2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

Miss Intercontinental 2016 நிகழ்ச்சியில் Biona

Gavitha   / 2016 ஒக்டோபர் 04 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடல்நலம் மற்றும் அழகியல் சார்ந்த துறையில் நம்பிக்கை வாய்ந்த பாரம்பரியத்தைக் கொண்ட Biona, Miss Intercontinental 2016 அழகுராணி தெரிவு நிகழ்வுக்கான அழகியல் பங்காளியாக கைகோர்த்துள்ளது.

மருந்துகள் மற்றும் அழகியல் ஊட்டச்சத்துக்களின் உலகளாவிய உற்பத்தியாளரான Natures Only நிறுவனத்தின் முன்னணி வர்த்தக நாமங்களுள் Biona ஒன்றாகும்.   

Miss Intercontinental 2016 எனும் கிரீடத்துக்காக போட்டியிடும் அழகுராணிகள் உலகின் சகல பாகங்களிலிருந்தும் இலங்கைக்கு வருகை தரவிருப்பதால், இயற்கை வனப்பும் கீர்த்திமிக்க கலாசார மரபும் வாய்ந்த இலங்கைக்கு 2016ஆம் ஆண்டு ஓர் விசேட ஆண்டாக அமைந்துள்ளது. கோலாகலமாக நடைபெறவுள்ள இச்சர்வதேச அழகுராணிப் போட்டியை நடத்துவதுக்கு ஒரு தெற்காசிய நாடு தெரிவு செய்யப்பட்டிருப்பது கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதல் தடவையாகும்.   

Natures Only நிறுவனம் “உடல்நலத்துக்காக இயற்கையின் செல்வம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நிறுவப்பட்டதாகும். குறித்துரைக்கப்பட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்குப் புதுப்புது வழிகளிலான தீர்வுகளை வழங்குவதுடன் நம்பிக்கையை ஊக்குவிப்பதே அதன் குறிக்கோளாகும். Natures Only நிறுவனம் பலதரப்பட்ட விஞ்ஞானத் துறைகளிலும் உற்பத்தி, ஆராய்ச்சி, அபிவிருத்தி என்பவற்றிலும் இணையற்ற நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது.

ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்குப் பிராந்தியங்களில் தனது செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் இயற்கை உடல்நலப் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வையும் அதன் நன்மைகளையும் அதிகரிப்பதற்கு அது தன்னை அர்ப்பணித்துள்ளது. உலகளாவிய ரிதியில் ஊட்டச்சத்து மருந்துகளின் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தலில் பல தசாப்தகால அனுபவத்தை உடைய Natures Only நிறுவனம், அழகியல் ஊட்டச்சத்துக்களின் அதிகரித்துவரும் தேவையை ஈடுசெய்வதில் ஆழ்ந்த அக்கறை காட்டுகின்றது.  

அழகு மற்றும் அறிவின் மூலம் வெற்றியை ஊக்குவித்து, அதன் பயனாக இலங்கையில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் மகளிருக்கு வலுவூட்டுவதும் பெண்களின் உள்ளார்ந்த, உண்மையான அழகை வெளிக்கொணர்வதும் இன்டர்கொன்டினன்டல் அழகுராணிப் போட்டியின் குறிக்கோளாகும். Biona  வர்த்தகப் பெயரும் இதற்குச் சமானமான குறிக்கோளையே கொண்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X