Editorial / 2020 மே 13 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சுற்றுலாத் துறைக்கு சேவைகளை வழங்கும் சுமார் 150,000 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு கோரிக்கை ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் முகவர் அமைப்புகளுடன் பதிவு செய்யப்படாத நாட்டின் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய சுய தொழிலில் ஈடுபடும் நபர்களுக்கு தற்போது நிலவும் சூழலில் நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கும் என சுற்றுலா மற்றும் தொழிற்துறை சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம். ஜவ்வர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் பிரதேச செயலகங்களினூடாக, இவ்வாறு சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் கொவிட்-19 தொற்றுப் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம், சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸ் ஆகிய தரப்பினரின் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் மிகவும் வரவேற்கத்தக்கது.
இந்தத் தொற்றுப் பரவல் காரணமாக நாட்டின் சுற்றுலாத் துறை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறை அண்மைக் காலமாக பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்தது. குறிப்பாக 30 வருட கால யுத்தம், சுனாமி அனர்த்தம், சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்களின் மீது பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் தற்போது கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளமை என இந்தத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்தத் துறையில் தமது வாழ்வாதாரத்தை கொண்டுள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையை கவனத்தில் கொண்டு குறுங்கால மற்றும் நீண்ட கால அடிப்படையிலான சுற்றுலாத்துறை நிவாரணப் பொதியை அறிமுகம் செய்யுமாறு அரசாங்கத்திடம், சுற்றுலா மற்றும் தொழிற்துறை சம்மேளனம் கோரிக்கைவிடுக்கின்றது. பிரயாணத்துறையைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை நாம் இணைத்துள்ளோம்.
பயண வழிகாட்டிகள், எகோ சுற்றுலா வழிகாட்டல்கள், கைவினைப்பொருட்கள் விற்பனையாளர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள், சுற்றுலா சாரதிகள், படகு செலுத்துவோர், அலைச்சறுக்கலில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டிகள், தினசரி சுயதொழிலில் ஈடுபடும் பணியாளர்கள், சுற்றுலா சேவை வழங்குநர்கள் மற்றும் கரையோர அலைச்சறுக்கல் வழிகாட்டிகள் என சுமார் 150,000 பேர் தற்போதைய சூழலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமது தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர். அடுத்த ஆறு மாதங்களுக்கு இவர்களின் வருமானமீட்டல் என்பது கேள்விக்குறியாக அமைந்திருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆகக்குறைந்தது 25000 ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு செலுத்தப்பட வேண்டும் என நாம் கோரிக்கைவிடுக்கின்றோம்.
ஹோட்டல்கள் மற்றும் இதர சுற்றுலா வளாகங்களுக்கு இரண்டு மாத காலப்பகுதிக்கு நீர் மற்றும் மின்சார கட்டணங்களை அறவிடாமல் நிவாரண உதவியளிக்குமாறு கோருகின்றோம்.
நாட்டில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் சகல செயற்பாடுகளுக்கும் சுற்றுலா மற்றும் தொழிற்துறை சம்மேளனம் முழு ஆதரவையும் வழங்குவதுடன், நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் சுற்றுலாத்துறையை செயல்நிலையில் பேணுவதற்கு நிதி அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சிடமிருந்து மேற்படி கோரிக்கை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை முன்னெடுப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago