2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

SLIIT பட்டமளிப்பு விழா 2020 உடன் பட்டதாரிகளின் புதிய வாழ்க்கை ஆரம்பம்

Editorial   / 2020 ஏப்ரல் 15 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னணி உயர் கல்விச் சேவைகளை வழங்கும் கல்வியகமான SLIIT, தனது 2020 பட்டமளிப்பு விழாவை, மாலபேயிலுள்ள SLIIT கம்பஸ் வளாகத்தில் முன்னெடுத்திருந்தது. 

நான்கு தினங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பட்டமளிப்பு விழாவின் போது, 1,200 க்கும் அதிகமான பட்டதாரிகளுக்கு இளமானி, மாஸ்டர்ஸ், பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வின் போது பிரதம அதிதிகளாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவின் அதிகாரி கலாநிதி. சுனில் ஜயந்த நவரட்ன, ICTA தவிசாளர் ஜயந்த டி சில்வா, காகில்ஸ் வங்கி முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ராஜேந்திர தியாகராஜா, பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் கபில பெரேரா, பிரதி உப வேந்தர் (வெளியுறவுகள்), இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் அங்கத்தவர் நிஹால் பொன்சேகா, பேராசிரியர். அஷ்ரஃவ் ஜாவெய்ட், பெட்ஃபேர்ட்ஷயர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் செத் குனின், கேர்டின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோன் கோர்டெரி ஆகியோர் கலந்து கொண்டனர். 

பின்வரும் கற்கைகளுக்கான பட்டங்களை SLIIT வழங்கியிருந்தது: BBA(Hons) Degree, BSc Degree in Information Technology, BSc Engineering (Hons) in Civil Engineering, BSc Engineering(Hons) in Electrical & Electronic Engineering, BSc Engineering(Hons) in Mechanical Engineering, BSc Engineering(Hons) in Mechanical Engineering (Mechatronics), BSc(Hons) Degree in Information Technology, MSc in Enterprise and Application Development, MSc in Information Management, MSc in Information System, MSc in Information Technology, MSc in Information Technology (Cyber Security), Master in Philosophy மற்றும் Postgraduate Diploma in Information Technology.

இந்நிகழ்வில் ஒன்றுகூடியிருந்தவர்கள் மத்தியில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் உப-வேந்தர் பேராசிரியர். கபில பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்,

“அறிவு மற்றும் திறன்களை பெற்றுக் கொள்வதில் பட்டம் பெறல் என்பது மிகவும் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதுடன், கொண்டாடப்பட வேண்டிய தருணமாகவும் அமைந்துள்ளது. உங்கள் வாழ்க்கையில் சமூகம் ஏற்படுத்தியிருந்த பங்களிப்பு தொடர்பில் எப்போதும் கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் எதிர்நோக்கியிருந்த ஒவ்வொரு தருணமும் பயில்வதற்கு உங்களுக்கு வாய்ப்பை வழங்கியிருந்தது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். பட்டதாரிகள் எனும் வகையில், எதிர்காலத்தில் வெவ்வேறு நிலைகளில் நீங்கள் பணியாற்றுவீர்கள். நீங்கள் கொண்டிருக்கக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதமாக கல்வி அமைந்துள்ளது” என்றார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் மற்றும் டிப்ளோமாக்களை வழங்கிய பல்கலைக்கழகங்களில் பெட்ஃபேர்ட்ஷயர் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்டிருந்த BA (Hons) Business Administration, BSc (Hons) Computer Science and Software Engineering மற்றும் BSc (Hons) Computer Networking போன்றன அடங்கியிருந்ததுடன், 

அவுஸ்திரேலியாவின் கேர்டின் யுனிவர்சிட்டியினால் வழங்கப்படும் Bachelor of Computing (Software Engineering), Bachelor of Engineering (Hons) Civil and Construction Engineering, Bachelor of Engineering (Hons) Electrical & Electronic Engineering, Bachelor of Engineering (Hons) Electrical Power Engineering, Bachelor of Engineering (Hons) Mechanical Engineering, Bachelor of Information Technology and Bachelor of Science (Computer Systems and Networking), ஐக்கிய இராஜ்ஜியத்தின் லிவர்பூல் ஜோன் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் Bachelor of Science (Hons) Architecture, BBA (Hons) Business Administration -Top Up, BEng (Hons) Electronic and Electrical Engineering, BSc (Hons) Quantity Surveying, BSc (Hons) Quantity Surveying - Top Up and MSc in Project management போன்றன வழங்கப்பட்டிருந்தன.

