2024 மே 02, வியாழக்கிழமை

Radisson ஹோட்டல்களுக்கான முகாமையாளராக கிறிஸ்டொபர் குவாட்ரோஸ் நியமனம்

Freelancer   / 2024 ஏப்ரல் 05 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

Radisson Hotels Sri Lanka மற்றும் ஹோட்டலின் முகாமைத்துவ நிறுவனமான La Vie Hotels & Resorts உடன் இணைந்து இலங்கையிலுள்ள மூன்று Radisson ஹோட்டல்களுக்கு Cluster பொது முகாமையாளராக கிறிஸ்டொபர் குவாட்ரோஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. Radisson Hotel Colombo, Radisson Hotel Kandy மற்றும் Radisson Blu Resort Galle ஆகியவற்றுக்கு 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சர்வதேச முகாமைத்துவம் மற்றும் விருந்தோம்பல் அனுபவம் கொண்ட கிறிஸ்டொபர் நியமிக்கப்பட்டிருப்பதால், அவர் துறைக்கு சிறந்த சேவையை வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Park Hyatt Maldivesஇன் பொது முகாமையாளராக அண்மையில் பணியாற்றிய கிறிஸ்டோபர், ஹோட்டலுக்கு வருகை தரும் விருந்தினர் திருப்தி மற்றும் செயல்பாட்டுத் திறனில் சிறந்து விளங்கும் புதிய தரநிலைகளுக்கு ஹோட்டலை வழிநடத்தினார். அதற்கு முன்னர் அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள JA Resorts & Hotels ஹோட்டல்களில் Cluster ஹோட்டல் முகாமையாளராக பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மையின் அடிப்படையில் சொத்துக்களை அவர் சிறப்பாக வழிநடத்தி அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார். நிறைவுற்ற சந்தைகளில் அதிக வருமானத்தை ஈட்டுவது தொடக்கம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மலேசியா, இந்தோனேஷியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 04 இற்கும் மேற்பட்ட நாடுகளில் வெற்றிகரமான முன்-திறப்புகளைக் கையாள்வது வரை அவர் தலைமைத்துவம் வழங்கினார். அவரது அனுபவமானது இலங்கையிலுள்ள மூன்று 03 Radisson ஹோட்டல்களும் சிறப்பாக செயற்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Cluster  பொது முகாமையாளர் என்ற புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள கிறிஸ்டொபர் தனது விரிவான தொழில் பின்னணியை பயன்படுத்தி இலங்கையிலுள்ள Radisson   ஹோட்டல்களின் செயல்திறனை மேம்படுத்துவதோடு, 3 ஹோட்டல்களிலும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்களையும் கண்காணித்து நிர்வகிப்பார். தனது நியமனம் குறித்து கிறிஸ்டொபர் கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையில் இந்த மூன்று சிறந்த சொத்துக்களையும் பராமரித்து முன்னெடுத்துச் செல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே அவர்களது வளர்ந்து வரும் நவீன தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் செயற்பட வேண்டும்' என குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .