Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் வங்கியியல் சாராத நிதித்துறையின் முன்னோடியாக திகழும் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, அவசர நிதித் தீர்வுகளை எதிர்பார்க்கும் வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களின் நலன் கருதி குறுங்கால கடன் திட்டமான Fast Trackஐ மெருகேற்றியுள்ளது. இக் கடன் திட்டம், பீப்பள்ஸ் லீசிங் கம்பனி வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறந்த சேவைகளை வழங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
இந்த Fast Track கடன் திட்டம் என்பது உங்கள் நாளாந்த தொழிற்படும் மூலதனத் தேவைகள் உள்ளடங்கலான நிதித் தேவைகளுக்கு துரித தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
Fast Track கடன் திட்டத்துக்கமைய, துரித கதியில் குறைந்த வட்டி வீதத்துக்கு நிதித் தொகையை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இதன் மூலமாக வியாபார விஸ்தரிப்பு, வியாபாரங்களுக்கு அவசியமான இருப்புகளை கொள்வனவு செய்தல், வீடுகளில் மாற்றங்கள் அல்லது மற்றுமொரு பகுதியை இணைத்தல், விவசாயத் தேவைகள், காணிகளை கொள்வனவு செய்தல், உயர் கல்வி மற்றும் இதர வியாபார மற்றும் பிரத்தியேக நிதிசார் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
அசையும் அல்லது நிலையான சொத்துக்களை பொறுப்பாக வைத்து, இந்த Fast Track கடனை பெற்றுக் கொள்ளலாம். பொறுப்பு வைக்கப்படும் சொத்தின் பெறுமதியைப் பொறுத்து பெற்றுக் கொள்ளக்கூடிய உயர் தொகை தீர்மானிக்கப்படும். அத்துடன், கடன் பெறுநரின் மீள்செலுத்தும் இயலுமையும் கவனத்தில் கொள்ளப்படும்.
லீசிங் அல்லது பிரத்தியேக கடன் வசதிகளை பெற்றுக் கொள்வதை போலல்லாமல், Fast Track கடன் என்பது, கடன் பெறுநரின் வருமானத்துக்கமைய மாற்றியமைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். மேலும், கடன் பெறுநர் தனது வருமானத்தைப் பொறுத்து, கடனை மீளச் செலுத்தும் காலப்பகுதியையும் நிர்ணயித்துக் கொள்ள முடியும். மொத்தமாக பெற்றுக் கொண்ட தொகையை நிலுவையிலுள்ள வட்டித் தொகையுடன், இரண்டு வருட கடன் காலப்பகுதியினுள் எவ்வித மேலதிக கட்டணங்களுமின்றி முழுமையாக செலுத்தலாம்.
கடன் வசதியானது இரண்டு வருடங்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட போதிலும், கடன் பெறுநர் இந்த காலப்பகுதியை நீடித்துக் கொள்வதற்கான கோரிக்கையை மேற்கொண்டு அதை நீடித்துக் கொள்ள முடியும். நிலுவை கடன் தொகை மீதே வட்டி கணக்கிடப்படும். எனவே, குறித்த மாதமொன்றில் செலுத்த வேண்டிய வட்டி என்பது, அந்த மாதத்துக்குரிய வட்டியாக மட்டுமே அமைந்திருக்கும்.
இந்த Fast Track கடன் திட்டம் தொடர்பில் பீப்பள்ஸ் லீசிங் கம்பனியின் செயற்பாடுகளுக்கான பதில் பொது முகாமையாளர் லயனல் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், 'வியாபாரங்களை பொறுத்தமட்டில் நாளாந்தம் எழும் தொழிற்படும் மூலதன தேவைகள் மற்றும் தனிநபர்களை பொறுத்தமட்டில் தினசரி அவசர நிதித் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த குறுங்காலக் கடன் திட்டம் அமைந்துள்ளது. மக்களின் அவசர நிதித் தேவைகளை கவனத்தில் கொண்டு Fast Track கடன் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தாம் பெற்றுக் கொண்ட கடனை எவ்வித மன உளைச்சல்கள் அல்லது அழுத்தங்களுக்கு ஆளாகாமல் மீளச் செலுத்தக்கூடிய வாய்ப்பை வழங்குவது இந்த கடன் திட்டத்தின் விசேட அம்சமாகும். முழுக் கடன் தொகையை ஆரம்பத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். அல்லது தவணை அடிப்படையில் வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் மீளச் செலுத்தும் திறன் ஆகியவற்றைப் பொறுத்து பெற்றுக் கொள்ளலாம். அத்துடன், வாடிக்கையாளர்களுக்கு தாம் பெற்றுக் கொண்ட கடனை முன்கூட்டியே மீளச் செலுத்தும் வாய்ப்பும் காணப்படுகிறது. இதன் போது அந்நபருக்கு மேலதிக கட்டணங்கள் எதனையும் செலுத்த வேண்டியிருக்காது. Fast Track கடனை ஆகக்குறைந்த ஆவணங்களை சமர்ப்பித்து துரிதமாக பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். தனிநபராக, கூட்டாக அல்லது நிறுவனங்கள் இந்த Fast Track கடன் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கான வட்டி வீதம் நிலையானதாக இருக்கும்' என்றார்.
இலங்கையின் மாபெரும் அரச வங்கியான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாக 1995ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பீப்பள்ஸ் லீசிங் கம்பனி, கடந்த 13 வருடங்களாக சந்தை முன்னோடி எனும் ஸ்தானத்தை தக்க வைத்துள்ளது.
கம்பனியின் உயர் தர கடன் நியமத்துக்காக, Fitch ரேட்டிங் லங்காவினால் AA-(lka) எனும் கடன் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் உயர்ந்த மட்ட தரப்படுத்தலைப் பெற்ற நிதிச் சேவை வழங்குநர் எனும் நிலையை கொண்டுள்ளது. இலங்கையில் இரு சர்வதேச தரப்படுத்தல்களை பெற்ற ஒரே உள்நாட்டு நிதித் தாபனமாக பீப்பள்ஸ் லீசிங் திகழ்கிறது. ibrands 360 - World Consulting & Research Corporation இனால் 2012/13 காலப்பகுதியில் ஆசியாவின் மிகவும் நம்பத்தகுந்த வர்த்தக நாமங்களில் ஒன்றாக கௌரவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையில் மிகவும் நன்மதிப்பைப் பெற்ற வங்கிசாராத நிதிசார் நிறுவனம் எனும் கௌரவிப்பையும் LMD/ நீல்சன் வழங்கியுள்ளது.
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் விசேட நிதிச் சேவைகளில், லீசிங், நிலையான வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், பிரத்தியேக மற்றும் வர்த்தக கடன்கள் மற்றும் இஸ்லாமிய நிதிச் சேவைகள் போன்றன அடங்குகின்றன. இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் லிமிடட், பீப்பள்ஸ் மைக்ரோ-ஃபினான்ஸ் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் புரொபர்டி டிவலப்மன்ட் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் ஃப்லீட் மனேஜ்மன்ட் லிமிடட் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் ஹவ்லொக் புரொப்பர்டீஸ் லிமிடெட் ஆகியன அடங்கியுள்ளன.
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் பரந்தளவு நிதிசார் சேவைகளை வழங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு சகல சேவைகளையும் இலகுவான முறையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.
20 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago