2025 மே 19, திங்கட்கிழமை

Monami Freighters மஹிந்திரா Blazo Prime Mover ட்ரக்கள் கொள்வனவு

Editorial   / 2020 பெப்ரவரி 18 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்திரா அன்ட் மஹிந்திரா லிமிடெட், இலங்கையின் தனது பங்காளர் Ideal மோட்டர்ஸ் லிமிடெட் உடன் இணைந்து கொள்கலன் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள Monami Freighters (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்துக்கு அண்மையில் மஹிந்திரா Blazo Prime Mover ட்ரக்களை வழங்கியிருந்தது.  

தொழில்நுட்ப ரீதியில் உயர் இந்த மஹிந்திரா Blazo Prime Mover ட்ரக்களை கையளிக்கும் வைபவம் அண்மையில் களனி, வெதமுல்ல பகுதியில் அமைந்துள்ள Ideal மோட்டர்ஸ் கிளையில் இடம்பெற்றது.

2019ஆம் ஆண்டில், Ideal மோட்டர்ஸ் Bs4 தொழில்நுட்பத்தில் அமைந்த மஹிந்திரா Blazo Prime Mover ட்ரக்களை இலங்கையில் அறிமுகம் செய்திருந்தது. இந்த ட்ரக்கின் பராமரிப்பு சேவை இடைவெளி, 90,000 கிலோமீற்றர் அல்லது 1 வருடமாகும்.

மஹிந்திரா Blazo Prime Mover ட்ரக்கில் 7200cc உயர் கொள்ளளவு திறன் கொண்ட என்ஜின் காணப்படுவதுடன், 274 குதிரை வலு கொண்டது. இதில் காணப்படும் Fuel Smart தொழில்நுட்பத்தினூடாக சிறந்த எரிபொருள் சிக்கனம் வழங்கப்படுகின்றது.

ஒவ்வொரு ட்ரக்கும் 6-வேக கியர் கட்டமைப்பைக் கொண்டுள்ளதுடன், ABS, சீராக்கிக் கொள்ளக்கூடிய சாரதி இருக்கை, சாரதி தகவல் கட்டமைப்பு, உறுதியான 8.5 செஸி, கவர்ச்சிகரமான டேஷ் போர்ட், ரேடியல் டயர்கள் போன்றன காணப்படுகின்றன.

சரக்குகள் அனுப்பல், களஞ்சியப்படுத்தல், சரக்கேற்றல் முகவர் கையாளல், போக்குவரத்து போன்ற வியாபாரங்களை Monami Freighters (பிரைவட்) லிமிடெட் முன்னெடுக்கின்றது. மாறிவரும் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் நிறுவனம் தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டுள்ளதுடன், சர்வதேச வியாபார வாய்ப்புகளினூடாக ஒப்பற்ற வினைத்திறனையும் செலவுச் சிக்கனமான கட்டணங்களையும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X