2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

ENOVA வின் புதிய தயாரிப்புகள் அறிமுகம்

Janu   / 2025 நவம்பர் 24 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி உணவெண்ணெய் உற்பத்தி நிறுவனமான வெங்கடேஸ்வரா ஆக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்  தனது புதிய தயாரிப்பு வரிசையில் உணவெண்ணெய், மார்ஜரின் மற்றும் பேக்கரி கொழுப்பு தயாரிப்புகளுடன்  தனது முதன்மை பிராண்டான ENOVA பெயரில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.

இந்த வைபவம், கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில், சமுத்திரா பால்ரூமில் வௌ்ளிக்கிழமை (21) அன்று நடந்த ஆண்டு மாநாடு மற்றும் தயாரிப்பு வெளியீட்டு விழாவில் பல்வேறு வணிகத் தலைவர்கள், கூட்டாளர்கள்    பங்கேற்றனர்.

புதிய தயாரிப்புகள், வீடுகளிலும், தொழில்துறை சமையல்/பேக்கரி பயன்பாடுகளிலும் தரமான பொருட்களை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வசதியும், தரமும், நம்பிக்கையும் மையக் கருத்தாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தயாரிப்புகள், உள்ளூர் FMCG சந்தையிலும், நவீன வணிக தளங்களிலும் வியாபார குறியீட்டின் நிலைப்பாட்டையும் வலுப்படுத்துகின்றன.

2014 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்ட வெங்கடேஸ்வரா ஆக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், வட மாகாணத்தின் முதல் மற்றும் மிகப் பெரிய உணவெண்ணெய் உற்பத்தி நிலையம் ஆகும். RBD பாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், அரிசி Bran எண்ணெய் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்நிறுவனம், சமீபத்தில் மார்ஜரின், பேக்கரி கொழுப்பு மற்றும் பேன் லூப்ரிகேன்ட் தயாரிப்புகளையும் தனது வரிசையில் சேர்த்துள்ளது. தற்போது மொத்த விற்பனைக்கு இணையாக சில்லறை மற்றும் நாடு முழுவதும் நவீன வணிக விநியோகத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

உற்பத்தித் துறையில் மேம்பட்ட தொழில்நுட்பங்களும், கடுமையான தரக் கட்டுப்பாடுகளும் காரணமாக நிறுவனம் புகழ் பெற்றுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னோடியான மேம்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்நிறுவனம், உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் தரத்தை உறுதி செய்கிறது. இந்நிறுவனம் ISO 9001:2015, HACCP, GMP மற்றும் ஹலால் சான்றிதழ்கள் பெற்றுள்ளது.

வெளியீட்டு விழாவில் உரையாற்றிய நிறுவனத் தலைவர் பிராட்லி எமர்சன் கூறியதாவது: "வெங்கடேஸ்வரா ஆக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்களின் பிறப்பும் வளர்ச்சியும், எங்கள் நாட்டின் பொருளாதார வலிமை புவியியல் எல்லைகளால், மக்களின் பார்வையும் உறுதியும் தான் அதை நிர்ணயிக்கிறது என்பதை நினைவூட்டுகின்றன.   சுகன்தனின் தொழில் முனைவு பயணம் தைரியம், தன்னம்பிக்கை மற்றும் இயலாததை இயலுமையாக மாற்றும் மனப்பாங்கிற்கான சிறந்த சான்றாகும்.

ஒரு நிர்வாக சபையாக, இந்த முக்கிய தருணத்தில் நிறுவனத்துடன் நின்று செயல்படுவது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சி திறனை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். இது உற்பத்தித் துறையை மட்டுமல்லாமல், நாட்டின் முழுவதும் புதிய சாத்தியங்கள், புதுமைகள் மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் என நம்புகிறோம் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X