஏ. குசுமாவதி ஆகியோர் கடந்த பரிசிழுப்பின் போது மொன்டேரோ ரக கார்களை வெற்றி பெற்றிருந்தனர்.

மேலும் 6வது மாத வெற்றியாளராக பதவி ஸ்ரீ திஸ்ஸபுர பிரதேசத்தினை சேர்ந்த ஆர்.டி. நிமால் ஜெயசிங்க பெற்றுகொண்டார்.'“Cash Bonanza' களியாட்டம் மற்றும் இசை நிகழ்ச்சியுடன் பரிசளிப்பு விழாவும்     மொரட்டுவை சொய்சாபுர விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

அன்றைய தினம் இடம்பெற்ற இசைநிகழ்வின் பிரபல இசைக்குழுவான 'வன் லைன்' இசைக்குழுவினர் இசை வழங்கியிருந்ததுடன் இலங்கையின் முன்னணி இசைக்கலைஞர்கள் இவ்விசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். “Cash Bonanza” 2016 பரிசளிப்புதிட்டத்தின் ஜூன் மாதத்தின் மாதாந்த பரிசிழுப்பின் மாபெரும் வெற்றியாளராக பதவிய ஸ்ரீ திஸ்ஸபுர பிரதேசத்தைச்சேர்ந்த ஆர்.டி. நிமால் ஜெயசிங்க, மிட்சுபிசி மொன்டெரோ SUV ரக மோட்டார் வாகனத்தை மொபிடெல் நிறுவனத்தின் பிரதான செயற்பட்டு அதிகாரி நளின் பெரேராவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

இது வரை 6 வெற்றியாளர்கள் மொன்டரோ ரக வாகனத்தைப் பரிசாக பெற்றுள்ளதுடன் இனிவரும் நாட்களிலும் மேலும் 6 மொன்டரோ ரக வாகனங்களை தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்க மொபிடெல் திட்டமிட்டுள்ளது. அத்துடன் மக்களின் நலன் கருதி அன்றைய தினம் வருகை தந்திருந்த வாடிக்கையாளர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X