2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

Perfetti Van Melle அறிமுகம் செய்யும் Alpenliebe Creamfills’

Gavitha   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனிப்புப்பண்டங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள Perfetti Van Melle ஸ்ரீ லங்கா, Alpenliebe Creamfills தெரிவுகளை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் பரந்த இனிப்புப்பண்டங்கள் தெரிவுகளில் புதிய உள்ளடக்கமாக இது அமைந்துள்ளது. வெள்ளவத்தை, Hotel Sapphire நடைபெற்ற வைபவமொன்றில் இந்த தயாரிப்பு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், நிறுவனத்தின் வியாபார பங்காளர்கள், விநியோகஸ்த்தர்கள், விற்பனை அதிகாரிகள், கம்பனி பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர். சீதுவ பகுதியில் அமைந்துள்ள நவீன வசதிகளுடன் அமைந்த தொழிற்சாலையில் Alpenliebe Creamfills உற்பத்தி செய்யப்படுகின்றன.

மேலும் இந்தத் தொழிற்சாலையில், Center Fresh, Center Fruit, Center Shock, Alpenliebe, Mentos Maxxa, Mentos Sugarfree Gum போன்ற ஏனைய புகழ்பெற்ற இனிப்புப்பண்டங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. உயர் தரம் வாய்ந்த மூலப்பொருட்களைக் கொண்டு Alpenliebe Creamfills   உற்பத்தி செய்யப்படுகின்றன. இலங்கையில் இரு புகழ்பெற்ற சுவைகளான கரமல் மற்றும் கோப்பி போன்றவற்றில் அறிமுகம் செய்யப்படுகின்றன. உள்ளே கிறீமையும், வெளிப்புறம் கடினமானதாகவும் அமைந்திருப்பது இந்த இனிப்புப்பண்டத்தின் விசேட அம்சமாகும்.

இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதலாவது திரவம் நிரப்பப்பட்ட இனிப்புப்பண்டமாக இது அமைந்துள்ளதுடன், 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. Creamfills விசேடமாக அமைந்த pillow பொதியில் உள்ளடக்கப்படுவதால், உற்பத்தி செய்யப்பட்டது முதல் நுகரும் வரை அதே உயர் தரத்தில் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

Perfetti Van Melle ஸ்ரீ லங்கா இலங்கைக்கான முகாமையாளர் சுமிடவா பாசு கருத்துத் தெரிவிக்கையில், 'பல ஆண்டுகளாக அதிகளவானோர் விரும்பும் இனிப்புப்பண்ட வர்த்தக Alpenliebe திகழ்கிறது.  ‘irresistibility" எனும் பிரிவில் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. சகல வயதினர்கள் மத்தியிலும் Alpenliebe சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், 2007 இல் இலங்கையில் Perfetti Van Melle  ஸ்ரீ லங்கா நிறுவப்பட்டது முதல் பல புத்தாக்கமானத் தெரிவுகளை அறிமுகம் செய்த வண்ணமுள்ளது.

இதற்கமைய, Alpenliebe Creamfills என்பது மற்றுமொரு புத்தாக்கமான தெரிவு என்பதுடன், இலங்கையர்களுக்கு உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகளை வழங்க வேண்டும் எனும் எமது அர்ப்பணிப்புக்கான மற்றுமொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது' என்றார்.

Perfetti Van Melle ஸ்ரீ லங்கா விற்பனை பிரிவின் தலைமை அதிகாரி சேசிரி ஹேவகே கருத்துத் தெரிவிக்கையில், Perfetti Van Melle நிறுவனத்தின் பரந்த விநியோக வலையமைப்பின் மூலமாக, தயாரிப்புகளை அனைவரும் இலகுவாக பெற்றுக் கொள்வது உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலமாக அவர்களுக்கு புதிய கிறீம் நிரம்பிய இனிப்புப்பண்டத்தை சுவைத்து மகிழ முடியும். இந்த அறிமுகத்தின் மூலமாக Alpenliebe வர்த்தக நாமத்தை நுகர்வோருக்கு மேலும் நெருக்கமடையச் செய்யக்கூடியதாக இருக்கும் என நாம் நம்புகிறோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X