Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
IWW ஸ்டீல் பிரைவட் லிமிட்டெட் தனது RS QST RB 500 உருக்கு கம்பி உற்பத்திக்காக இலங்கை கட்டளைகள் நிறுவனத்திடமிருந்து SLS 375:2009 தரச்சான்றை பெற்றுள்ளது.
கம்பனி வளாகத்தில் இடம்பெற்ற வைபமொன்றின் போது, நிறுவனத்தின் முகாமையாளரால் இந்தச் சான்றிதழ் IWW ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை அதிகாரியிடம் வழங்கப்பட்டிருந்தது.
RS QST RB 500 உருக்கு கம்பி என்பது, சர்வதேச தர நிர்ணயங்களுக்கமைய உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், இந்தியா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர் தரம் வாய்ந்த இரும்பு உலோகங்களின் மூலம் நவீன தொழில்நுட்பங்களையும், இரசாயனப்பொருட்களையும் கொண்டு உயர் வலிமை ஏற்படுத்தப்படும் வகையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கம்பனிக்கு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டமை தொடர்பில் IWW ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கருத்து தெரிவிக்கையில், 'மிக அண்மையில் நாம் உருக்கு கம்பிகள் உற்பத்தியை ஆரம்பித்திருந்தோம். எனவே, இந்த SLS தரச்சான்றிதழ் எமது நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த S: சான்றிதழின் மூலம் RS QST RB 500 உருக்கு கம்பி தயாரிப்புகள், இலங்கையின் மிகவும் உயர்ந்த தர தயாரிப்பாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இந்த தயாரிப்பு, சர்வதேச தராதரங்களுக்கு நிகரானவையாகவும் அமைந்துள்ளன என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. RS QST RB 500 உருக்கு கம்பி; உற்பத்திக்கு நாம் உலகின் சிறந்த மூலப்பொருட்களையும், வலிமையாக்கும் பொருட்களையும் பயன்படுத்துகிறோம். நாம் நவீன இயந்திரசாதனங்கள் பயன்படுவதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் தொடர்ச்சியான மேற்பார்வை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
உற்பத்தி செய்யப்படும் கம்பிகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில், எழுமாற்றுப் பரிசோதனைகள் அடிக்கடி மேற்கொள்ளப்படுகின்றன. எமது தயாரிப்புகளுக்கு அதிகளவு பெறுமதி சேர்க்கும் வகையில், தொடர்ச்சியான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன' என்றார்.
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago