2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

Prime Group இன் ’Prime Premier’ அறிமுகம்

Freelancer   / 2025 ஒக்டோபர் 03 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

Prime Group, வாடிக்கையாளர்கள் ரியல் எஸ்டேட் உடன் தொடர்புகளை பேணும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், 'Prime Premier' எனும் பிரத்தியேகமான வாடிக்கையாளர் அனுபவ பகுதியை அறிமுகம் செய்துள்ளது.

இல. 226, லேக் டிரைவ், கொழும்பு 08 எனும் முகவரியில் அமைந்துள்ள இந்த வளாகம், அண்மையில், Prime Group இன் தவிசாளர், தலைமை அதிகாரி மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோரினால், சிறப்பு அதிகாரிகள் மற்றும் அதிதிகள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. தனித்துவம், நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர் தன்னிறைவு போன்ற நிறுவனத்தின் உறுதி செய்யப்பட்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் Prime Group இன் வருடாந்தபூர்த்தி கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

இலங்கை ரியல் எஸ்டேட் தொழிற்துறையின் முதலாவது வாடிக்கையாளர் அனுபவப் பகுதியாக Prime Premier அமைந்திருப்பதுடன், இதில் புரட்சிகரமான வாடிக்கையாளர் உறவுபேண் அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது ஒப்பற்ற தொழிற்துறை நியமங்களையும் நிறுவியுள்ளது. மேலும் பிரிவுசார் முன்னேற்றகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதில் குழுமத்தின் தலைமைத்துவத்தை இந்த முன்னோடியான செயற்பாடு வெளிப்படுத்தியுள்ளது.

Prime Group இன் தவிசாளர் பிராஹ்மனகே பிரேமலால் குறிப்பிடுகையில், “எமது மூன்று தசாப்த கால பயணத்தின் அங்கமாக Prime Premier அமைந்திருப்பதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் எந்தளவு முன்னுரிமை அளிக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதாகவும் இது அமைந்துள்ளது. ஆடம்பர ரியல் எஸ்டேட் ஈடுபாட்டில் ஒப்பற்ற அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பாரம்பரிய அமைவிடப் பகுதிகளை விட வேறுபட்டதாக இது அமைந்துள்ளது. பாரம்பரிய சொத்து பரிவர்த்தனைகள் என்பதற்கு அப்பால் சென்று, எமது வாடிக்கையாளர்களுடன் சிறந்த அனுபவங்களை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்திருப்பதுடன், அவர்களின் எதிர்கால எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாகவும் அமைந்துள்ளது.” என்றார்.

பாரம்பரிய அலுவலகங்கள் முதல், சிறந்த அமைவிட தோற்ற அம்சங்களுடன், வாடிக்கையாளர்களுக்கு அமைதியான முறையில், எவ்விதமான அழுத்தங்களுமின்றி, ஆறுதலாக தமக்கு பொருத்தமான இல்லத்தை பார்வையிடும் வசதி இங்கு வழங்கப்படுகிறது. நவீன தொழினுட்ப அம்சங்களை இந்தப் பகுதி கொண்டிருப்பதுடன், தொழிற்துறை நிபுணத்துவத்தைக் கொண்ட அர்ப்பணிப்பான அணியினரும் அடங்கியுள்ளனர். ஒவ்வொரு தொடர்பாடலும் ஆக்கபூர்வமானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்திருக்கும் வகையில் இந்தப் பகுதி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டி நிறைந்த ஆடம்பர சந்தை சூழலில், Prime Group இன் Prime Premier மூலோபாய முதலீடாக அமைந்திருப்பதுடன், தொழிற்துறையின் புத்தாக்க முன்னோடியாகவும் அமைந்துள்ளது. தொழிற்துறையின் சக செயற்பாட்டாளர்களை விட உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதில் பங்களிப்புச் செலுத்தும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. ஒரு கட்டமைப்பாக, இந்த முயற்சி நீடித்த வாடிக்கையாளர் பங்காண்மைகளை வளர்ப்பதற்கும் நிலைபேறான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் அடித்தளத்தை வழங்குகிறது, மேலும் இலங்கையின் மிகவும் நம்பகமான ஆடம்பர ரியல் எஸ்டேட் ஆலோசகராக Prime Group இன் கீர்த்தி நாமத்தை மேம்படுத்தி நம்பிக்கையை உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .