2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

Lankapak 2025 கண்காட்சியில் Star Global Ventures, Krup Global, மற்றும் DK International தீர்வுகள்

Freelancer   / 2025 ஒக்டோபர் 20 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

Star Global Ventures, Krup Global Pvt Ltd மற்றும் DK International ஆகியன 2025 ஒக்டோபர் 23 முதல் 25 வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முன்னெடுக்கப்படவுள்ள Lankapak கண்காட்சி 2025 பங்கேற்கவுள்ளன. இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச பொதியிடல் மற்றும் தொழிற்துறைகளுக்கு வலிமை சேர்க்கும் வகையில் அமைந்த பரந்தளவு இயந்திரங்கள் மற்றும் தொழிற்துறை நிலைபேறான தீர்வுகள் போன்றவற்றை காட்சிப்படுத்தும்.

உலகிற்கு ART (Affordable, Reliable, Trustable) Technology ஐ அறிமுகம் செய்த Krup Global Pvt Ltd இனால், இந்தக் கண்காட்சியின் போது, அந்தத் தொழில்னுட்பம் பற்றிய வெளிப்படுத்தல்கள் முன்னெடுக்கப்படும். ART Technology இனால், சகாயமான, தங்கியிருக்கக்கூடிய மற்றும் நம்பிக்கையை வென்ற தீர்வுகள் வழங்கப்பட்டு, முன்னேற்றத்தை எய்துவது, வினைத்திறனை மேம்படுத்துவது மற்றும் உலகளாவிய ரீதியில் நிலைபேறான தாக்கத்தை ஏற்படுத்தும் வசதிகள் வழங்கப்படும்.

நிகழ்வில் காட்சிப்படுத்தப்படவுள்ள இயந்திரங்கள் மற்றும் சாதனங்களில், MOSCA வர்த்தக நாமத்திலமைந்த Strapping Machine அடங்கியிருக்கும். இதனூடாக, உலகத் தரம் வாய்ந்த அலங்காரப் பட்டிப்பின்னல் தீர்வுகள் வழங்கப்படுவதுடன், பரந்தளவு தொழிற்துறைகளுக்கு பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான பொதியிடலும் வழங்கப்படுகிறது. அத்துடன் PN SHAR Testing Equipment காட்சிப்படுத்தப்படும். இதனூடாக மேம்படுத்தப்பட்ட தர உறுதிப்படுத்தல், துல்லியமான மற்றும் தங்கியிருக்கக்கூடிய பரிசோதனைகளை தொழிற்துறை பிரயோகங்களுக்கு மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். hand pallet trucks, forklifts, stackers, reach trucks போன்ற OLIFT Material Moving Equipment களும் இங்கு காட்சிப்படுத்தப்படும். OLIFT என்பது உயர் ரக வர்த்தக நாமமாக கருதப்படுவதுடன், உறுதியான, பாவனையாளருக்கு நட்பான கையாளல் போன்றவற்றை வழங்கி, மூலப்பொருள் நகர்வை பாதுகாப்பானதாகவும், வினைத்திறனானதாகவும் பேண உதவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .