2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

HNB Grameen சமய அனுஷ்டானங்கள்

Gavitha   / 2016 ஒக்டோபர் 03 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

HNB Grameen தனது வருடபூர்த்தியைக் குறிக்கும் வகையில் சமய அனுஷ்டான நிகழ்வுகளை கம்பனி வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. பௌத்த சமய அனுஷ்டானங்கள் இரவு முழுவதும் பிரித ஓதலுடன் நடைபெற்றதுடன், மறுநாள் காலை 15 பௌத்த துறவிகளுக்கு தானங்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. பணிப்பாளர்கள், கூட்டாண்மை முகாமைத்துவம், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என அனைவரும் இந்நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர்.  

வருட பூர்த்தியைக் கொண்டாடும் நிகழ்வுகளின் ஒரு அங்கமாக, தேவத்தை அன்னை மாதா தேவாலயத்தின் மன்றாடும் பகுதியைப் புனருத்தாரணம் செய்திருந்தது. மெழுகுதிரி ஏற்றல் என்பது பக்தர்கள் இறைவனுக்கு செலுத்தும் ஒரு காணிக்கையாக கருதப்படுகிறது. தேவத்தை ஆலயத்தின் பேராயர் விக்டர் ஜயமான்ன அவர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தக் கோரிக்கையின் பிரகாரம் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

புனருத்தாரணம் செய்யப்ட்ட பகுதியின் அங்குரார்ப்பண நிகழ்வு, அதனைத் தொடர்ந்து இடம்பெற்றதுடன், 2,500 வாடிக்கையாளர்களின் பங்குபற்றலுடன் நன்றி செலுத்தும் இறைவணக்க நிகழ்வும் நடைபெற்றது. நிறுவனத்தின் சார்பாக, முகாமைத்துவ பணிப்பாளர், கூட்டாண்மை முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X