Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 டிசெம்பர் 11 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மருந்துப்பொருள் வர்த்தக துறைசார் சம்மேளனத்தின் (SLCPI) 54ஆவது வருடாந்த பொதுக் கூட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சுகாதார மற்றும் சுதேவ மருத்துவ சேவைகள் அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன பிரதம அதிதியாகவும், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் லால் ஜயகொடி கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டார். 'ஏற்படும் அகால மரணங்களை தடுக்கும் சிறந்த மருந்துகள்;' என்ற தொனிப் பொருளில் விருந்தினராகக் கலந்து கொண்ட பேராசிரியர் அசித்த டி சில்வா உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன, தான் சுகாதார அமைச்சராக பொறுப்பேற்றது முதல் இலங்கை மருந்துப் பொருள் வர்த்தக துறைசார் சம்மேளனத்துடன் சுமுகமாகவும் பரஸ்பர மரியாதையுடனும் உறவுகளைப் பேணி வருவதாக தெரிவித்தார். தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு SLCPI ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் அதனை எதிர்காலத்திலும் தொடரந்து வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இதன்போது மற்றுமொரு விடயத்தைப் பற்றி உரையாற்றிய அமைச்சர், allopathic நடைமுறையை எமது பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்துடன் இணைத்துக் கொள்வதன் ஊடாக பல நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இது எமது சமூகத்திற்கு மிகவும் அத்தியாவசியமானதாகவும் உள்ளது. மனிதவர்க்கத்திற்கு ஆயுர்வேத மருத்துவத்தினால் அற்புதகரமான சுகமளிப்பு வழங்கப்படுவதனால் இதனை நடைமுறைப்படுத்துவதை எளிதாக்க ஆணைக்குழுவொன்றை அமைக்கவுள்ளதாக அவர் கூறினார், மேலும் ஆயுர்வேத மற்றும் ஆங்கில மருத்துவமுறைகளை இணைத்து வேகமாக நோயளர்களை சுகப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
விருந்தினர் பேச்சாளர் பேராசிரியர் அசித்த டி சில்வா கருத்து தெரிவிக்கiயில், உயிர் காக்கும் மருந்துகள் ஊடாக மக்கள் பெரும் நன்மைகளை பெற்றுள்ளதாக தெரிவித்தார். 'உதாரணமாக உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் Statins போன்ற மருந்துகளினால் கடந்த தசாப்த காலத்தில் மனித இறப்புக்கள் தீவிரமாக குறைவடைந்துள்ளது. மருந்து வகைகள் மனித வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்துள்ளது என்பதை நிச்சயமாகக் கூறமுடியும். இதேபோல் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட விரிவான மருத்துவ ஆராய்ச்சிகளையும் குறிப்பிடலாம்.' எந்த நாடு என்ற முக்கியம் இல்லை ஆராய்ச்சி முன்னேற்றம் அவ்வப்போது வெளிப்படும்போது அந்த மருத்துவ கண்டுபிடிப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு எவருக்கும் உரிமையுண்டு. புற்று நோய் தொடர்பான ஆராய்ச்சியானது உலகம் முழுவதிலும் உள்ள எண்ணற்ற மக்களுக்கு பயனளித்துள்ளமை இந்த சாதனைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் லால் ஜயகொடி கருத்துத் தெரிவிக்கையில், இதுவரை காலமும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மிகுந்த ஒத்துழைப்புக்களை வழங்கிய இலங்கை மருந்துப் பொருள் வர்த்தக துறைசார் சம்மேளனத்திற்கு எனது நன்றிகள். தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆயைணத்திற்கு மருந்தகம் மற்றும் போதுமான அலுவலக மற்றும் சேமிப்பு இடபற்றாக்குறைகள் நிலவுவதனால் பல சிரமங்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார். எனினும் எவ்வாறான சிரமங்களை நாம் எதிர்நோக்குகின்றபோதிலும் அந்த எல்லா நேரங்களில் இலங்கை மருந்துப் பொருள் வர்த்தக துறைசார் சம்மேளனம் மிகச்சிறந்த சேவையினை வழங்க முயற்சி செய்தது எனவும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை மருந்துப் பொருள் வர்த்தக துறைசார் சம்மேளனத்தின் தலைவர் கேர்னல் சந்திரா ஜயரத்ன, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திற்குத் தேவையான மருந்தக, பணிநிலைகளை மேற்கொள்வதற்கு திறைசேரியில் இருந்து நிதி ஒதுக்கித் தருமாறு பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சரிடம், வேண்டுகோள் விடுத்தார். மருந்தக நிறுவனங்களுக்கு இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், இதனை விரைவாக மதிப்பீடு செய்து பதிவு செய்த ஆவணங்களாக வழங்க வேண்டும். மேலும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் வேலைத் திட்டம் மற்றும் சேமிப்பு இடம் ஆகியவற்றுக்கு உள்ள அதிகமான தேவை குறித்தும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
என்றபோதிலும், SLCPIஐ நாட்டின் சுகாதாரதுறையின் ஒரு பங்காளனாக அங்கீகரிக்க NMRA மறுத்தமை பெரும் அதிருப்திப்தியளித்துள்ளது. உண்மையில் SLCPI மாத்திரமே இந்த துறையில் பெரிய பங்குதாரராக உள்ளதாக வலியுறுத்திய அவர், கடந்த பல தசாப்தங்களாக ஆசியா முழுவதிலும் தரமான மருந்துகளை வழங்கியதன் மூலம் இலங்கையை ஆரோக்கியமான தேசம் என்ற நாடுகள் பட்டியலில் சேர்க்க உதவியது. அத்துடன் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் உருவாகுவதற்கு தற்போதுள்ள மருந்தக நிறுவனங்கள் காரணமாக இருந்துள்ளன. SLCPIஇன் தலைவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், NMRAஇன் செயற்பாடானது மருந்தகத் துறையின் செயற்பாடுகளை அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிதாக அமைக்கப்பட்ட SLCPIஇன் செயற்குழுவின் ஊடாக வர்த்தக செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தக் கூடிய பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதனை அந்தந்த கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சுடனும் இணைந்து தீர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago