A.P.Mathan / 2015 நவம்பர் 04 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர் குழாய்கள் கட்டமைப்புகளை விநியோகிப்பது மற்றும் Thermoplastic குழாய்கள் மற்றும் பொருத்துகைகள் ஆகியவற்றின் சந்தை முன்னோடியாக திகழும் S-lon லங்கா (பிரைவட்) லிமிட்டெட், அண்மையில் நடைபெற்ற Construct கண்காட்சி 2015 இல் சிறந்த காட்சிகூடத்துக்கான விருதை தனதாக்கியிருந்தது. இந்த விருதுகள் வழங்கும் வைபவம் பத்தரமுல்ல, வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்றது.
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச வழங்கியிருந்ததுடன், S-lon லங்கா பிரைவட் லிமிட்டெட் சார்பில் வணிக அபிவிருத்தி மற்றும் வியாபார சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஷலினி நவரட்ன மற்றும் விற்பனை பணிப்பாளர் திரு. ரஞ்சன் லியனகே நிறுவனத்தின் சில சிரேஷ்ட முகாமையாளர்களுடன் இந்த விருதை பெற்றுக் கொண்டனர்.
இலங்கை தேசிய நிர்மாண சம்மேளனத்தின் மூலமாக Construct கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நாட்டில் முன்னெடுக்கப்படும் மிகவும் பெருமைக்குரிய நிர்மாணத்துறையுடன் தொடர்புடைய கண்காட்சியாகவும் அமைந்துள்ளது. மேலும், தெற்காசிய பிராந்தியத்தில் முன்னெடுக்கப்படும் நிர்மாணத்துறையுடன் தொடர்புடைய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கண்காட்சி நிகழ்வாகவும் அமைந்துள்ளது.
S-lon அணியால் இந்த காட்சிகூடத்தை அமைப்பதற்கு வெளிப்படுத்தப்பட்டிருந்த அர்ப்பணிப்பு, ஈடுபாடு மற்றும் உத்வேகம் ஆகியவற்றுக்கு கிடைத்த சிறந்த கௌரவிப்பாக இந்த விருது அமைந்திருந்தது. பாரிய S-lon Tee fitting வடிவில் S-lon காட்சிகூடம் வடிவமைக்கப்பட்டிருந்ததுடன், பல பார்வையாளர்களையும் கவர்ந்திருந்தது.
நிறுவனத்தின் வணிக அபிவிருத்தி மற்றும் வியாபார சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஷலினி நவரட்ன கருத்து தெரிவிக்கையில் 'கண்காட்சியாளர்களுக்கு வழங்கப்படும் மாபெரும் விருது எமக்கு வழங்கப்பட்டுள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். துறையின் பல முன்னணி நிறுவனங்களை விட சிறப்பான முறையில் நாம் செயலாற்றியிருந்தோம் என்பது இதனூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக எமக்கு கிடைத்த பெரும் கிரீடமாக இதை நாம் கருதுகிறோம். இந்த கண்காட்சியில் பங்குபற்றிய பலர் எமது காட்சிகூடத்துக்கு விஜயம் செய்திருந்தனர், இதற்கு காட்சிகூடத்தின் பிரத்தியேகத்தன்மை மற்றும் நாம் காட்சிப்படுத்தியிருந்த புத்தாக்கமான பொருட்கள் போன்றன ஏதுவாக அமைந்திருந்தன' என்றார்.
பெருமளவான வீடமைப்பாளர்கள், நிர்மாண ஒப்பந்தக்காரர்கள், பொறியியலாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் இந்த கண்காட்சியில் S-lon காட்சிகூடத்துக்கு விஜயம் செய்திருந்தனர். இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்களில் இவர்கள் அதிகளவு ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்தனர். இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த S-lon பொருட்கள் தொடர்பில் நிபுணர்கள் விளக்கங்களையும் வழங்கியிருந்தனர்.
துறைசார் நியமங்களைவிட சிறந்த கடுமையான தரப்பரிசோதனைகள் தொடர்பில் பின்பற்றப்படும் தொழில்நுட்பம் பற்றிய விளக்கங்களை பெற்றுக் கொள்வதற்கு பார்வையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதற்காக கம்பனி தனது ஆய்வுகூடங்களில் தொழில்நுட்பம் மற்றும் சாதனங்களில் எவ்வாறு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது என்பது பற்றிய விளக்கங்களையும் வழங்கியிருந்தது. 'தன்னியக்க அழுத்த பரிசோதனை அலகு' போன்ற இலங்கையில் காணப்படும் முதல் தரமான பிரிவுகள் பற்றிய விளக்கங்களும் வழங்கப்பட்டிருந்தன. S-lon குழாய்கள் மற்றும் பொருத்துகைகளில் நீண்ட கால அடிப்படையில் அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்வதற்கு 'தன்னியக்க அழுத்த பரிசோதனை அலகு' பயன்படுகிறது. இதன் மூலமாக பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான நீடித்து உழைக்கும் குழாய்கள் வழங்கப்படுகின்றன.
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago