2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

MDRT சம்மேளனத்தில் AIA முன்னிலை

Gavitha   / 2016 மார்ச் 29 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

காப்புறுதித் துறையில் உலகிலேயே மிகவும் முதற்தரமானதும் கௌரவமானதுமான மில்லியன் டொலர் வட்ட மேசை சம்மேளனத்துக்கு இலங்கை சார்பில் அதிக எண்ணிக்கையான 63 பேரைத் தகுதி பெறச் செய்ததன் ஊடாக கௌரவத்துக்குரிய MDRT பட்டியலில் முன்னணி நிறுவனங்களின் ஒன்றாக AIA தன்னை நிலை நிறுத்தியுள்ளது. 48 வெல்த் பிளேனர்கள் மற்றும் 15 பேங்க்அஷூவரன்ஸ் (காப்புறுதி விற்பனை) அதிகாரிகள் இதில் அடங்குவதுடன், மீண்டும் ஒருமுறை தேசத்தின் சிறந்த ஆலோசகர்களை AIA கொண்டுள்ளதை இது உறுதிப்படுத்தியுள்ளது.

ஆயுள் காப்புறுதித் துறை மற்றும் நிதிச் சேவைகள் வியாபாரத்தில் உலகிலேயே மிகவும் முதற்தரமான, கௌரவமான மில்லியன் டொலர் வட்ட மேசைச் சம்மேளனம் கருதப்படுகின்றது. அதன் அங்கத்தவர்கள் குறிப்பிடத்தக்களவு கட்டுப்பணம், தரகு, மற்றும் வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பதுடன், சிறப்பான நிபுணத்துவ அறிவு, கண்டிப்பான ஒழுக்க நடத்தை மற்றும் சிறப்பான வாடிக்கையாளர் சேவையையும் வெளிப்படுத்த வேண்டும். இச்சாதனையாளர்கள் அனைவரையும் AIA குழுமத்தின் பிரதான நிறைவேற்றதிகாரியும் தலைவருமான மார்க் டக்கர் இலங்கைக்கு விஜயம் செய்து விருந்துபசாரத்திலும் பங்குபற்றி தனிப்பட்ட முறையில் பாராட்டினார். இந்த விஜயமானது, இலங்கையில் முதற்தர MDRT நிறுவனமாக AIA இனைத் திகழச் செய்த இச்சாதனையாளர்களின் கடுமையான உழைப்பு மற்றும் உயர் ஆற்றல் கொண்ட நிபுணத்துவத்துக்கு வழங்கிய கௌரவமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X