2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

IWW Steel நிறுவனத்தின் RS QST கம்பிகளின் காட்சிக் கூடம்

A.P.Mathan   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி உருக்கு இரும்பு RS QST கம்பிகளின் உற்பத்தியாளரான IWW Steel நிறுவனம், அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஏழாவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தையில் பங்கேற்றிருந்தது. இந்த கண்காட்சியில் நிறுவியிருந்த IWW Steel இன் காட்சி கூடத்துக்கு பெருமளவான விருந்தினர்கள் வருகை தந்திருந்தனர்.

IWW Steel தயாரிப்புகளின் அறிமுகத்துக்கு மேலதிகமாக, நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு முகாமையாளர் திரு. அபு நிடால், விருந்தினர்களுக்கு விசேடமான பயிற்சிப்பட்டறையை முன்னெடுத்திருந்தார். இந்த பயிற்சிப்பட்டறையின் மூலமாக வெவ்வேறு நிர்மாணத் தேவைகளை நிவர்த்தி செய்ய சரியான உருக்கு இரும்பு கம்பிகளை தெரிவு செய்வது பற்றிய விளக்கங்களையும், உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கு பொருத்தமான உருக்கு இரும்பு கம்பிகளை பயன்படுத்துவது பற்றியும் விளக்கமளித்திருந்தனர்.

IWW Steel நிறுவனம் தனது தயாரிப்புகளை RS வர்த்தக நாமத்தின் கீழ் வழங்கியிருந்தது. நிறுவனத்தின் உற்பத்தியான RS QST RB 500 உருக்கு இரும்பு கம்பி சர்வதேச தர நியமங்களுக்கமைய உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், இறக்குமதி செய்யப்படும் உயர் தரம் வாய்ந்த மூலப் பொருட்களைக் கொண்டு, நவீன தொழில்நுட்பம் மற்றும் இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி மேலதிக வலிமையைச் சேர்க்கும் வகையில் உற்பத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் மூலமாக 2015 இல் RS QST RB 500 உருக்குக் கம்பிகளுக்கு ளுடுளு 375:2009 தரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

IWW Steel நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் திரு. ரவி குமார் யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தையில் நிறுவப்பட்டிருந்த நிறுவனத்தின் காட்சி கூடத்துக்கு கிடைத்திருந்த அமோக வரவேற்பு பற்றியும், தமது தயாரிப்புகள் தொடர்பில் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விழிப்புணர்வு பற்றியும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

சந்தைப்படுத்தல் அதிகாரியான திரு. பி. சிவனேசன் கருத்து தெரிவிக்கையில், 'யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தையில் பங்குபற்றிய சுமார் 350 நிறுவனங்களில் ஒன்றாக பங்கேற்பதற்கு வாய்ப்பு கிடைத்திருந்ததையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். யாழ்ப்பாண பிராந்தியத்தில் தற்போது முன்னெடுக்கப்படும் பல பாரிய மற்றும் சிறியளவிலான நிர்மாண செயற்பாடுகளின் காரணமாக IWW Steel கம்பனி காட்சி கூடத்துக்கு பெருமளவான விருந்தினர்கள் விஜயம் செய்திருந்தனர். எமது தயாரிப்புகள், உற்பத்தித்திறனை அதிகரித்துக் கொள்வது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்ததன் மூலமாக எமது விருந்தினர்களுக்கு நாம் பெறுமதி சேர்த்திருந்தோம். வட பிராந்தியத்தின் வளர்ந்து வரும் சமூக வாழ்க்கை முறைக்கு மேலும் திறன் சேர்க்கும் வகையில் நாம் இந்த செயற்பாட்டை முன்னெடுத்திருந்தோம். இந்த செயற்பாட்டுக்காக IWW Steel ஊழியர்கள் தமது நேரத்தையும், வளங்களையும் அர்ப்பணித்திருந்தனர். எவ்வாறாயினும், வாடிக்கையாளர்களுக்கு நிர்மாண செயற்பாட்டின் போது செலவுகளை குறைத்துக் கொள்வது பற்றி எம்மால் விளக்கமளிக்க முடிந்தது' என்றார்.

2010 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட IWW Steel நிறுவனம், நாட்டின் கட்டிட நிர்மாணத்துறைக்கு பொருத்தமான பல்வேறு வகையான உருக்கு கம்பிகளை உற்பத்தி செய்கிறது. சகல IWW Steel தயாரிப்புகளையும் சகாயமான விலையில் கொள்வனவு செய்து கொள்ள முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X