2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

Expo 2020 டுபாய் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது

Editorial   / 2020 ஜூன் 11 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையால் (SLEDB) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Expo 2020 டுபாய் நிகழ்வு, ஓர் ஆண்டால் பிற்போடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு, 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வைப் பிற்போடுமாறு, Bureau International des Expositions (BIE) இன் மூன்றில் இரண்டு அங்கத்தவர் கோரியிருந்ததைத் தொடர்ந்து, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில், கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ள நிலையில், நாடுகளிடையிலான பிரயாணங்களும் தடைப்பட்டு உள்ளமையால், டுபாயிலுள்ள ஏற்பட்டாளர்கள், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அரச அதிகாரிகளுடன் இணைந்து, வேர்ள்ட் எக்ஸ்போவின் கண்காணிப்புக் குழுவான Bureau International des Expositions (BIE) இடம் இந்த நிகழ்வைப் பிற்போடுமாறு கோரியிருந்தனர்.  

Expo 2020 டுபாய் நிகழ்வில், இலங்கையின் பங்கேற்பை உறுதி செய்யும் அமைப்பான ஏற்றுமதி அபிவிருத்தி சபை, தொழிற்றுறை ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ், சம்பந்தப்பட்ட அரசாங்கம், தனியார் துறைகளைச் சேர்ந்தவர்களுடன் கலந்தாலோசித்து, இந்த நிகழ்வைப் பிற்போடுவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கொவிட்-19 தொற்றுப் பரவலின் தாக்கம் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் உணரப்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இந்த நிகழ்வு, தற்போது பிற்போடப்பட்டுள்ளமை காரணமாக, இலங்கை கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள புதிய சவால்களுக்கு, எவ்வாறு வெற்றிகரமாக முகங்கொடுப்பது என்பது தொடர்பான வியூகங்களுடன் இந்நிகழ்வில் பங்கேற்று, நாட்டின் சுற்றுலாத்துறை, ஏற்றுமதிகள், முதலீடுகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X