2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

Ceyoka மலேசியாவின் Success Electronicsஉடன் உடன்படிக்கை கைச்சாத்து

Gavitha   / 2016 ஒக்டோபர் 04 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்கத்துவ அமைப்பான Ceyoka நிபுணத்துவ ஒளியூட்டல் பிரிவு, வாடிக்கையாளர்களுக்கு உயர் தரம் வாய்ந்த தொழிற்துறை சார்ந்த ஒளியூட்டல் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில், மலேசியாவின் Success Electronics & Transformer Manufacturer SdnBhd நிறுவனத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. மலேசியாவின் தொழிற்துறைசார்ந்த ஒளியூட்டல் தீர்வுகள் மற்றும் உற்பத்தியாளராக இந்நிறுவனம் திகழ்கிறது.  

Ceyoka Engineering (Pvt) Ltd இன் முகாமைத்துவ பணிப்பாளர் ஹர்ஷித் தர்மதாச மற்றும் Success Electronics & Transformer Manufacturer SdnBhd இன் முகாமைத்துவ பணிப்பாளர் டன் அஹ் பிங் ஆகியோருக்கிடையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது.  
வலுச்சிக்கனம் வாய்ந்த மற்றும் புத்தாக்கமான ஒளியூட்டல் தீர்வுகளுக்கான கேள்வி அதிகரித்துச் செல்லும் நிலையில் Ceyoka வாடிக்கையாளர்களுக்கு Success Electronics இன் NIKKON ஒளியூட்டல் தெரிவுகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.  

Ceyoka நிபுணத்துவ ஒளியூட்டல் பிரிவின் மூலமாக, தற்போது Nikkon இன் பரிபூரண தொழிற்துறை சார்ந்த ஒளியூட்டல் தயாரிப்புகள் விநியோகிக்கப்படுகின்றன. இதில்  flood lights, factory and w  rehouse lighting குளிர வைக்கும் மற்றும் கொதிக்க வைக்கும் அறைகளுக்கான விசேட ஒளியூட்டல் சாதனங்கள், distillation plants, w  orkshops, garages மற்றும் car parks, marine lighting, ports, petrol stations, gymnasiums, multi-purpose halls, classrooms போன்றன அடங்கியுள்ளன.  

Ceyoka Engineering (Pvt) Ltdஇன் Ceyoka நிபுணத்துவ ஒளியூட்டல் பிரிவின் வணிக அபிவிருத்தி முகாமையாளர் துமிந்த ஜயரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “பிராந்தியத்தில் காணப்படும் மாபெரும் தொழிற்துறைசார்ந்த ஒளியூட்டல் தீர்வுகளை உற்பத்தி செய்யும் நிறுவனமாக Success Electronics திகழ்கிறது. அந்நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளமையையிட்டு நாம் பெருமையடைகிறோம்.

இந்தப்பிரிவில் முன்னணி உள்நாட்டு விநியோகஸ்த்தர் எனும் வகையில், எமது பிரத்தியேக விநியோக உடன்படிக்கை என்பது, வாடிக்கையாளர்களுக்கு Nikkon இன் பரந்தளவு உற்பத்தித் தெரிவுகளை அணுகக்கூடியதாக அமைந்திருக்கும். உயர் தரத்துக்கான அவர்களின் அர்ப்பணிப்பு என்பது, Success Electronics ஐ ஒப்பற்ற தெரிவாக மேற்கொள்ள உதவியிருந்தது. அத்துடன், சந்தையில் எமது நிலையை வலுப்படுத்தவும் ஏதுவாக அமைந்திருந்தது” என்றார்.  

Success Electronicsஇன் விற்பனை முகாமையாளர் வேய்ன் வொங் இவ் உடன்படிக்கை குறித்து தெரிவிக்கையில், ‘சர்வதேச சந்தைகளுக்கு பெருமளவிலான தொழிற்துறைக்கான ஒளியூட்டல் தீர்வுகளை விநியோகிப்பதுடன், பூர்த்தி செய்யப்பட்ட சர்வதேச செயற்றிட்டங்களுடன், Success Electronics இன் தொடர்ச்சியாக வெற்றிகரமான செயற்பாட்டுக்கு தரம் மற்றும் புத்தாக்கம் போன்றன எடுத்துக் காட்டாக அமைந்துள்ளன” என்றார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X