Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வருடாந்தம் தேசிய ஏற்றுமதியாளர் வர்த்தக சம்மேளனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படும், NCE விருதுகள் வழங்கலின் போது, Midas Safety ஸ்ரீலங்கா (இன்டஸ்ரியல் க்ளோதிங்ஸ் என அழைக்கப்படும்) நிறுவனம் இரு விருதுகளை தனதாக்கியிருந்தது. இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக சர்வதேச வியாபாரங்களுக்கான ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, வெளிவிவகார செயற்பாடுகளுக்கான பதில் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுவர் டேவிட் டெலி சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.
Midas Safety ஸ்ரீலங்கா (இன்டஸ்ரியல் க்ளோதிங்) உலகின் முன்னணி பாதுகாப்பு கையுறை OEM உற்பத்தி நிறுவனமாக திகழ்கிறது. இலங்கையில் இந்நிறுவனம் மூன்று உற்பத்தி பகுதிகளைக் கொண்டுள்ளதுடன், பாகிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் 10க்கும் அதிகமான உற்பத்தி பகுதிகளைக் கொண்டுள்ளது. இலங்கையில் Midas Safety இன் இலங்கை உற்பத்தி பகுதிகள் கட்டுநாயக்க, பியகம மற்றும் சீதாவக்க ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள ஏற்றுமதி வலயங்களில் அமைந்துள்ளன. Midas Safety குழுமம் தலை முதல் பாதம் வரையான பாதுகாப்பு மேலங்கிகள் உற்பத்தில் ஈடுபட்டு வருவதுடன், தனது விற்பனை மற்றும் விநியோக வலையமைப்பை மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய பகுதிகளில் கொண்டுள்ளது. கனடா, ஐரோப்பா மற்றும் மலேசியா ஆகிய பகுதிகளில் Midas தனது விற்பனை மற்றும் ஆகிய பகுதிகளில் தனது சந்தைப்படுத்தல் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. தொழில்நுட்ப மற்றும் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தை ஐரோப்பாவிலும் கொண்டுள்ளது.
சீதாவக்க ஏற்றுமதி வலயத்தில் இயங்கி வரும் Midas Safetyஇன் தொழிற்சாலைகளில் ஒன்றான பிரைம் பொலிமர்ஸ், வௌ;வேறு துறைகளுக்கு பொருத்தமான தரம் வாய்ந்த மருத்துவ மற்றும் பாதுகாப்பு கையுறைகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளதுடன், 23ஆவது வருடாந்த NCE ஏற்றுமதியாளர் விருதுகள் வழங்கலில் சிறந்த புத்தாக்க ஏற்றுமதியாளர் தங்க விருதை தனதாக்கியிருந்தது. அத்துடன், சிறந்த ஏற்றுமதியாளருக்கான இரண்டாமிடத்தையும் தனதாக்கியிருந்தது.
கனடாவை தளமாகக் கொண்ட Midas Safety Inc உடன் இணைந்து செயலாற்றும் இந்நிறுவனம் விவசாய பெறுமதி சேர்க்கப்பட்ட மிகப் பெரிய பிரவில் வெள்ளி விருதையும் தனதாக்கியிருந்தது. Midas Safetyஇன் பொது முகாமையாளர் பஷீர் அலி கருத்து தெரிவிக்கையில், 'மூன்று விருதுகளை வென்றுள்ளமை தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கையுறைகள் உற்பத்தித் துறையில் முன்னோடிகளாக திகழ்வது மட்டுமல்லாமல் ஏற்றுமதி சந்தையில் நாம் காண்பித்து வரும் பங்களிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது' என்றார்.
1986ஆம் ஆண்டு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த குழுவொன்றின் மூலமாக ஸ்தாபிக்கப்பட்ட NCE, தனியார் துறையில் ஏற்றுமதியில் ஈடுபடும் இலங்கையின் நிறுவனங்களின் செயற்பாடுகளை கௌரவிக்கும் ஒரே விருதுகள் வழங்கும் நிகழ்வாக அமைந்துள்ளதுடன், நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையிலமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இன்று அதன் அங்கத்துவத்தில், முன்னணி ஏற்றுமதி இலங்களும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 'ஏற்றுமதியாளர்களின் குரல்' எனவும் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. வருடாந்த ஏற்றுமதியாளர் விருதுகளின் மூலமாக இலங்கையின் ஏற்றுமதியாளர்களின் முயற்சிகள் கௌரவிக்கப்படுவதுடன், தமது ஏற்றுமதிகளை விஸ்தரித்துக் கொள்வதற்கு உதவிகளை வழங்குவதாகவும் அமைந்துள்ளது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் பெருமளவான வியாபார சமூகத்தினர், அரச அதிகாரிகள் மற்றும் விசேட விருந்தினர்கள் மற்றும் வெளிநாட்டு ராஜதந்திரிகள் என பலரும் பங்குபற்றுகின்றனர்.
Midas Safety தனது செயற்பாடுகளை 1979 ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தது. பாதுகாப்பு கையுறைகளை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் 35 ஆண்டுகளாக சந்தை முன்னோடியாக திகழ்கிறது. இந்நிறுவனத்தின் உற்பத்திகள் வாகனங்கள், இரசாயனம், அறைகள் தூய்மையாக்கல், சூழல், ஆடைகள், உணவு பதப்படுத்தல், இரும்புகள், பார்மசிகள், பிளாஸ்ரிக், கடதாசி, மருத்துவம் மற்றும் இல்லங்கள் போன்ற வெவ்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 4500க்கும் அதிகமான உள்நாட்டவர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றதுடன், இலங்கையின் பெரும்பாலான இளைஞர்களின் மனங்கவர்ந்த தொழில் வழங்குநராகவும் Midas திகழ்கிறது.
பரந்தளவு பிரத்தியேக பாதுகாப்பு சாதனங்கள் துறையில் பரந்தளவு உற்பத்தித் தெரிவுகளை Midas Safety கொண்டுள்ளது. சகல உற்பத்தி நிலையங்களும் ISO 9001:2008 தரச்சான்றை பெற்றுள்ளன. சகல உற்பத்திகளும் CE தரத்தை பெற்றுள்ளன. மத்திய கிழக்கு, ஆசிய பசுபிக், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளடங்கலாக Midas Safety இனால், 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
7 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago
19 Sep 2025