Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2025 ஜூலை 11 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
Kia நிறுவனமானது இலங்கையின் வாகனத் துறையில் மற்றுமொரு மைல்கல்லை ஏற்படுத்தியுள்ளது.
2026 Sportage மற்றும் 2026 Carnival Hybridஆகிய இரண்டு புதிய மொடல்களை கொழும்பில் சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்ற பிரத்தியேக ஊடகவியலாளர் சந்திப்பில் அறிமுகப்படுத்தியது.
இந்த உலகளாவிய வாகன சின்னங்கள் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யப்பட்டமையானது, புத்தாக்கத்திலான வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நிலையான இயக்கம் ஆகியவற்றைக் கலந்து இலங்கை வாகன ஓட்டுனர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த வாகனங்களை வழங்குவதற்கான Kia வின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நிகழ்வில் பேசிய Kia மோட்டார்ஸ் (லங்கா) தலைவர் மஹேன் தம்பையா, 'இன்று, இலங்கைக்கு ஒன்றல்ல, இரண்டு முழுமையாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட மொடல் வாகனங்களை அறிமுகம் செய்வதன் மூலம் ஒரு உற்சாகமிகு தருணத்தை இங்கு கொண்டு வந்துள்ளோம். புதிய Sportage Hybrid ஒவ்வொரு சாகசத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் தயாராக உள்ளது, அதே வேளை Carnival Hybrid நவீன குடும்ப போக்குவரத்திற்கு புதிய தரநிலைகளை அமைக்கிறது. இரண்டும் Kia வின் ஊக்கமளிக்கும் இயக்கம்| தத்துவத்தை உள்ளடக்கியதுடன் மற்றும் அவர்களின் பிரிவுகளில் எதிர்பார்ப்புகளை மீள் வரையறை செய்கிறது.'
2026 Kia Sportage வின் அதிகம் விற்பனையாகும் SUV யின் மிகவும் மேம்படுத்தப்பட்ட வடிவாக்கத்தை பிரதிபலிக்கிறது, உலகளவில் ஏழு மில்லியனுக்கும் அதிகமான அலகுகள் விற்பனை செய்யப்படுகின்றன. நடுத்தர அளவிலான SUV பிரிவில் புதிய தரநிலைகளை அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட Sportage> ஒரு தைரியமான புதிய தோற்றமாக திகழ்வதுடன், அதிநவீன ஹைப்ரிட் பவர்டிரெய்ன் மற்றும் ஏராளமான தொழில்நுட்ப மேம்பாடுகளை ஒருங்கிணைக்கிறது.
வெளிப்புறமாக, Sportage இன் குறிப்பிடத்தக்க நிழல் கரடுமுரடான வடிவங்களுடன் ஒன்றிணைக்கும் மென்மையான மேற்பரப்புகளால் வரையறுக்கப்படுகிறது,
அதே நேரத்தில் தனித்துவமான டைகர் நோஸ் கிரில் மற்றும் LED ஸ்டார் மேப் லைட்டிங் சாலையில் தெளிவான நிலையை உருவாக்குகின்றன. புதிய முன் மற்றும் பின்புற பம்பர்கள், 17- மற்றும் 18-அங்குல அலாய் வீல் தெரிவுகளுடன், சக்திமிகுந்த நிலைப்பாட்டை நிறைவு செய்கின்றன.
காரின் உள்ளறையானது ஒரு ஆடம்பரமான, விசாலமான சூழலை வழங்குகிறது. பின்புறமாக அமரும் பயணிகள் ஒரு மீட்டருக்கும் அதிகமான கால் இடவசதியால் பயனடைகிறார்கள், அதே நேரத்தில் சரக்குபொதிகளுக்கான இடமானது 587 லிட்டராக விரிவடைவதுடன் இரண்டாவது வரிசை இருக்கைகளை மடித்தால் 1,776 லிட்டராக விரிவடைகிறது.
ஓட்டுநர் அனுபவத்தினை மேம்படுத்தும் வகையில் மையத்தில் இணைக்கப்பட்ட கார் நேவிகேஷன் காக்பிட் உள்ளது, இதில் இரட்டை 12.3-அங்குலம் வளைந்த பனோரமிக் காட்சிகள் உள்ளன.
ஹர்மன் கார்டன் பிரீமியம் ஆடியோ சிஸ்டம், 3 D வியூவுடன் கூடிய 360-பாகை சரவுண்ட் வியூ மானிட்டர், வயர்லெஸ் சார்ஜிங் பேட் மற்றும் மல்டி-மோட் டச்பேட் கட்டுப்பாடுகள் ஆகியவை ஓட்டுநர் அனுபவத்தை மேலும் மேம்படுத்துகின்றன.
