Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மே 07 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
COVID-19 தொற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் ஹேலிஸ் குழுமத்தின் இணை நிறுவனங்களான Haycarb, DPL மற்றும் Eco Solutions ஆகியன இணைந்து 10.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒரு தொகை வைத்திய உபகரணங்கள் மற்றும் தனி நபர் பாதுகாப்பு உபகரணங்களை, IDH மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவிற்கு அன்பளிப்பு செய்துள்ளன.
இவ்வாறான உலகளாவிய மற்றும் தேசிய நெருக்கடி நிலையின் போது இலங்கை அரசுடன் முப்படையினர், பொலிஸார், சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் மருத்துவ தொழிலாளர்கள் மட்டுமன்றி அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அனைத்து திணைக்களங்களும் மிகவும் பாரிய அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதம் குறித்து ஹேலிஸ் குழுமம் விசேடமாக கருதுவதுடன், நிறுவனத்தின் இந்த முன்முயற்சியானது மிகவும் சிறிய விடயமாகவே கருதுகிறது. மேலும், நூற்றாண்டில் ஏற்பட்ட மிகவும் மோசமான நெருக்கடியிலிருந்து இலங்கையை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவும் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு சிலர் தங்களது உயிரைக்கூட பொருட்படுத்தாமல் நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.
மூன்று நிறுவனங்களிலுமுள்ள ஊழியர்கள் தன்னார்வத்துடன் 5.3 மில்லியன் ரூபாயை வழங்கி இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதுடன் ஒவ்வொரு நிறுவனமும் இந்த நன்கொடைகளை 1:1 அடிப்படையில் செய்தமை விசேட அம்சமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago