2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

NCE விருது வழங்கலில் நோரிடாகேவுக்கு நான்கு விருதுகள்

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 19 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் இடம்பெற்ற மதிப்புமிக்க 'தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளன விருதுகள்' (NCE) நிகழ்வின் போது 'மிகப் பெரிய நிறுவன' பிரிவிலே (கைத்தொழில் துறை) நோரிடாகே லங்கா போர்சலைன் பிரைவேட் லிமிட்டெட் (NLPL) தங்க விருதொன்றை பெற்றுக் கொண்டதன் மூலம், முன்னணி வெற்றியாளர்களுள் ஒரு நிறுவனமாக வெற்றிவாகை சூடிக் கொண்டது.  

'தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாக இந்த விருதை பெற்றுக் கொள்ள எம்மால் இயலுமாகியுள்ளதையிட்டும் அதேபோல், குறிப்பிட்ட விருதுப் பிரிவில் தொடர்ந்தும் உயர் வெற்றியாளராக நிலைத்திருப்பதையிட்டும் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இது ஒரு மிகச் சிறந்த சாதனை என்பதுடன், தலைமை அலுவலகம் மற்றும் மாத்தளையில் உள்ள தொழிற்சாலை ஆகிய இரு இடங்களிலும் பணியாற்றுகின்ற எமது ஊழிய அணியினரை ஊக்கமளிக்கும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. நாம் இன்னும் உயர்ந்த மட்டங்களை அடைவதற்கும், எமது பயணத்தில் மேலும் சிறப்பாக செயலாற்றுவதற்கும் இது தூண்டுகோலாக அமைகின்றது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை' என்று நோரிடாகே லங்கா போர்சலைன் பிரைவேட் லிமிட்டெட் (NLPL) நிறுவனத்தின் பிரதித் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான யொசினரி சிமாயா தெரிவித்தார். 

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற 'தேசிய உற்பத்தித்திறன் விருதுகள்' வழங்கல் நிகழ்வில் 'பெரிய உற்பத்தியாக்கல்' பிரிவின் கீழ் நோரிடாகே லங்கா போர்சலைன் பிரைவேட் லிமிட்டெட்  நிறுவனம் வெள்ளி விருதை பெற்றுக் கொண்டது. இவ் விருது பிரிவில் தங்க விருது வழங்கப்படவில்லை. அதன்படி, ஒட்டுமொத்த வெற்றியாளராகவும் இத் துறையில் அதிகூடிய மதிப்பெண்களை பெற்ற நிறுவனமாகவும் NLPL திகழ்ந்தது. 

சிலோன் செரமிக் கூட்டுத்தாபனம் மற்றும் நூறு வருடங்கள் பழமைவாய்ந்த ஜப்பானின் நோரிடேக் கொம்பனி லிமிட்டெட் ஆகிவற்றின் ஒரு கூட்டு முயற்சிக் கம்பனியாக 1972ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட NLPL ஆனது, இன்று இலங்கையின் முன்னோடி மேசைப் பீங்கான் (போர்சலைன்) பாத்திரங்கள் உற்பத்தி கம்பனியாக முக்கியத்துவமிக்க அந்தஸ்தை பெற்றிருக்கின்றது. 

1972ஆம் ஆண்டில் 150 பேரைக் கொண்ட ஆளணியுடன் தனது தொழிற்பாட்டை ஆரம்பித்த இந்த தொழிற்சாலை கடந்த பல வருடங்களில் 1200 திறனுள்ள தொழிலாளர்களைக் கொண்டதாக வளர்ச்சி அடைந்துள்ளது. இத் தொழிற்சாலையில் பணியாற்றும் அதிகமான தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கு தத்தமது துறைகள் தொடர்பில் ஜப்பானில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 

ஜப்பானிய நிபுணத்துவத்திற்கு மேலதிகமாக, இதனது முகாமைத்துவ நடைமுறைகளுக்கு இலங்கை தர நிறுவகத்திடமிருந்து கிடைக்கப் பெற்ற ISO 9001:2008 தரச் சான்றுபடுத்தல் ஆதரவளிக்கின்ற அதேவேளை, சர்வதேச நன்நெறிமுறைகளுக்கு இணங்கியும் தொழிற்படுகின்றது. மாத்தளையில் அமைந்துள்ள தொழிற்சாலையானது உலகளவில் காணப்படும் மிகப் பெரிய உற்பத்தியாக்கல் வசதிகளுள் ஒன்றாக திகழ்வதுடன், நோரிடாகே (Noritake) வர்த்தக குறியீட்டின் கீழ் உயர்தரமிக்க மேசைப் பாத்திரங்களை உற்பத்தி செய்து வருகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X