2025 ஜூலை 30, புதன்கிழமை

E. B. Creasy Solar உடனான SUNGROW பங்காண்மை தொடர்கிறது

Freelancer   / 2025 ஜூன் 09 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூரிய வலுப் பிறப்பாக்கத்தில் ஈடுபட்டுள்ள SUNGROW, E.B. Creasy & Co., PLC இன் புதுப்பிக்கத்தக்க வலுப் பிரிவான E.B. Creasy Solar உடன் கைகோர்த்துள்ள நிலையில், உள்நாட்டு சந்தையில் SUNGROW வலுக் களஞ்சியப்படுத்தல் கட்டமைப்புகளை அறிமுகம் செய்திருந்ததை அண்மையில் கொண்டாடியது.

இந்நிகழ்வு, சினமன் லைஃப் – சிட்டி ஒஃவ் ட்ரீம்ஸ் இல் நடைபெற்றதுடன், அதிகரித்துச் செல்லும் வலு சுதந்திரம் மற்றும் சிக்கனத்தை நிவர்த்தி செய்யும் வகையில், புத்தாக்கமான, தங்கியிருக்கக்கூடிய மற்றும் நிலைபேறான வலுத் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் நேரத்தியான நகர்வை முன்னெடுப்பதை கொண்டாடியிருந்தது. இல்லங்கள் மற்றும் வணிக பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட வலு களஞ்சியப்படுத்தல் கட்டமைப்புகளை அணுகுவதற்கு வசதியளிக்கும் வகையில் இந்தப் பங்காண்மை அமைந்துள்ளதுடன், புதுப்பிக்கத்தக்க வலுவினால் வலுவூட்டப்பட்ட எதிர்காலத்தை நோக்கி இலங்கை பயணிப்பதை உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .