2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

K & D மனேஜ்மன்ட் சேர்விசஸ் 10 வருட பூர்த்தி

A.P.Mathan   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் அமைந்துள்ள முன்னணி கடன் மீள அறவிடும் நிறுவனமான K & D மனேஜ்மன்ட் சேர்விசஸ் லிமிட்டெட் தனது 10 வருட பூர்த்தியை கொண்டாடியிருந்தது. களனியில் அமைந்துள்ள தலைமையகத்தில் நிறுவனத்தின் தலைமை அதிகாரி திருமதி கிரேஸ் சில்வாவின் தலைமைத்துவத்தின் கீழ் பௌத்த மற்றும் கிறிஸ்தவ மத வழிபாடுகளுக்கு முக்கியத்துவமளித்து இந்த வைபவங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இரவு முழுவதும் பிரித் ஓதும் நிகழ்வு இடம்பெற்றதுடன், தானம் வழங்கும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேலும், கம்பனியின் பணிப்பாளர்கள், விருந்தினர்கள் மற்றும் K & D மனேஜ்மன்ட் சேர்விசஸ் ஊழியர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன், புனித ஜெபமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

K & D மனேஜ்மன்ட் சேர்விசஸ் லிமிட்டெட், முன்னணி நிறுவனங்களான HSBC, NTB, கொமர்ஷல் வங்கி, சணச அபிவிருத்தி வங்கி மற்றும் ஃபினான்ஸ் கம்பனிகளான சென்ரல் ஃபினான்ஸ், சிங்கர் ஃபினான்ஸ், அஸெட்லைன் ஃபினான்ஸ் மற்றும் அபான்ஸ் ஃபினான்ஸ் ஆகியவற்றுக்கு சேவைகளை வழங்கி வருகிறது.

நாடு முழுவதும் காணப்படும் பல நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களினால் வழங்கப்படும் கடன்களை வாடிக்கையாளர்கள் செலுத்தத்தவறும் பட்சத்தில் அவற்றை மீள வசூலிக்கும் வகையில் K & D மனேஜ்மன்ட் சேர்விசஸ் லிமிட்டெட் 100 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு சேவைகளை வழங்கி வருகிறது.

வருட பூர்த்தி நிகழ்வில் K & D மனேஜ்மன்ட் சேர்விசஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு. காமினி சில்வா கருத்து தெரிவிக்கையில், 'குறுகிய காலப்பகுதியில் கூட்டாண்மைத் துறையில் நிறுவனம் பெருமளவு வரவேற்பைப் பெறுவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளது. தனது வியாபார செயற்பாடுகளை பன்முகப்படுத்தக்கூடிய வகையில் இந்த செயற்பாடுகள் அமைந்துள்ளன' என்றார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'நாட்டில் கடன் மீள வசூலிக்கும் செயற்பாட்டில் நாம் முன்னணி நிறுவனமாக காணப்படுகிறோம். கடன் மீள வசூலிக்கும் செயற்பாட்டில் நாம் நிபுணத்துவமான முறையை பின்பற்றி வருவதுடன், நம்பகத்தன்மை மற்றும் சிறந்த நடத்தைகளை பேணி வருகிறோம். ஒவ்வொரு வருடமும் சேவைச் சிறப்புகளை கௌரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்யும் ஒரே கடன் மீள வசூலிக்கும் நிறுவனமாக நாம் திகழ்கிறோம். இதன் மூலமாக ஊழியர்களின் திறமைகள் கௌரவிக்கப்படுவதுடன், அவர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசுகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயண வாய்ப்புகள் போன்றன வழங்கப்படுகின்றன. உள்நாட்டு கடன் மீள வசூலிக்கும் துறையில் சர்வதேச தரங்களை பேண நாம் திட்டமிட்டுள்ளதுடன், எமது குழும கம்பனியின் தரத்தை மேம்படுத்தவும் நாம் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

K & D குரூப் ஒஃவ் கம்பனிஸில் K & D மனேஜ்மன்ட் சேர்விசஸ், K & D டிஸ்ரிபியுட்டர்ஸ், K & D இன்வெஸ்ட்மன்ட் மற்றும் ரியால்டி அன்ட் யுனைட்டட் புரொஃபெஷனல் ஏஜென்ஸி போன்றன அடங்கியுள்ளன.

K & D டிஸ்ரிபியுட்டர்ஸ் களனி கேபிள்ஸ் மற்றும் ACL கேபிள்ஸ் தயாரிப்புகளின் விநியோகஸ்த்தராக செயலாற்றி வருகிறது. K & D இன்வெஸ்ட்மன்ட் அன்ட் ரியால்டி கம்பனி முதலீடுகள், சொத்துக்கள் மேம்படுத்தல் மற்றும் சொத்துக்கள் விற்பனை தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. யுனைட்டட் புரொஃபெஷனல் ஏஜென்ஸி நிறுவனங்கள் மற்றும் இல்லங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் பூச்சிகளிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X