2025 மே 10, சனிக்கிழமை

Prime Residencies மூலம் ‘Tower Amari’ அறிமுகம்

Freelancer   / 2025 மே 05 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

Prime Lands Residencies PLC, தனது Colombo Border திட்டத்தின் மூன்றாவதும், இறுதி அங்கமுமாக “Tower Amari” ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிவித்தலினூடாக, Prime Residencies இன் நகர வசிப்பிட தொகுதி பூர்த்தியடையவுள்ளதுடன், சொகுசான நகரபுற வசிப்பிட நியமங்களை மாற்றியமைக்கும் வகையிலும் அமைந்திருக்கும்.

Tower Amari வெற்றிகரமான அடிக்கல் நாட்டல் மற்றும் திட்டத்தின் முன்னைய கட்டங்களின் நிர்மாண செயற்பாடுகளை தொடர்வதாக அமைந்திருந்தது. Tower Amari க்கான piling பணிகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், இறுதிக்கட்டத்தின் போது, முதலாவது மற்றும் இரண்டாம் கட்ட முன்னைய நிர்மாணங்களான Brielle மற்றும் Cosmos Towers ஆகியவற்றை போல அட்டவணைக்கமைய நிர்மாணிக்கப்படும்.

ரூ. 35 மில்லியனிலிருந்து ஆரம்பிக்கும் 2 மற்றும் 3 படுக்கையறைகளை கொண்ட தொடர்மனைகளை கொண்டதாக இந்தத் திட்டம் அமைந்திருக்கும். கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு புரட்சிகரமான Prime MAX சாத்தியமான திட்டத்தின் பலன்களை அனுபவிக்க முடியும். ரூ. 175,000 எனும் மாதாந்த கொடுப்பனவில் கனவு இல்லத்தை பெற்றுக் கொள்வதற்கும், சொகுசான வசிப்பிடத்தை அணுகுவதற்கும் வாய்ப்பை வழங்கும்.

Tower Amari இன் அறிமுகத்தினூடாக, சொகுசு, நிலைபேறாண்மை மற்றும் சமூகம் ஆகியவற்றுடனான அதிசிறந்த வசிப்பிட பகுதிகளை ஏற்படுத்தும் Prime Residencies இன் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விலைமதிப்பு நிறைந்த திட்டத்தின் இறுதி அங்கமாக அமைந்துள்ள Tower Amari இன் பிரத்தியேகமான வடிவமைப்பு மற்றும் சூழல் பொறுப்புணர்வு ஆகியன, இலங்கையில் சொகுசான வசிப்பிடத்துக்கான வரைவிலக்கணமாக அமைந்திருக்கும்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் பிரதான முக்கிய பகுதிகளான போர்ட் சிற்றி மற்றும் தாமரை கோபுரம் ஆகியவற்றை இலகுவாக சென்றடையக்கூடிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் Colombo Border திட்டம் அமைந்துள்ளது. பிரதேசத்தில் காணப்படும் அதிகளவு நாடப்படும் வதிவிட பகுதியாக தன்னை கட்டியெழுப்பியுள்ளது. 6.5 ஏக்கர் நிலப்பகுதியில் அமையப்பெறும் இந்தத் திட்டம் நிலைபேறான விருத்தியை காண்பிப்பதுடன், 25% ஆன காணிப்பகுதி மாத்திரம் நிர்மாணத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 75% ஆன பகுதி திறந்த வெளிகளாக, ஜொகிங் பகுதிகள், கஃபேகள், சந்திப்பு நிலையங்கள், நிகழ்வு மண்டபங்கள், நீச்சல் தடாகங்கள் மற்றும் இதர வசதிகள் பலதை கொண்டிருக்கும்.

சூழலுக்கு நட்பான அலங்கார வடிவமைப்புகளை பின்பற்றுவதனூடாக, திட்டத்தின் நிலைபேறாண்மைக்கான அர்ப்பணிப்பை Tower Amari பேணும். பொதுவான பகுதிகள் மற்றும் வாகன தரிப்பிட பகுதிகளுக்கு சோலர் வலுவில் இயங்கும் ஒளியூட்டலை கொண்டிருக்கும். கழிவு நீர் முகாமைத்துவ கட்டமைப்புகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு ஆற்றல் வசதிகள் போன்றனவும் அடங்கியிருக்கும்.

அலங்கார வடிவமைப்பில் இயற்கையாகவே காற்றோட்டப் பகுதிகள் அடங்கியிருப்பதுடன், பல பகுதிகளில் இயந்திரவியலை பின்பற்ற காற்றோட்டத்தை வழங்குவதற்கான தேவை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. நிலைபேறான போக்குவரத்து தெரிவுகளில் நாட்டம் அதிகரித்து வரும் நிலையில், தூர நோக்கில், மின் வாகன சார்ஜ் செய்யும் உட்கட்டமைப்பு வசதிகளும் அடங்கியிருக்கும்.

The Colombo Border திட்டத்தின் பூர்த்தி செய்யப்படும் காலஎல்லை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், Tower Brielle மற்றும் Tower Cosmos ஆகியன 2027 இல் பூர்த்தி செய்யப்படும். புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள Tower Amari இன் நிர்மாணப் பணிகள் 2028 இல் பூர்த்தி செய்யப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X