Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 13 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL இனால் Rush Lanka Group உடன் மூலோபாய பங்காண்மை கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதனூடாக, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நிர்மாகணிக்கப்படும் சொகுசு தொடர்மனைத் திட்டங்களில் SLT-MOBITEL ஃபைபர் இணைப்பு தீர்வுகளை பெற்றுக் கொடுத்து, சகல வதிவோரின் டிஜிட்டல் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த உடன்படிக்கையில் SLT இன் நுகர்வோர் வணிக பிரிவின் பிரதம வணிக அதிகாரி இமந்த விஜேகோன் மற்றும் Rush Lanka Group இன் நிர்மாணப் பணிப்பாளர் சயிட் ஆரிப் ஆகியோர் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வில், இரு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
இந்தப் பங்காண்மையின் கீழ், Rush Lanka developments இன் ஐந்து நிர்மாணத்திட்டங்களான கல்கிசையிலுள்ள Street Rush Residencies, Rush Court 4, தெஹிவளையிலுள்ள Rush Tower 2, Rush Metropolis மற்றும் கொழும்பு 14 இலுள்ள Rush Court 5 ஆகியவற்றுக்கான பிரத்தியேக டிஜிட்டல் சேவை வழங்குனராக SLT-MOBITEL இயங்கும். கைகோர்ப்பினூடாக, வதிவோருக்கு உயர் ஃபைபர் இணைப்பு வேகங்களை அனுபவிக்க முடியும் என்பதுடன், நவீன ஸ்மார்ட் இல்லங்களில் ஒப்பற்ற டிஜிட்டல் அனுபவங்களைப் பெறக்கூடியதாக இருக்கும். Rush Lanka Group உடனான பங்காண்மையானது, அல்ட்ரா வேக, தங்கியிருக்கக்கூடிய இணைப்புத் தீர்வுகளை வதிவிட அபிவிருத்தித் திட்டங்களுக்கு பெற்றுக் கொடுக்கும் SLT-MOBITEL இன் அர்ப்பணிப்புடன் பொருந்துவதாக அமைந்துள்ளது. சொகுசான தொடர்மனைகளுக்கு பிரத்தியேகமான ஃபைபர் இணைப்பை பெற்றுக் கொடுப்பதனூடாக, SLT-MOBITEL இனால் வசிப்போருக்கு உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் சேவைகளை பெற்றுக் கொள்ளும் வசதி வழங்கப்படுவதுடன், Rush Lanka Group இனால் உறுதியளிக்கப்படும் வாழிட அனுபவ உறுதி மொழியை நிறைவேற்றுவதாகவும் அமைந்திருக்கும்.
உயர் ஃபைபர் தொழினுட்பத்தினூடாக வலுவூட்டப்பட்டுள்ள SLT-MOBITEL வலையமைப்பினால், வதிவிடங்களுக்கு ஒபற்ற வினைத்திறன் வாய்ந்த டிஜிட்டல் செயற்பாட்டு அனுபவங்கள் சேர்க்கப்படும். SLT-MOBITEL Fibre backbone இனால் தடங்கலில்லாத அனுபவங்கள் சேர்க்கப்படும். இதில் வதிவோருக்கு ஒன்லைன் கேமிங், மெய்நிகர் வகுப்புகளில் பங்கேற்றல், வெளியிடங்களிலிருந்து பணியாற்றல் அல்லது high-definition விநோத அம்சங்களை ஸ்ட்ரீம் செய்தல் போன்ற அனைத்தும் அடங்கியிருக்கும். SLT-MOBITEL Fibre இனால் சகல தொடர்மனை பாவனையாளர்களின் வாழ்க்கை முறைகளும் மாற்றியமைக்கப்படுவதுடன், பெருமளவு சௌகரியம் மற்றும் உயர்மட்ட வாழ்க்கைத் தரம் ஆகியன சேர்க்கப்படும்.
12 minute ago
34 minute ago
44 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
34 minute ago
44 minute ago
45 minute ago