2025 மே 19, திங்கட்கிழமை

INSEE சீமெந்தின் வியாபார பங்காளர்கள் கௌரவிப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதுமான வியாபார பங்காளர்களை கௌரவிக்கும் வருடாந்த INSEE வியாபாரப் பங்காளர் விருதுகள் 2020 நிகழ்வை INSEE சீமெந்து அண்மையில் ஹம்பாந்தோட்டை ஷங்கிரி-லா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில், 2019ஆம் ஆண்டில் நிறுவனத்தில் சிறப்பாக செயலாற்றிய வியாபார பங்காளர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.  

‘புது உத்வேகத்துடன் முன்நோக்கி’ (Nawa Jawayakin Peratama) எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வை, நிறுவனத்தின் விற்பனை பிரிவின் தலைமை அதிகாரி சுஜீவ பெரேரா ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து INSEE சீமெந்து இலங்கை நிறுவனத்தின் தவிசாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நந்தன ஏக்கநாயக்க  உரையாற்றினார்.

கடந்த ஆண்டில் நிறுவனம் பதிவு செய்திருந்த பெறுபேறுகள் தொடர்பில் இவர் விளக்கமளித்ததுடன், INSEE பங்காளர் வலையமைப்பினூடாக சந்தை சென்றடைவு, புதிய சந்தை பிரவேச செயற்பாடுகளுக்காக தூரநோக்குடைய இலக்குகள் எவ்வாறு பங்களிப்பு வழங்கியிருந்தன என்பது பற்றியும் தெரிவித்திருந்தார்.

இந்த விசேட விருதுக்காக மூன்று செயற்றிட்டங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. வெற்றியீட்டிய செயற்றிட்டத்தைச் சகல வியாபார பங்காளர்களும் பங்கேற்று, நேரடியாக தமது வாக்குகளை அளித்து தெரிவு செய்தனர். கண்டி, ‘நியூ சென்ரல் ஸ்டோர்ஸ்’ ஹார்ட்வெயார் இந்த விருதை வென்றிருந்தது. 2019ஆம் ஆண்டில் தன்னியக்கமான விற்பனை செயன்முறையை செயற்படுத்தி இருந்தமைக்காக வெற்றியாளருப்பு இவ்விருது வழங்கப்பட்டது.

மேலும், INSEE சீமெந்து நிறைவேற்று அதிகாரிகளின் குழுவானது, ஒன்பது தேசிய விருதுகளை வழங்கியிருந்தது. 2020 ஆம் ஆண்டின் சிறந்த வியாபார பங்காளருக்கான விருது நியு சென்ரல் ஹார்ட்வெயார் சுவீகரித்துக்கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X