வங்கியியல் துறையில் நிபுணரான அந்தனி நிஹால் ஃபொன்சேகா கருத்துத் தெரிவிக்கையில்,

“பட்டம் பெற்றுள்ள மாணவர்களின் சாதனைகளை கொண்டாட நாம் இன்று இங்கு ஒன்றுகூடியுள்ளோம். பட்டம் ஒன்றை பெற்றுக் கொண்டுள்ளதன் மூலம் உங்களுக்கு எல்லாம் தெரியும் என பொருள்படாது. உங்கள் கல்வி அறிவை பயன்படுத்தி, நீங்கள் தெரிவு செய்யும் துறையில் மேலும் அறிவை மேம்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனும் கனவுகளை கொண்டுள்ளீர்கள். எவராலும் தாமாக தமது வாழ்க்கையில் இயங்கிவிட முடியாது. வாழ்க்கையில் ஏனையவர்களின் தலையீடுகளும் இருக்கும், அவற்றையும் நீங்கள் கையாள வேண்டும். நேர்மையாக இருங்கள், அனைவரையும் வரவேற்று கருமமாற்றுங்கள். பணியாற்றும் வாழ்க்கையில் நாம் தவறுகை மேற்கொள்வோம். அவற்றுக்கான உரிமையேற்று, அதிலிருந்து பயில வேண்டும் என்பது முக்கியமானதாகும்” என்றார். 

பெட்ஃபேர்ட்ஷயர் பல்கலைக்கழகத்தினால் பட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. இதில், BA (Hons) Business Administration, BSc (Hons) Computer Science and Software Engineering மற்றும் BSc (Hons) Computer Networking போன்றன அடங்கியிருந்தன.

புகழ்பெற்ற கடல் பொறியியலாளரும் நிபுணத்துவ முகாமையாளருமான பொறியியலாளர் மங்கள பி.பி. யாபா கருத்துத் தெரிவிக்கையில், “பணியாற்றும் உலகுக்கு நீங்கள் காலடி எடுத்து வைத்துள்ளமைக்கு உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். உயர் கல்வி நிலையத்தில் இணைந்து கொள்வதனூடாக திறன்களை பெற்றுக் கொள்வது, தொழில்நுட்ப மற்றும் சமூகம் தொடர்பில் அர்த்தமுள்ள வகையில் செயலாற்றுவது போன்றவற்றை ஏற்படுத்திக் கொள்ள முடியும். எதிர்காலத்தில் நீங்கள் சவால்களை எதிர்கொள்ளக்கூடும். தடைகளுக்கு முகங்கொடுக்கக்கூடும். நீங்கள் கடந்து வந்த பாதையை மறந்துவிட வேண்டாம்” என்றார்.

இந்த பட்டமளிப்பு நிகழ்வில் அவுஸ்திரேலியாவின் கேர்டின் பல்கலைக்கழகத்தின் பிரதி உப வேந்தர் பேராசிரியர். செத் குனின் கருத்துத் தெரிவிக்கையில்,

“உங்கள் கடுமையான உழைப்புக்கு இன்று பலன் கிடைத்துள்ளது. பலநாடுகளில், இது ஆரம்பமாக கருதப்படுகின்றது. சகல மாணவர்களும், தமது கல்விப் பயணத்தை தொடர்ந்துள்ளனர் என்பதை உறுதி செய்வதாக இது அமைந்துள்ளது. நீங்கள் இனி உலகில் அடுத்த நிலைக்கு உங்களை கொண்டு செல்லவுள்ளீர்கள். இது முக்கியத்துவம் வாய்ந்த ஆரம்பமாகும். உங்கள் எதிர்காலம் பற்றி நீங்கள் சிந்தித்து, அதற்கு நீங்கள் பெற்றுள்ள கல்வி அறிவை பயன்படுத்துமாறு அறிவுறுத்துகின்றேன்” என்றார்.

கணினி, வியாபாரம், பொறியியல், கட்டடக்கலை மற்றும் அளவையியல் போன்றவற்றில் இந்த பட்டதாரிகளுக்கு பட்டமளிக்கப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X