1.6 லிட்டர் ஹைப்ரிட் பெற்றோல் பவர்டிரெய்ன், ஒவ்வொரு பயணத்திலும் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை முன்னணியில் வைக்கும் மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகளுடன் இணைந்து, சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட எரிபொருள் செயல்திறனை வழங்குகிறது.
2026 Kia Carnival Hybrid - இடம், ஸ்டைல் மற்றும் நிலையான செயல்திறன்
கவனத்தை ஈர்க்கும் வகையில், புதிய 2026 Kia Carnival Hybrid -, அதிநவீன ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் விசாலமான தன்மை மற்றும் பிரீமியம் வசதியை ஒருங்கிணைக்கிறது.
Carnival இன் புதுப்பிக்கப்பட்ட வெளிப்புற ஸ்டைலிங் ஒரு தைரியமான SUV போன்ற இருப்பைத் தழுவுகிறது. ஒரு சிற்ப கிரில், சிக்னேச்சர் அம்பர் ஸ்டார் மேப் பகல்நேர ரன்னிங் விளக்குகளுடன் கூடிய கனசதுர ஹெட்லேம்ப்கள், மிருதுவான பின்புற வரையறைகள் மற்றும் கண்கவர் 18 அங்குல அலாய் வீல்கள் ஒரு தனித்துவமான மற்றும் நவீன தோற்றத்தை உருவாக்குகின்றன.
உட்புறத்தை பார்க்கும்போது, Carnival தொடர்ந்து சிறந்த பல்துறைத்திறனை வழங்குகிறது, ஏழு அல்லது எட்டு பயணிகளுக்கு 145.1 கன அடி வரை சரக்கு இடத்தை வழங்குகிறது. உள்ளறையின் குறைந்தபட்ச வடிவமைப்பு குறிப்புகள், 12.3-அங்குல டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் திரையுடன் கூடிய வளைந்த பனோரமிக் இரட்டை காட்சி மற்றும் பெரிய இரட்டை கப்ஹோல்டர்கள் போன்ற நடைமுறை தொடுதல்கள் உள்ளன.
ஊயசniஎயட ர்லடிசனை 54மறு மின்சார மோட்டாருடன் 1.6-லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட எஞ்சினை இணைக்கிறது, இது 242 குதிரைத்திறன், 271 lb-ft முறுக்குவிசை மற்றும் மதிப்பிடப்பட்ட 14 km லிட்டர் எரிபொருள் செயல்திறனை வழங்குகிறது.
Carnival Hybrid 54kW போதுமான இடத்தைக் கொண்டிருந்தாலும், 7 இருக்கைகள் கொண்ட அமைப்பின் ஒரு பகுதியாக அதன் இரண்டாவது வரிசை ஏஐP ரிலாக்சேஷன் லவுஞ்ச் இருக்கைகள், இன்றைய வீதிகளில் மிகவும் ஆடம்பரமான பின்புற பயணிகள் அனுபவத்தை வழங்குகின்றன.
குறிப்பாக, Kia Carnival Hybrid அதன் ஈர்க்கக்கூடிய பரிமாணங்கள் இருந்தபோதிலும், உயர்நிலை SUV ன் எளிமையுடன் வாகனத்தை செலுத்துவதற்கு வழிவகுக்கிறது..
உத்தரவாதம் மற்றும் உறுதிமொழி
Kia Sportage மற்றும் முயை Kia Carnival ஆகிய இரண்டும் விரிவான ஐந்து ஆண்டுகள் அல்லது 150,000 கிமீ உத்தரவாதத்தால் (எது முதலில் நிகழ்கிறதோ அது) ஆதரிக்கப்படுகின்றன, இது முயை மோட்டார்ஸ் லங்காவின் வாகனங்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மையின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
Kia Motors (லங்கா) 1996 முதல் இலங்கையில் Kia வர்த்தகநாமத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறது, மேலும் நாட்டின் சிறந்த மதிப்பிற்குரிய வாகன வர்த்தக நாமங்களில் ஒன்றாக அதை மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. 1944 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Kia 2024 ஆம் ஆண்டில் 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 3,089,300 அலகுகளை விற்பனை செய்தது. Kia மின்சார வாகனங்களுக்கான மாற்றத்தை முன்னெடுத்துச் செல்கிறது மற்றும் உலகெங்கிலும் உள்ள நகர்ப்புற சவால்களைச் சமாளிக்க உதவும் வகையில் வாகன இயக்கவியல் சேவைகளைப் பின்பற்றுகிறது.
நிறுவனத்தின் வர்த்தகநாமத்தின் முழக்கமான — "Movement that inspires" — எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட அற்புதமான, ஊக்கமளிக்கும் அனுபவங்களுடன் உலகை ஆச்சரியப்படுத்துவதற்கான Kia வின் உலகளாவிய உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago