Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 20 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
Drive green, சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அரசாங்கத்தின் வளித் தர நியமங்களை உறுதி செய்யும் வகையில், வாகனப் புகைப் பரிசோதனைத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது.
Drive green இன் புகைப்பரிசோதனைத் திட்டம், CleanCo லங்கா லிமிடெட்டால் முன்னெடுக்கப்படுகின்றது. 2008ஆம் ஆண்டில் தனது செயற்பாடுகளை இந்நிறுவனம் ஆரம்பித்திருந்தது. நவீன இயந்திரங்கள், சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சான்றிதழ்கள், ஊழியர்களைக் கொண்டு தனது செயற்பாடுகளை இந்நிறுவனம் முன்னெடுக்கின்றது.
Drive green ஆரம்பத்தில் தனது புகைப்பரிசோதனைத் திட்டத்தை, வாகனப் புகைப்பரிசோதனை சாதனங்கள், சேவைகளில் முன்னோடியாகத் திகழும் Environmental Systems Products (ESP) உடன் இணைந்து ஆரம்பத்திருந்தது. Drive green ஸ்தாபிக்கப்பட்டது முதல், ultra-accurate Zero Class ஐ பயன்படுத்தி இயங்கும் சிறந்த பரிசோதனைச் சாதனங்களில் தொடர்ச்சியாக முதலீடுகளை மேற்கொண்டு, சகல Drive green நிலையங்களிலும் உயர் பரிசோதனை நியமங்களைப் பேணி வருகின்றது. இதனூடாகத் தூய்மையானதும் பாதுகாப்பானதுமான பரிசோதனைச் சூழலுக்குப் பங்களிப்பு வழங்கப்படுகின்றது.
வாகனப் புகைப் பரிசோதனை சாதனங்களில் காணப்படும் நவீனத்துவ உயர் முன்னேற்றங்களுக்கு அமைய, பிரான்ஸ் நாட்டின் உற்பத்தியாளரின் CAPELEC எனும் சாதனத்தைப் பயன்படுத்த Drive green ஆரம்பித்தது. உலக சந்தையில் புத்தாக்கமான வர்த்தக நாமமாக அமைந்துள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி விநியோகத்தராகவும் திகழ்கின்றது. மேம்படுத்தப்பட்ட பாவனையாளர் பாதுகாப்புக்காகவும் சூழலுக்கு நட்பான பொறுப்பு வாய்ந்த வகையிலும் நவீன ஆய்வுகள், அபிவிருத்தி அலகின் உதவியுடன், அடுத்த தலைமுறை தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குவதில் CAPELEC புகழ்பெற்றுள்ளது.
அரசாங்கத்தின் வளி தர நியமங்களைப் பூர்த்தி செய்வதற்கு, Drive green இன் செயற்பாடுகளுக்கு இந்தத் தயாரிப்புகள் பங்களிப்பு வழங்குவதுடன், உலக புத்தாக்கத்தைத் தொடர்ச்சியாக நம் நாட்டிலும் பின்பற்ற ஏதுவாக அமைந்துள்ளது. Drive green இன் புதிய தொழில்நுட்பத்தினூடாக, எதிர்காலத்தில் எழக்கூடிய யூரோ நியம பரிசோதனைகள் போன்றவற்றை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டிய ஒரு நிலை எழும் போது, அவை மேற்கொள்வதற்குத் தயாரான நிலையில் நிறுவனத்தைப் பேணக்கூடியதாக இருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025